மேஷம்: இன்று தன்னை நம்பியவர்களை எத்தகைய துன்பத்திலிருந்தும் காப்பாற்றுவீர்கள் .தடைப்பட்ட சுபகாரியங்கள் சிறப்பாகக் கைகூடும். மணவயதை அடைந்தவர்களுக்கு நல்ல வரன்கள் தேடிவரும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பணவரவுகள் தாராளமாக அமைவதால் கடன் பிரச்சினைகள் அனைத்தும் படிப்படியாகக் குறையும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்: இன்று சிலருக்கு சிறப்பான புத்திர பாக்கியம் அமையும். கணவன்- மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். விரோதம் பாராட்டிய உற்றார்- உறவினர்கள் மற்றும் நண்பர்களும் நட்புக்கரம் நீட்டுவார்கள். கொடுக்கல்-வாங்கல் சரளநிலையில் நடைபெறும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
மிதுனம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றங்களும் லாபங்களும் உண்டாகும். பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச் செய்ய நினைக்கும் காரியங்களில் சாதகமான பலனைப் பெறமுடியும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திறமைக்கேற்ற உயர்வுகளைப் பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
கடகம்: இன்று வெளியூர், வெளிநாடுகளுக்குச்சென்று பணிபுரிய விரும்புபவர்களின் விருப்பங்கள் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் ஓரளவுக்கு திருப்தி அளிப்பதாக அமையும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் உண்டாகக்கூடும். உணவு விஷயத்திலும் மிகவும் கவனமுடன் நடந்து கொள்வதன்மூலம் தேவையற்ற மருத்துவச் செலவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
சிம்மம்: இன்று அசையா சொத்துகள் வாங்கும் விஷயங்களில் சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். தொழில், உத்தியோக ரீதியாக சிறுசிறு இடையூறுகளைச் சந்திக்க நேரிட்டாலும் அடையவேண்டிய பொருளாதார மேன்மையை அடைவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கன்னி: இன்று உங்களின் உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைந்து எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். குடும்பத்தில் உள்ளவர்களும் மகிழ்ச்சிகரமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெற்று மனநிம்மதியை உண்டாக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
துலாம்: இன்று தொலை தூரப்பயணங்களால் சிறுசிறு அலைச்சல்கள் இருந்தாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடைவீர்கள். குடும்பத்தில் கணவன் -மனைவியிடையே ஒற்றுமை நிலவும். கடந்தகால மருத்துவச் செலவுகள் படிப்படியாகக் குறையும். வெளிவட்டாரப் பழக்க வழக்கங்கள் அற்புதமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
விருச்சிகம்: இன்று வெளியூர்களிலிருந்து எதிர்பார்த்த சுபச்செய்திகள் அனுகூலத்தை உண்டாக்கும். பொருளாதாரநிலையும் சிறப்பாக இருக்கும். உற்றார்- உறவினர்களை அனுசரித்துச் செல்வதும் உத்தமம். அசையாச் சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தனுசு: இன்று நல்ல முன்னேற்றம் உண்டாகும். கொடுக்கல்- வாங்கல் சரளமாக நடைபெறும். பெரிய தொகையை எளிதில் ஈடுபடுத்தமுடியும். பழைய தொகையும் தடையின்றி வசூலாகும். வம்பு வழக்குகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். எடுக்கும் காரியங்களைச் சிறப்பாகச் செய்து முடித்து மக்களின் ஆதரவைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
மகரம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு போட்டி பொறாமைகளும் மறைமுக எதிர்ப்புகளும் விலகி நல்ல முன்னேற்றமும் அபிவிருத்தியும் பெருகும். அரசு வழியில் எதிர்பார்த்த உதவிகள் தடையின்றிக் கிடைக்கும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகள் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். தொழிலை விரிவுசெய்யும் நோக்கம் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்: இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவற்றாலும் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் பெருகும். உத்தியோகஸ்தர்களுக்குத் தடைப்பட்ட பதவி உயர்வுகள் கிடைக்கப்பெறும். உங்கள் திறமைக்கான பாராட்டுதல்களும் கிட்டும். மேலதிகாரிகளிடம் நல்ல பெயரை எடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மீனம்: இன்று சிலருக்கு வேண்டிய இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தோடு சேரும் வாய்ப்பு அமையும். கடந்தகால அலைச்சல், டென்ஷன்கள் குறைந்து பணியில் நிம்மதியான நிலை இருக்கும். சேமிப்பு பெருகும். உடல்நிலையில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்பட்டாலும் எதையும் சமாளித்து ஏற்றமிகு பலன்களைப் பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
Haiku Official Trailer | Aegan | Sri Devi | Femina George | Yuvraj Chinnasamy |…
Drones Official Trailer | R Raghav Mirdath | Anjali Nair | Dravid Selvam | RJ…
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா, பாலிவுட்டிலும் தனது நடிப்பின் மூலம் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை…
நடிகர் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தனாவுடனான தனது காதல் வாழ்க்கை மற்றும் அவர்களுக்குள் இருக்கும் அன்பு குறித்து சமீபத்திய நேர்காணலில்…
திரையுலகில் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குநராக உயர்ந்துள்ள அட்லீ, தனது நிறம் மற்றும் தோற்றம் குறித்து இணையத்தில் முன்வைக்கப்படும் விமர்சனங்கள்…
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இந்தியில் சேகர் சுமன் தொகுத்து வழங்கிய ‘Shekhar Tonight’ நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பாலிவுட் நடிகர்…