படக்குழுவில் ஒருவருக்கு கொரோனா…. ஐஸ்வர்யா ராஜேஷ் படப்பிடிப்பு நிறுத்தம்

நாடு முழுவதும் கொரோனா ஊரடங்கை தளர்த்தி சினிமா மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளை குறைந்த எண்ணிக்கையில் ஆட்களை வைத்து நடத்திக்கொள்ள அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதையடுத்து தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி படப்பிடிப்புகள் தொடங்கி உள்ளன.

இந்த படப்பிடிப்புகளிலும் கொரோனா பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. தெலுங்கில் ஐஸ்வர்யா ராஜேஷ், நானி, ரிதுவர்மா ஆகியோர் நடிக்கும் டக் ஜெகதீஷ் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்து வந்தது.

இந்த படக்குழுவை சேர்ந்த ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதையடுத்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது. நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்ட அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

அவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட உள்ளது. இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பாஹர்வாடி என்ற இந்தி டி.வி. தொடர் படப்பிடிப்பில் பங்கேற்ற ஒருவர் கொரோனா தொற்றில் பலியாகி உள்ளார்.

மேலும் படப்பிடிப்பில் பங்கேற்ற 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Suresh

Recent Posts

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

10 hours ago

முத்துவை மன்னிப்பு கேட்க சொன்ன சீதா, பதிலடி கொடுத்த மீனா, வெளியான சிறகடிக்க ஆசை ப்ரோமோ.!!

அருண் சஸ்பெண்ட் செய்யப்பட, சீதா முத்து மீனா மீது கோபமாக பேசுகிறார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

10 hours ago

வாட்டர் மெலன் ஸ்டார் குறித்து பேசிய வினோத்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

10 hours ago

டியூட் படத்தின் 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வாங்க பார்க்கலாம்.!!

டியூட் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர என இரண்டிலும் கலக்கி…

11 hours ago

பைசன் : 2 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?வாங்க பார்க்கலாம்.!!

பைசன் படத்தின் 2 நாள் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர்…

12 hours ago

எலிமினேஷன் கார்டுடன் வந்த விஜய் சேதுபதி.. வெளியேறப் போவது யார்? வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

13 hours ago