கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ அதே பெயரில் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் 2 பாகங்களாக தயாராகி உள்ளது. இப்படத்தில் விக்ரம், கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, பிரபு என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.
ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கும் இப்படத்திற்கு ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் நிறைவடைந்தது.
இந்நிலையில், பொன்னியின் செல்வன் படத்தின் முக்கிய அப்டேட்டை நடிகை திரிஷா வெளியிட்டுள்ளார். அதன்படி இப்படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கி உள்ளதாகவும், தற்போது அவர் டப்பிங் பேசி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் டப்பிங் ஸ்டூடியோவில் எடுத்த புகைப்படம் ஒன்றையும் அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மங்காத்தா, மன்மதம் அம்பு உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடிகை திரிஷா சொந்த குரலில் டப்பிங் பேசி இருந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது பொன்னியின் செல்வன் படத்திற்காக சொந்த குரலில் டப்பிங் பேசி வருகிறார் திரிஷா.
தமிழ் திரையுலகில் இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மையுடன் திகழும் பார்த்திபன், தனது சிந்தனைகளாலும் செயல்களாலும் அடிக்கடி கவனம் ஈர்த்துவருபவர்.…
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘கூலி’ திரைப்படம் ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில்…
2026 தமிழ்நாடு தேர்தல் களத்தை பின்னணியாகக் கொண்டு உருவான நகைச்சுவை திரைப்படம் ‘டிஎன் 2026’. இந்த படம் கடந்த 14-ம்…
இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில், நடிகர் செல்வராகவன் நடித்துள்ள ‘மனிதன் தெய்வமாகலாம்’ திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது. விஜயா சதீஷ்…
இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘த்ரிஷ்யம்’. அதன் வெற்றியைத் தொடர்ந்து…
Polladha Aasaigal Lyric Video | 29 | Sean Roldan | Vidhu, Preethi Asrani | Rathna…