Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 29– 08 – 2021

மேஷம்: இன்று பதவி உயர்வு கிடைக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வேலை இல்லாமல் தவித்தவர்களுக்கு தகுந்த சம்பளத்துடன் சிறந்த வேலை கிடைக்கும். தொழில் செய்வோருக்கு வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். எதிரிகளால் இருந்து வந்த தொந்தரவு நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

ரிஷபம்: இன்று நீங்கள் தொழிலில் அதிக அக்கறை காட்ட வேண்டியிருக்கும். வேலை இல்லாமல் இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்குவதற்கு ஏற்ற காலகட்டமிது. பணத்தை விட அதிக உழைப்பின் மூலம் செய்யும் தொழில் அதிக வருவாய் கிடைக்கும். தீவிர முயற்சியின் பேரிலேயே அரசிடம் இருந்த கோரிக்கைகள் நிறைவேறும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

மிதுனம்: இன்று இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். கையிருப்பு கூடும். ஆன்மிக பயணங்கள் செல்ல நேரிடும். கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். எதிர்பார்த்திருந்த வெற்றி வாய்ப்பு கிடைக்கும். பாராட்டுகளும் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

கடகம்: இன்று மாணவகண்மணிகளுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டுப் போன சொத்துக்கள் மீண்டும் வந்து சேரும். அனைத்து இடத்திலும் அனைத்து வேளைகளிலும் அனுசரித்துச் செல்ல வேண்டும். எடுத்த காரியம் கைகூடும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

சிம்மம்: இன்று தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும் மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்குப் பிறர் மரியாதை கொடுப்பர். வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப பிரச்சனை கட்டுக்குள் அடங்கி இருக்கும். ஆனாலும் தேவையான இடங்களில் நீங்கள் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கன்னி: இன்று தேவைகள் ஒவ்வொன்றாகப் பூர்த்தியாகும். நீண்ட நாட்களாக வாங்க நினைத்த பொருளை வாங்கலாம். நண்பர்கள் இடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். அவர்களால் உதவிகள் பெறலாம். சுபநிகழ்ச்சிகளுக்கு இப்போது திட்டமிடலாம். வெகுநாட்களாக தடைப்பட்டு வந்த திருமணத்திற்கு உண்டான முயற்சிகளை இப்போது தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

துலாம்: இன்று புதிய வீடு கட்டுவதற்கான வேலைகளையும் இப்போது தொடங்கலாம். வசதியான வீட்டிற்கு குடி புகவும் வாய்ப்புண்டு. புதிய ஆபரணங்கள் வாங்கலாம். விருந்து விழா என உல்லாசமாக பயணம் மேற்கொள்வீர்கள். சந்தாணபாக்கியம் ஏற்படும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

விருச்சிகம்: இன்று உத்தியோகம் பார்ப்பவர்க: நல்ல வளர்ச்சியைக் காணலாம். உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக இருந்தவர்கள் தவறை உணர்ந்து உங்களிடம் வந்து சரணடைவார்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்திற்கு உயர்த்தப்படுவீர்கள். சம்பள உயர்வு எதிர்பார்த்திருந்ததை விட அதிகமாக கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

தனுசு: இன்று உங்கள் ஆற்றல் மேம்படும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்புகள் வந்து சேரும். தொழில் புரிவோருக்கு இருந்து வந்த மந்த நிலை மறையும். அலைச்சலும் வேலைப் பளுவும் ஓரளவு இருக்கத்தான் செய்யும். அதே வேளையில் நீங்கள் சென்ற இடமெல்லாம் அனுகூலம் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று சேமிப்புகள் அதிகரிக்கும். நல்ல வருமானத்தைக் காண்பர். படிப்படியாக லாபம் அதிகரித்துக் கொண்டே இருக்கும். புதிய தொழில் தொடங்குவற்குண்டான வேலைகளுக்கு அரசாங்க அனுகூலம் கிடைக்கும். அக்கம்பக்கத்தினருடன் இருந்து வந்த மனவருத்தம் நீங்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்: இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும். ஏற்கனவே இருந்து வந்த பிரச்சனைகளில் இருந்து விடுபடுவீர்கள். நெடுநாளாக வராமல் இருந்த பணம் வரும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக் கொள்ள வாய்ப்புகள் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

மீனம்: இன்று உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலையும் உருவாகும். மாணவர்கள் கல்வியில் சிறப்பான முன்னேற்றத்தை அடையலாம். கடந்த சில மாதங்களாக இருந்து வந்த மந்தநிலை அடியோடு மாறும். சிலருக்கு வெளிநாடு சென்று படிப்பதற்குண்டான காரியங்களை இப்போது தொடங்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

admin

Recent Posts

Appo Ippo – Lyrical video

Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…

8 hours ago

மழைக்காலத்தில் எந்தெந்த பழங்கள் சாப்பிடக்கூடாது.. வாங்க பார்க்கலாம்.!!

மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

11 hours ago

Aaromaley – Trailer

Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…

11 hours ago

Valluvan Movie Audio & Trailer launch | RK Selvamani | K Rajan

https://youtu.be/QC_9eRGrkjQ?t=1

12 hours ago

Messenger Movie Press Meet | Sreeram Karthick

https://youtu.be/g9_8p3ui0us?t=1

12 hours ago

Thaarani Movie Audio & Trailer Launch

https://youtu.be/oXvWmYMZOoI?t=10

12 hours ago