Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 31 – 05 – 2022

மேஷம்: இன்று எதிர் பார்த்த காரிய அனுகூலம் உண்டாகும். புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் காரியங்களால் முன்னேற்றம் கிடைக்கும். உல்லாச பயணங்கள் செல்ல நேரலாம். முக்கிய நபர்களின் உதவியும் அவசியமான நேரத்தில் ஆலோசனையும் கிடைக்க பெறுவீர்கள். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபார வளர்ச்சிக்கு தேவையான உதவிகள் எதிர்பார்த்த இடங்களில் இருந்து வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலை தொடர்பாக பயணம் செல்ல நேரலாம். அலைச்சல் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

மிதுனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சுமூக மானநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனகசப்பு மாறும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கடகம்: இன்று தேவையான நேரங்களில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தேக்க நிலை மாறி ஆர்வமுடன் சுறுசுறுப்பாக பாடங்களை படிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

சிம்மம்: இன்று மரியாதையும், அந்தஸ்தும் கூடும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். திடீர் கோபம் வரலாம். எந்த ஒரு பிரச்சனை வந்தாலும் சமாளிக்கும் மனோ தைரியம் உண்டாகும். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். எந்த சிக்கலும் வராமல் இருக்க தீர ஆலோசனை செய்து முடிவுகள் எடுப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கன்னி: இன்று பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமை வெளிப்பட்டு அதனால் பாராட்டும் கிடைக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையில் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நெருக்கத்தை அதிகரிக்கச் செய்யும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

துலாம்: இன்று பிள்ளைகள் பெருமை சேர்க்கும் விதத்தில் நடந்து கொள்வார்கள். அக்கம் பக்கத்தினரிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. கோபத்தை குறைத்துக் கொண்டு எல்லோரிடமும் நிதானமாக பேசுவது பிரச்சனை வராமல் தடுக்கும். மனோபலம் கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: இன்று மாணவர்கள் கூடுதல் மதிப்பெண் பெற்று கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன்தரும். திறமை வெளிப்படும். வீண் அலைச்சல், காரியதாமதம் ஏற்படலாம். கவனம் தேவை. வாழ்க்கையில் முன்னேற்றம் இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

தனுசு: இன்று மனகுழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுப்பீர்கள். தடை, தாமதம் ஏற்பட்டாலும் எல்லா காரியங்களும் நல்லபடியாக நடக்கும். பயணங்கள் செல்ல நேரலாம். அடுத்தவர்களுக்கு நன்மை செய்யும் போது கவனமாக இருப்பது வீண் பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

மகரம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். மேலும் புதிய ஆர்டர்கள் வருவது, புதிய வாடிக்கையாளர்கள் வருவதும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு இல்லாதது போல் தோன்றினாலும் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்: இன்று குடும்பத்தில் உங்களது வார்த்தைக்கு மதிப்பு இருக்கும். கணவன், மனைவிக் கிடையே ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நல்ல பலன் தரும். பிள்ளைகள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

மீனம்: இன்று தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். அடுத்தவர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த குழப்பம் நீங்கி, பாடங்களை நம்பிக்கையுடன் படிப்பீர்கள். சகமாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

 

admin

Recent Posts

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

6 hours ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

6 hours ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

6 hours ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

7 hours ago

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

1 day ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

1 day ago