மேஷம்: இன்று நண்பர்களிடத்தில் மனக்கிலேசம் ஏற்படலாம். சுபச்செலவுகள் நிகழும். எதிர்காலத்திற்குத் தேவையான முறையான சேமிப்புகளுக்குண்டான ஏற்பாடுகளை செய்வீர்கள். எதிரிகளின் இன்னல்கள் இருக்கும் இடம் தெரியாமல் போகும். வரவுக்கு எந்த வித குறையும் இருக்காது. எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7
ரிஷபம்: இன்று உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். உங்களுடைய கோரிக்கைகளை மேலதிகாரிகள் ஏற்று நடப்பார்கள். விரும்பிய இடத்திற்கு பணி இட மாறுதல் கிடைக்கும். பணத்தை விட அறிவை மூலதனமாக வைத்து செய்யப்படும் தொழில் முன்னேற்றம் ஏற்படும். அதே நேரம் சில புதிய வியாபார யுக்திகளை நீங்கள் பயன்படுத்த வேண்டி வரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5
மிதுனம்: இன்று தீவிர முயற்சிகளினாலேயே அரசு சார்ந்த காரியங்கள் நடைபெறும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு சீரான வாய்ப்புகள் வந்தாலும் அவ்வப்போது குழப்பமான மனநிலையும் இருக்கும். முன்யோசனையுடன் திட்டமிடல் அவசியம். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் புதிய உற்சாகமும் நம்பிக்கையும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 5
கடகம்: இன்று தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். எனினும் மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை. முயற்சிகளில் தடைகள் வந்தாலும் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணீப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3
சிம்மம்: இன்று நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம். மேலும் வீண் அலைச்சலும் ஏற்படலாம். தேவையில்லாத பணவிரையம் ஆகலாம். காரிய அனுகூலம் கிடைக்கும். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். தனியார் வேலையில் இருப்பவர்களுக்கு சிறு வாக்குவாதங்கள் வரலாம். வரவுக்கேற்ற செலவுகளும் வந்து சேரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கன்னி: இன்று வருங்காலத்திற்குத் தேவையான முதலீடுகளை அதற்குண்டான நபர்களிடம் ஆலோசனைகள் செய்து முதலீடுகள் செய்வீர்கள். பிரச்சனைகளை முறியடிக்கும் வல்லமை உங்களை வந்து சேரும். காரிய அனுகூலம் கிட்டும். செல்வாக்கில் முன்னேற்றம் ஏற்படும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு மிகுந்த உகந்த காலகட்டமிது. கைக்கு எட்டிய அனைத்து வாய்ப்புகளையும் பயன்படுத்தி முன்னேற்றப் பாதையில் செல்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
துலாம்: இன்று முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெறும். பொருளாதார வளம் மேம்படும். தொழில் உன்னத நிலையை அடையும். குடும்பத்தில் முன்னேற்றமும் சுபநிகழ்ச்சிகளும் நடைபெறும். பணவிரையமும் காரியத்தாமதமும் ஏற்படலாம். எனினும் எந்த பிரச்சனையையும் முறியடிக்கும் வல்லமை உங்களுக்கு வந்து சேரும். வீட்டிற்குத் தேவையான பொருட்கள் தங்கு தடையின்றி கிடைக்கும். பிள்ளைகள் வழியில் சிற்சில கசப்பூட்டும் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
விருச்சிகம்: இன்று நன்மைகளும் கெடுதல்களும் இணைந்து இருக்கும். உறவினரால் தொல்லைகள் ஏற்படலாம். உடல்நலம் பாதிக்கப்படலாம். தனியாரில் வேலை செய்பவர்களுக்கு சில சோதனைகள் ஏற்படலாம். உங்களுக்குண்டான உரிய கௌரவம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
தனுசு: இன்றைய நாள் சுமாராக இருக்கும். பொருளாதார பலம் உண்டாகும். அன்றாடப் பணிகள் சிறப்பாக நடைபெறும். வித்தைகள் சம்பந்தப்பட்ட படிப்புகள் சார்ந்தவர்களுக்கு நல்ல நாளாக அமையும். குடும்பத்தில் சச்சரவு ஏற்பட வழிவகை செய்து கொடுக்க வேண்டாம். கொடுக்கல் வாங்கலில் சச்சரவு ஏற்படாமலிருப்பதற்கு கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மகரம்: இன்று உங்கள் அந்தஸ்து சிறப்படையும். ஆதாயங்கள் கிடைக்கும். அரசாங்கம் சம்பந்தப்பட்ட காரியங்கள் துரிதமாகவும் சரியாகவும் நடைபெறும். உங்களால் ஆன உதவிகளை செய்து வந்தால் நல்ல பல பலன்களைப் பெறலாம். பொதுவாக நற்பலன்கள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
கும்பம்: இன்று தொல்லைகள் குறையும். எந்த பிரச்சனையிலும் வெற்றி பெற வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பொருளாதார சுபிட்சம் சிறப்பாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
மீனம்: இன்று உதவிகள் கிடைக்கும், நண்பர்கள், உறவினர்கள் என பல வகைகளிலும் உதவிகள் தக்க சமயத்தில் கிடைக்கும். லாபம் கிடைக்கும். உங்களுக்குண்டான கௌரவம் உயரும். திருமணமாகாதவர்களுக்கு அதற்கான நேரம் கனிந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 7
Oru Paarvai Paarthavanae - Video Song | OTHERS | Aditya Madhavan, Gouri | Abin Hariharan…
பெர்சிமன் படத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. இந்த…
Indian Penal Law (IPL) - Official Teaser | TTF Vasan | Kishore | Kushitha |…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
தமிழ் சினிமாவில் இயக்குனர் நடிகர் என இரண்டிலும் கலக்கி வருபவர் பிரதீப் ரங்கநாதன் கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார்…