vaathi movie grand audio launch special video update
தென்னிந்திய திரையுலகில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் தனுஷ். இவர் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகும் கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதற்கிடையில் தனுஷ் தெலுங்கில் வெங்கி அட்லூரி இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘வாத்தி’ திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
தமிழில் ‘வாத்தி’ என்றும் தெலுங்கில் ‘சார்’ என்றும் நேரடியாக வெளியாக இருக்கும் இப்படம் வரும் பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி வெளியாக உள்ளது. செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் வழங்க இருக்கும் இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க நடிகை சம்யுக்தா மேனன் கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
அண்மையில் இப்படத்திலிருந்து வெளியான இரண்டு பாடல்களும், போஸ்டர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்ததை தொடர்ந்து இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் உள்ள சாய்ராம் கல்லூரியில் வரும் பிப்ரவரி 4 ஆம் தேதி பிரம்மாண்டமாக நடைபெற இருப்பதாக தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வந்தது. தற்போது இதனை இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்ரா என்டர்டைன்மென்ட் நிறுவனம் ஸ்பெஷல் வீடியோவுடன் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது. இதனால் உற்சாகமடைந்த தனுஷ் ரசிகர்கள் இதனை வைரலாக்கி வருகின்றனர்.
AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…
பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…
சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…
தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…
சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…