ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்

‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல்’

விஜய்யின் கடைசிப்படமாக உருவாகியிருக்கும் ஜனநாயகன் படம் வருகிற 9-ந்தேதி வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

தற்போது இப்படத்துக்கு திரையரங்குகள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதற்கு விநியோகஸ்தர்கள் தரப்பில் கேட்கப்படும் அதிகமான பங்குத் தொகையே காரணம் என கூறப்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியம் தெரிவிக்கையில், ‘ஜனநாயகன் படத்துக்கு 60 சதவீதம் திரையரங்குகளும், ‘பராசக்தி’ படத்துக்கு 40 சதவீதம் திரையரங்குகளும் ஒதுக்குவதாக இருந்தது. ஆனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு 75 முதல் 80 சதவீதம் வரை பங்குத் தொகை கேட்கிறார்கள். இப்படி இருந்தால் எப்படி திரையரங்குகள் நடத்தி சம்பளம் கொடுப்பது?

70 சதவீதம் வரை பங்குத் தொகை கொடுக்க தயாராக இருக்கிறோம். ஆனால், 75 சதவீதம் வரை கேட்கிறார்கள். திருநெல்வேலியில் 80 சதவீதம் பங்குத் தொகை வேண்டும் என்கிறார்கள். திரையரங்க உரிமையாளர்களுக்கு ஒன்றுமே கிடைக்காது.

கேரளாவில் 60 சதவீத பங்குத் தொகைக்குதான் ‘ஜனநாயகன்’ திரையிட உள்ளார்கள். பாலக்காட்டில் 60 சதவீதம் பங்குத் தொகை, கோயம்புத்தூரில் 75 சதவீதம் பங்குத் தொகை என்கிறார்கள். எங்களுக்குள் ஒற்றுமையில்லை என்பது ஒரு பிரச்சினை.

‘கோட்’ படத்துக்கும் இதே 75 சதவீத பங்குத் தொகை. பட வெளியீட்டுக்கு முந்தைய நாள் வரை போராடி பார்த்தோம். ஆனால், ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானதால் வேறு வழியின்றி கொடுத்துவிட்டோம். உடனே இதுக்கு அரசியல் காரணம் இருக்கும் என்கிறார்கள். எங்களுக்கு எந்தவொரு மேலிடத்தில் இருந்தும் அழுத்தமில்லை. நியாயமான பங்குத் தொகை கேட்டால் உடனடியாக திரையரங்குகள் ஒப்பந்தம் தொடங்கும்.

இதனால் சில திரையரங்குகளில் ‘பராசக்தி’ படத்தினை போட்டுவிட்டார்கள். ’பராசக்தி’ படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 50 சதவீதமும், ஒற்றை திரையரங்குகளுக்கு 60 முதல் 65 சதவீதம்தான்.

‘ஜனநாயகன்’ படத்துக்கு மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளுக்கு 60 சதவீதமும், ஒற்றை திரையரங்குகளுக்கு 75 முதல் 80 சதவீதம் வரை கேட்கிறார்கள். இதனால் ‘ஜனநாயகன்’ படத்துக்கு திரையரங்குகள் அதிகமாக கிடைப்பதில் சிரமம் இருக்கும்’ என தெரிவித்துள்ளார்.

Trouble in getting theaters for ‘Jananayakan’
dinesh kumar

Recent Posts

சூர்யா கொடுத்த வார்னிங்.. மாதவி சொன்ன வார்த்தை, மூன்று முடிச்சு சீரியல் எபிசோடு அப்டேட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

அஜித் குறித்து சுவாரசிய தகவல்களை பகிர்ந்து கொண்ட இயக்குனர் சிங்கம் புலி..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…

15 hours ago

சிம்பு குறித்து பேசிய நடிகர் கென் கருணாஸ்.. என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க.!!

நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…

16 hours ago

வெற்றிமாறன் எழுதிய முதல் கதை அரசன்.. இயக்குனர் ராம் ஓபன் டாக்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…

16 hours ago

Vaaya Ey Karasaami – Lyric video

https://youtu.be/i-SlZWXhsd4?si=1N9gbFT1GUcpQsmr

2 days ago

Gin – Uh Jimikki – Lyrical video

https://youtu.be/hj4d6WUhxcE?si=JfKqqJooJHSyKSsg

2 days ago