மேஷம்: இன்று பிறருக்குக் கொடுக்கும் பணத்தையும் எளிதில் வசூலிக்கமுடியாத நிலைகள் ஏற்படக்கூடும். திருமண சுபகாரிய முயற்சிகளைச் சற்றுத் தள்ளிவைப்பது நல்லது. புத்திரவழியில் சுபச்செலவுகள் ஏற்படக்கூடும். பணிபுரியும் பெண்களுக்கு வேலைப்பளு சற்றே அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6
ரிஷபம்: இன்று கணவன், மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும். செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் உயரக்கூடிய காலம் என்றாலும் நிறைய செலவுசெய்ய நேரிடும். வெளியூர், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்வீர்கள். உடனிருப்பவர்களால் சில பிரச்சினைகளைச் சந்திக்கக்கூடும் என்பதால் எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
மிதுனம்: இன்று நாள் சுமாராகத்தான் இருக்கும். முதலீட்டினை எடுக்க அரும்பாடுபட வேண்டி வரும். வருமானம் போதிய அளவு இருக்கும் என்றாலும் வேலையாட்கள் சரியான நேரத்திற்கு வேலைக்குக் கிடைக்கமாட்டார்கள். பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், இள நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5, 9
கடகம்: இன்று பணவரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சற்று கவனம் தேவை. தொழில்ரீதியாக போட்டிகள் ஏற்பட்டாலும் புதிய வாய்ப்புகளுக்கு பஞ்சம் இருக்காது. வரவேண்டிய பணப்பாக்கிகள் மட்டும் இழுபறி நிலையிலேயே இருந்து வரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், கரும்பச்சை
அதிர்ஷ்ட எண்: 5, 9
சிம்மம்: இன்று இடைவிடாத உழைப்பால் உடல்நிலையில் சோர்வு உண்டாகும். தேவையற்ற பயணங்களால் அலைச்சல்கள் ஏற்படக்கூடும் என்பதால் முடிந்தவரைத் தவிர்த்துவிடுவது நல்லது. மாணவ-மாணவியர் விளையாட்டுப்போட்டிகளில் பல பரிசுகளைத் தட்டிச்செல்வீர்கள். பேச்சின் இனிமை சாதூரியம் இவற்றால் எடுத்த காரியம் கைகூடும். புண்ணிய காரியங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5
கன்னி: இன்று மேல்மட்டத்தில் இருப்பவர்கள் உங்களை ஆலோசனை செய்யாமல் தானாக எதையும் செய்வது உங்களுக்கு மன வருத்தத்தை தரலாம். கல்வி பயில்பவர்கள் சற்றுக்கூடுதல் கவனம்செலுத்திப் படித்தால் எதிர்பார்க்கும் மதிப்பெண்களைப் பெறமுடியும். கல்விக்காக நீங்கள் அரசுவழியில் எதிர்பார்க்கும் உதவிகள் சில தடைகளுக்குப்பின் கிடைக்கப்பெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1, 3
துலாம்: இன்று எதிர்பார்த்த காரியங்கள் நல்லபடியாக முடிய கடினமாக பணியாற்ற வேண்டி இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நல்ல நண்பர்களின் உதவிகள் தக்கசமயத்தில் அமையும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் ஏற்படும். பணவரவுகளில் தடைகள் நிலவுவதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்தி செய்வதில் சில சங்கடங்களை எதிர்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9
விருச்சிகம்: இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி அடைவீர்கள். உடல் ஆரோக்கியத்திலும் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளும் ஏற்படும். குடும்பத்தில் ஏற்படக்கூடிய பிரச்சினைகளால் மனநிம்மதி குறையும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சாம்பல் நிறம்
அதிர்ஷ்ட எண்: 2, 6
தனுசு: இன்று வீண் அலைச்சல் உண்டாகலாம். எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும். தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்களைத் தவிர்க்கலாம். எந்தவொரு புதிய முயற்சியிலும் பெரிய தொகை ஈடுபடுத்துவதைத் தவிர்ப்பது நல்லது. கொடுக்கல்- வாங்கலில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 5
மகரம்: இன்று தொழில், வியாபாரத்தில் மறைமுக எதிரிகளின் தொல்லைகள் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கும் எதிர்பாராத இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று குடும்பத்தை விட்டுப் பிரியக்கூடிய சூழ்நிலைகள் ஏற்படும். மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் செயல்பட்டால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெறமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 2, 9
கும்பம்: இன்று உடல்நலனில் கவனம் செலுத்த வேண்டிவரும். புத்திரர்களால் மனசஞ்சலங்களும், தேவையற்ற வீண்செலவுகளும் அதிகரிக்கும். கொடுக்கல்-வாங்கலில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவாக்கம் தொடர்பான திட்டங்கள் செயல்படுத்த முயற்சி மேற்கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 1, 3
மீனம்: இன்று முயற்சிகளில் தடைகள் நிலவினாலும் எதிர்நீச்சல் போட்டாவது வெற்றி வாய்ப்புகளைப் பெறுவீர்கள். பொருளாதாரநிலையில் கடுமையான நெருக்கடிகளைச் சந்திப்பீர்கள். உற்றார்-உறவினர்களிடையே வீண்விரோதங்கள் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலைபளு குறைந்து உற்சாகமாக காணப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 7
Mayil Veera Lyric Video | Sardar 2 | Karthi | Malavika Mohanan | PS Mithran…
FATHER Official Teaser | Darling Krishna | Prakash Raj | R Chandru | Raja Mohan…
Paranthu Pogum Manase Lyric Video | XY | Maayavan Cinematic Universe | Chinmayi | C.V.…
Kudikara Nenju Lyric Video | Hi | Nayanthara, Kavin | Dhruv Vikram | Jen Martin…
பாலிவுட் நட்சத்திர தம்பதியான கரீனா கபூர் மற்றும் சயீஃப் அலி கான் சமீபத்தில் தங்களது குழந்தைகளுடன் வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு…
விக்னேஷ் ஸ்ரீகாந்த் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், அதிதி ஷங்கர் முதன்முறையாக இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘ஒன்ஸ்மோர்’. மில்லியனர் என்டர்டெயின்மென்ட் சார்பில்…