Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 22– 08 – 2022

மேஷம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் குறிக்கோள் இன்றி வேலை செய்ய வேண்டி இருக்கும். உத்தியோகம் தொடர்பான இடமாற்றம் உண்டாகலாம். குடும்பத்தில் எதிர்பாராத திடீர் செலவு ஏற்படலாம். கணவன் மனைவிக்கிடையே விட்டு கொடுத்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 7

ரிஷபம்: இன்று குடும்பத்தினரிடம் பக்குவமாக நடந்து கொள்வது நன்மை தரும். உறவினர்கள் நண்பர்கள் வருகை இருக்கும். கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டு அமைதியை கடைபிடிப்பதன் மூலம் எல்லாவற்றிலும் அனுகூலம் உண்டாகும். டென்ஷனை குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மிதுனம்: இன்று எதிலும் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. போட்டி, பொறாமை அகலும். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். எதிலும் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பு பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5

கடகம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து திருப்தி தரும். பயணங்கள் செல்ல நேரிடும். விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். சிலர் புதிய வாகனம் வாங்குவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 3

சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 2

கன்னி: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

துலாம்: இன்று எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்: இன்று மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9

தனுசு: இன்று மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

மகரம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

கும்பம்: இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மீனம்: இன்று ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

 

admin

Recent Posts

மகுடம் திரைவிமர்சனம்

தந்தை - மகன் என இரு கதாபாத்திரங்களில் விஷால் வெளிப்படுத்தும் மாறுபட்ட பரிமாணமே ‘மகுடம்’ படத்தின் முக்கிய பலம். குடும்ப…

10 hours ago

VILLALI VEERANE Lyrical Video

VILLALI VEERANE Lyrical Video | Ravi Teja | GV Prakash | Vel Murugan | Shiva…

10 hours ago

சினிமாவில் அறிமுகமானபோது என் பெற்றோருக்கு பயத்தை ஏற்படுத்தியது – நடிகை மமீதா பைஜூ

தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் மமீதா பைஜூ. விஜய்யுடன் நடித்த ‘ஜனநாயகன்’, சூர்யாவுடன் நடித்த ‘விஸ்வநாத் அண்ட்…

11 hours ago

டாக்டரான ஐஸ்வர்யா லட்சுமி நடிகையானது எப்படி?

தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஐஸ்வர்யா லட்சுமி. அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான…

11 hours ago

சின்னத்திரையில் களமிறங்கும் சமந்தா!

திரையுலகில் முன்னணி நடிகைகள் பலரும் சின்னத்திரை ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ரசிகர்களை கவர்ந்து வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை சமந்தாவும்…

11 hours ago

லஞ்சம் வாங்க இதயத்தில் பயத்தை ஏற்றியவர் முதலமைச்சர் விஜய்..! – பார்த்திபன்

தமிழக முதலமைச்சராக விஜய் சுதந்திர தினத்தையொட்டி சென்னை தலைமைச் செயலகம் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியை ஏற்றுவதை முன்னிட்டு, நடிகர்…

12 hours ago