மேஷம்: இன்று பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணம் செல்ல நேரலாம். தோழிகளுடன் சுமுகமாக பேசி பழகுவது நல்லது. சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரியங்களை செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
ரிஷபம்: இன்று புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். அவர்கள் மூலம் முன்னேற்றம் காண உதவி கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. காரிய வெற்றி கிடைக்கும். பணம் சம்பாதிக்கும் திறமை அதிகப்படும். தடைபட்டு வந்த காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
மிதுனம்: இன்று மாணவர்களுக்கு கல்வியில் வேகம் காணப்படும். சக மாணவர்களிடம் சுமுகமாக அனுசரித்துபோவது நல்லது. காரிய வெற்றி உண்டாகும். குடும்ப கவலை தீரும். கடின உழைப்பும், மனோ தைரியமும் அதிகரிக்கும். மகிழ்ச்சி தரும் சம்பவங்கள் நடக்கலாம். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கடகம்: இன்று உடல் ஆரோக்கியம் ஏற்படும். எதிர்பாலினத்தாரால் லாபம் கிடைக்கக் கூடும். மற்றவர்களுக்கு உதவிகள் செய்ய நேரிடும். பணவரத்து கூடும். வீண் அலைச்சல் திடீர் கோபம் உண்டாகலாம். காரிய வெற்றி உண்டாகும். மதிப்பும், அந்தஸ்தும் உயரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனைகள் தீரும். போட்டிகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்தவை நல்லபடியாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சில விஷயங்களை தவறாக புரிந்து கொண்டு சங்கடப்பட வேண்டி இருக்கும். வாக்குவன்மையால் நன்மை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி: இன்று குடும்பத்தில் இருந்த குழப்பங்கள் தீரும். கணவன், மனைவிக்கிடையில் இருந்த இடைவெளி குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். உறவினர்கள் வழியில் நல்ல பலன்களைப் பெறுவீர்கள். நண்பர்களால் தொந்தரவுகள் ஏற்படலாம். அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
துலாம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம். காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். கலைத்துறையினருக்கு இருந்த போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். சக கலைஞர்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் நன் மதிப்பை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
விருச்சிகம்: இன்று நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து பாராட்டுக்கள் கிடைக்க பெறுவீர்கள். உயர் பதவிகள் கிடைக்க கூடும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். தேவையான உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் சாதகமாக முடியும். பணவரத்து அதிகரிக்கும். தடைகள் நீங்கி முன்னேற்றம் காண்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன் அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
தனுசு: இன்று மாணவர்களுக்கு சாமர்த்தியமான செயல்களால் மற்றவர் மனதில் இடம் பிடிப்பீர்கள். பாடங்களில் கவனம் செலுத்துவது அதிகரிக்கும். மனோ தைரியம் கூடும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். எந்த நேரத்திலும் அனைவருக்கும் உதவும் எண்ணம் தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
மகரம்: இன்று கற்பனை வளமும் கலையார்வமும் அதிகரிக்கும். நட்பிற்கு முக்கியத்துவம் அளிப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். காரியங்களில் அனுகூலம் உண்டாகும். உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
கும்பம்: இன்று பணவரத்து குறையும். வாழ்க்கை துணையின் உடல்நலத்தில் கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் நெருக்கடி ஏற்பட்டு நீங்கும். வழக்கம்போல் வியாபாரம் இருந்தாலும் திடீர் பணதேவை ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த வேலையை செய்யும் முன்பும் அதுபற்றி அதிகம் யோசிப்பார்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
மீனம்: இன்று சிலருக்கு புதிய வேலையும் கிடைக்கலாம். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு மகிழ்ச்சியை தரும். உறவினர்கள் வகையில் செலவுகள் ஏற்படலாம். நண்பர்களால் இருந்து வந்த கருத்து வேற்றுமை அகலும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
Appo Ippo - Lyrical video , Indian Penal Law (IPL) , TTF Vasan , Kishore…
மழைக்காலத்தில் எந்தெந்த படங்கள் சாப்பிடக்கூடாது என்பது குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…
Aaromaley - Trailer | Silambarasan TR | Kishen Das | Harshath Khan | Shivathmika |…
https://youtu.be/QC_9eRGrkjQ?t=1