Topics about Vijayakanth should be included in the textbook - Jayam Ravi demand
தமிழ் சினிமாவிலும் அரசியலிலும் தனக்கான இடத்தை பிடித்தவர் விஜயகாந்த். கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவினால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த் அரசியல் மற்றும் சினிமாவில் இருந்து விலகினார். இவர் கடந்த டிசம்பர் 28-ந் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார். இவரது மறைவு தமிழகம் முழுவதும் உள்ள மக்களை பெரிதும் பாதித்தது. இவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த லட்சக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர்.
மேலும் அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என பலர் நேரிலும், சமூக வலைதளத்தின் மூலமாகவும் அஞ்சலி செலுத்தினர். இவரது உடல் தேமுதிக அலுவலகத்தில் டிசம்பர் 29-ந் தேதி 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. அன்றுமுதல் பல பிரபலங்கள், தொண்டர்கள், ரசிகர்கள் என பலர் அங்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இதனயடுத்து நடிகர் சங்கம் சார்பில் நடிகர் விஜயகாந்த் மறைவுக்கு இரங்கல் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை காமராஜர் அரங்கத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த இரங்கல் கூட்டத்தில் முன்னணி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என பலரும் பங்கேற்று விஜயகாந்த் குறித்து தங்களது நினைவுகளை பகிர்ந்துகொண்டனர்.
இதில் நடிகர் ஜெயம் ரவி பேசியதாவது, எல்லோரும் இறந்த பின்னர் கடவுளாக மாறுவார்கள் என்பார்கள் ஆனால், விஜயகாந்த் வாழும் போதே கடவுளாக இருந்தார். எனக்கு ஒரே ஒரு கோரிக்கை தான் பள்ளி பாடப்புத்தகத்தில் கேப்டன் ‘விஜயகாந்த்’ பற்றி வரவேண்டும். வேறு எதற்காகவும் இல்லை மனிதன் எப்படி இருக்க வேண்டும் என்ற சின்ன ஒரு தலைப்பில் இருக்க வேண்டும். மனிதன் இப்படி வாழ்ந்தால் மக்கள் மனதில் வைத்திருப்பார்கள், அப்படி சொன்னாலே போதும். சத்ரியனுக்கு சாவில்லை என்று பேசினார்.
செம்பருத்திப்பூ டீ குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் தமிழில் புலி, வேதாளம், சிங்கம் 3 போன்ற படங்களில் நடித்துள்ளார். தமிழில்…
மண்டாடி படத்தின் பட்ஜெட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக அறிமுகமாகி ஹீரோவாக கலக்கி வருபவர் சூரி.இவரது…
ஆக்சன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து ஜகமே தந்திரம், பொன்னியின் செல்வன், கட்டா குஸ்தி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனா முத்துவிடம்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…