Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 30– 12 – 2023

மேஷம்: இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய வற்றாலும் லாபங்களைப் பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடைப்பட்ட உயர்வுகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள். திறமைக் கேற்ற பாராட்டுதல்களால் மனநிம்மதி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

ரிஷபம்: இன்று புதிய வேலை தேடுபவர்கள் தகுதிக்கேற்ற வேலை வாய்ப்பு கிடைக்கப் பெறுவார்கள். அரசியல்வாதிகளின் நோக்கங்கள் யாவும் நிறைவேறும். உங்களின் பேச்சிற்கு மதிப்பும் மரியாதையும் உயரும். மக்களின் ஆதரவுகள் உற்சாகத்தை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மிதுனம்: இன்று உங்கள் திறமைக்கு தீனிபோட்டதுபோல் வாய்ப்புகள் அமையும். கடன்கள் அனைத்தும் பைசலாகும். கொடுத்த கடன்களும் திருப்திகரமாக வசூலாகும். மாணவர்கள் கல்வியில் திறம்பட செயல்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்: இன்று உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். பலமும் வலிமையும்கூடி மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சிறுசிறு பாதிப்புகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் இல்லாமல் உடனே சரியாகிவிடும். குடும்பத்தில் உள்ளவர்களும் சுபிட்சமாக இருப்பதால் மருத்துவச்செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

சிம்மம்: இன்று தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலன்களும் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். நீங்கள் நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேறும். உணவு விஷயத்தில் சற்று கவனமுடன் இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

கன்னி: இன்று குடும்ப வாழ்வில் குதூகலமும், பூரிப்பும் உண்டாகும். கணவன்-மனைவியிடையே அன்யோன்யமான உறவு இருக்கும். புத்திரர்களால் மகிழ்ச்சிதரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். தாராள தனவரவுகளால் இதுவரை தடைப்பட்ட காரியங்கள் அனைத்தும் சிறப்பாக நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்: இன்று திருமண சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் சாதகமான பலனைப் பெறுவீர்கள். உடன்பிறப்புகள் தக்கசமயத்தில் உதவுவார்கள். வீடு, மனை, வண்டி, வாகன யோகங்கள் அமையும். உற்றார்-உறவினர்கள் பிரச்சினைகளை மறந்து ஒற்றுமை பாராட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

விருச்சிகம்: இன்று கொடுக்கல்-வாங்கல் திருப்தி கரமாக அமையும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் நல்ல லாபம் அமைந்து பொருளாதாரநிலை உயரும். கொடுத்த வாக்குறுதிகளை சரியான நேரத்தில் காப்பாற்ற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

தனுசு: இன்று பெரிய தொகைகளைக்கூட எளிதாக ஈடுபடுத்தி லாபம் காணமுடியும். பெரிய மனிதர்களின் ஆதரவைப் பெறமுடியும். நீண்ட நாட்களாக இழுபறி நிலையிலிருந்த வம்பு வழக்குகளும் ஒரு முடிவுக்கு வரும். மொத்தத்தில் சந்தோஷமான நாள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மகரம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு சில போட்டிகள் அதிகரித்தாலும் எதிர்பார்த்த லாபத்தைப் பெறமுடியும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கப்பெற்று தொழிலை மேன்மையாக அபிவிருத்தி செய்யமுடியும். எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் லாபத்தையும், வெற்றியையும் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கும்பம்: இன்று வெளியூர், வெளிநாட்டுத் தொடர்பும் நல்ல மேன்மையை ஏற்படுத்தும். கூட்டாளிகளின் ஒற்றுமையான செயல்பாடு உங்களுக்கு மேலும் உற்சாகத்தைத் தரும். தொழிலாளர்கள் அனுகூலமாக செயல்படுவதால் நினைத்த காரியங்களை நிறைவேற்றிக்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்: இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களால் சாதகப்பலன்கள் ஏற்படும். உத்தியோகத்தில் உள்ளவர்கள் அனுகூலமானபலனை அடைவார்கள். தடைப்பட்ட பதவிகளும் கிடைக்கப்பெற்று கௌரவமானநிலைகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

admin

Recent Posts

Arjunan Per Paththu – Teaser

Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…

17 minutes ago

Thangarathinamey – Video Song

https://youtu.be/apxygLROFF0?si=XIwXjw6_VBRTI9AW

19 minutes ago

ஜனநாயகன் குறித்த கேள்வி.. இயக்குனர் அமீர் கொடுத்த பதில்..!

ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…

56 minutes ago

அண்ணாமலை சொன்ன வார்த்தை, விஜயா கொடுத்த பதில், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…

1 hour ago

தலைவர் 173 படம் குறித்து வெளியான அதிரடி தகவல்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…

20 hours ago

அஜித் 64 : லேட்டஸ்ட் அப்டேட் கொடுத்த இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன்..!

அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…

20 hours ago