Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 20– 11 – 2022

மேஷம்: இன்று எதிர்பாராத செலவு உண்டாகும். அடுத்தவர்களிடம் பழகுவதில் கவனம் தேவை. பணவரத்து தாமதப்படும். அரசியல்வாதிகளின் பணியாற்றும் திறன் அதிகரிக்கும். கட்சி மேலிடத்தால் உற்சாகப்படுத்தப்படுவீர்கள். கட்சியில் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்யம் நன்றாக இருக்கும். அடிக்கடி பயணங்களைச் செய்து, கட்சிப் பணிகளைத் தீவிரமாக ஆற்றி ஆதாயம் பார்ப்பீர்கள். பெண்கள் தடைபட்டு வந்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கடித போக்குவரத்து சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு எந்த ஒரு பாடத்தை படித்தாலும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது அவசியம். விளையாடும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்: இன்று எதிலும் லாபமான நிலை காணப்படும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணம்வரத்து அதிகரிக்கும். துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு பாராட்டு பெறுவீர்கள். எதிலும் தயக்கமோ பயமோ இருக்காது. தந்தையின் உடல்நிலையில் கவனம் தேவை. அவருக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். உழைப்பதற்கு அஞ்சாத நீங்கள் எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது போன்று செயல் படுவீர்கள். சகோதரர்கள் வகையில் ஏதாவது மனத்தாங்கல் ஏற்பட்டு மறையும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூமி தொடர்பான பிரச்சனைகள் இழுபறியான நிலை காணப்படும். மனதெம்பும் மகிழ்ச்சியும் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6

மிதுனம்: இன்று சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஆனால் கைக்கு பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். புதிய ஆர்டர்கள் கூடுதலாக உழைப்பதன் பேரில் கிடைக்கும். வாடிக்கையாளர்களை திருப்தி செய்ய முற்படுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேன்மை அடைவார்கள்.கலைத்துறையினர் எதிர்பார்த்த வாய்ப்புகளைப் பெறுவீர்கள். உங்கள் பெயரும், புகழும் உயரும். ரசிகர்களோடு கருத்து வேறுபாடுகள் ஏற்பட நிறையவே வாய்ப்புண்டு. ஆனால் அவற்றை வெளிக்காட்டிக் கொள்ளாமல் ரசிகர் மன்றங்களுக்குப் பணம் செலவு செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9

கடகம்: இன்று எந்த ஒரு காரியத்தையும் முன்னின்று செய்ய ஆசைப்படும் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் உங்கள் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்வார்கள். கணவன் மனைவிக்கிடையே சில்லறை பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் மூலம் மதிப்பு உயரும். நண்பர்கள் மூலம் நன்மை உண்டாகும். தொழில் வியாபாரத்தில் சற்று மந்தமான நிலை காணப்படும். வரவேண்டிய பணம் கைக்கு கிடைக்க தாமதமாகலாம். போட்டிகளை சமாளிக்க வேண்டி வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க நேரிடும். நிதானமாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: இன்று தன்னம்பிக்கையுடன் துணிச்சலாக எதிலும் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள். எதிர்பாராத செலவு உண்டாகும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். கல்விக்கான செலவு கூடும். அரசியல்வாதிகளைத் தேடிப் புதிய பதவிகள் வரும். செய்கின்ற காரியங்களில் சிறு தடைகள் ஏற்பட்டாலும் முடிவு சாதகமாகவே அமையும். பொதுநலனோடு இயைந்த சமுதாய நலன் சார்ந்த எண்ணங்களைச் செயல்படுத்த முனைவீர்கள். பெண்களுக்கு மனதில் தைரியமும் மகிழ்ச்சியும் உண்டாகும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது பற்றிய கவலை நீங்கும். உற்சாகமான மனநிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி: இன்று பலவிதத்திலும் பணவரத்து உண்டாகும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியங்கள் நன்றாக நடந்து முடியும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்ற பாடுபடுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல நேரிடும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் ஒதுங்கி செல்வது நல்லது. உங்கள் சுய கௌரவத்துக்குப் பங்கம் ஏற்படாது. சக கலைஞர்களின் உதவியால் உங்களின் திறமைகளை வளர்த்துக் கொள்வீர்கள்.பணவரத்து அதிகரிக்கும். வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

