Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 21 – 06 – 2021

மேஷம்: இன்று தொழில் வியாபாரம் மந்தநிலை மாறும். சாதூரியமான பேச்சின் மூலம் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். விலகி சென்ற வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவார்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சாமர்த்தியமான செயல்கள் மூலம் காரிய வெற்றி காண்பார்கள். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

ரிஷபம்: இன்று வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை காணப்படும். மனவருத்தத்துடன் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். கவனமாக செயல்படுவது நல்லது. கணவன் மனைவிக்கிடையே சந்தோஷம் நீடிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்: இன்று பொருளாதார நிலை உயரும். பிள்ளைகளுக்கு தேவையான ஆடை அணிகலன்களை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். எடுத்த காரியங்களில் சாதகமான போக்கு காணப்படும். மங்கள நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நேரிடும். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். வாழ்க்கை துணையால் பணவரத்து இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

கடகம்: இன்று பிரிந்து சென்ற நண்பர்கள் மீண்டும் வந்து சேர்வார்கள். பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். மன அமைதி கிடைக்கும். காரிய தடைகள் விலகும். கடமை உணர்வுடன் திட்டமிட்டு செயலாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற பாடுபடுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

சிம்மம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதூர்யம் அதிகரிக்கும். விருப்பங்கள் கைகூடும். மரியாதையும், அந்தஸ்தும் அதிகரிக்கும். பயன்தரும் காரியங்களில் ஈடுபடுவீர்கள். எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்கள் மூலம் நன்மை உண்டாகும். மனகுழப்பம் நீங்கி தெளிவு பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கன்னி: இன்று எதிர்பாலினரால் காரிய அனுகூலம் ஏற்படும். எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். புதிய ஆர்டர்கள் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூலிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள். குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

துலாம்: இன்று எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளுடன் அனுசரித்து செல்வது நன்மையை தரும். புதியவேலை தேடுபவர்களுக்கு அலைச்சல் இருக்கும். குடும்பத்தில் அமைதி காணப்படும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

விருச்சிகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். கணவன், மனைவிக்கிடையே சகஜநிலை இருக்கும். பிள்ளைகள் கல்வி தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. உறவினர்கள் வருகை இருக்கும். பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

தனுசு: இன்று உங்களது ஆலோசனையை கேட்டு சிலர் வரலாம். உங்களது செயல்கள் மூலம் மதிப்பு கூடும். பணவரத்து திருப்திதரும். குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்தி பாடங்களை படிப்பது நன்மை தரும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

மகரம்: இன்று வீண் அலைச்சல் குறையும். காரிய தடைகள் நீங்கும். எல்லாவகையிலும் நற்பலனே ஏற்படும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். ஆன்மிக எண்ணங்கள் அதிகரிக்கும். உங்களது செயல்கள் மூலம் புகழ் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

கும்பம்: இன்று எதிர்பாராமல் நடக்கும் திருப்பங்களால் சாதகமான பலன் கிடைக்கும். உல்லாச பயணங்களும் செல்ல நேரலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களுக்காக அலைய வேண்டி இருக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி வரும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

மீனம்: இன்று முக்கிய நபர்களின் உதவியும் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற வாய்ப்புகள் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கலாம். குடும்பத்தில் எதிர்பாராமல் நடக்கும் சம்பவங்களால் இழுபறியாக இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான விஷயங்களில் திடீர் தடை, தாமதம் ஏற்படலாம். மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 7

admin

Recent Posts

ஜனநாயகன் வெளியீடு எப்போது? வெளியான சூப்பர் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

13 hours ago

அரசன் படத்தின் படப்பிடிப்பு குறித்து வெளியான தகவல்.. மகிழ்ச்சியில் ரசிகர்கள்.!!

அரசன் படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…

13 hours ago

அஜித் மற்றும் ரஜினிகாந்த் ரசிகர்களுக்கு காத்திருக்கும் இன்ப அதிர்ச்சி.. என்ன விஷயம் தெரியுமா?

அஜித் மற்றும் ரஜினிகாந்த் பிறந்த நாளில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக ஜொலித்து வருபவர்கள் சூப்பர்…

13 hours ago

சூர்யா சொன்ன வார்த்தை, நந்தினி கொடுத்த பதில், மூன்று முடிச்சு சீரியல் எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

மனோஜை சந்தித்த ரோகினி, சந்தோஷத்தில் முத்து மீனா, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…

21 hours ago

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

2 days ago