துலாம்: இன்று குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி அமைதி காணப்படும். கணவன் அல்லது மனைவி மூலம் இருந்த பிரச்சனைகள் நல்ல முடிவை தரும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பதைகண்டு மனம் மகிழ்வீர்கள். வழக்குகள் இழுபறியாக இருக்கும். தொழில் வியாபாரத்தில் வேகமான முன்னேற்றம் இருப்பது கடினம். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நல்லது. கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதற்குத் தீவிர முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக்கொள்வது நல்லது. உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும்.குடும்பத்தில் சுபகாரியங்கள், மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். அதேநேரத்தில் கணவன், மனைவிக்கிடையே ஏதேனும் மனவருத்தம் ஏற்படலாம். அக்கம் பக்கத்தினருடன் சில்லறை சண்டைகள் வரலாம் கவனமாக இருப்பது நல்லது. பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டு பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

தனுசு: இன்று குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது. தடைபட்ட காரியங்கள் தடைநீங்கி நல்லபடியாக நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். பெண்கள் நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.மாணவர்கள் பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெற முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மகரம்: இன்று உங்களுடன் பழகுபவர்கள் உற்சாகமாக இருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். இதுவரை நடக்காமல் இருந்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து மனநிம்மதி அடைவீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் நடந்து முடியும். முக்கிய நபர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியும் கிடைக்கும்.அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள். அதனால் கோபப்படாமல் விவேகத்துடன் விட்டுக் கொடுத்து நடந்துகொண்டு, அவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மனங்களை வெல்லவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

கும்பம்: இன்று திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். தொழில் வியாபாரம் நன்கு நடக்க தேவையான உதவிகள் கிடைக்கும். வாடிக்கையாளர் தேவை அறிந்து பொருள்களை அனுப்பி அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக பணிகளை செய்து முடித்து நிர்வாகத்தில் நல்ல பெயர் பெறுவார்கள்.புதிய வாகனங்களை வாங்குவீர்கள். தீவிர உழைப்பும், அதிக முயற்சிகளுடன் காரியங்களில் ஈடுபடும் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனகவலை குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5

மீனம்: இன்றுஎல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். எந்த காரியத்தையும் யோசித்து செய்வது நன்மை தரும். அதிக கவனம் உங்களுக்கு வெற்றியைத் தேடித் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கிடையே இருந்த பிரச்சனைகள் தீரும். பிள்ளைகள் விரும்பும் பொருள்களை வாங்கி கொடுத்து அவர்களை மகிழ்ச்சி அடைய செய்வீர்கள். வீடு, வாகனம் போன்ற வற்றை வாங்குவது, புதுப்பிப்பது போன்றவற்றில் ஈடுபடுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

 

 

admin

Recent Posts

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினி சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ.சுரேஷ்…

1 hour ago

டாஸ்கில் தீயாக விளையாடும் போட்டியாளர்கள்.. வெளியான முதல் ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

1 hour ago

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

ஆளி விதை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…

15 hours ago

Kombuseevi Official Teaser

Kombuseevi Official Teaser | Sarath Kumar, Shanmuga Pandiyan | Ponram | Yuvan Shankar Raja

20 hours ago

Muyantrey Vizhuvom Lyrical Video

Muyantrey Vizhuvom Lyrical Video | Thadai Athai Udai | Mahesh | Guna Babu | Arivazhakan…

20 hours ago

Mylanji Teaser

Mylanji Teaser | Isaignani Ilaiyaraaja | Sriram Karthick, Krisha Kurup, Munishkhanth | Ajayan Bala

20 hours ago