Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 18 – 04 – 2021

மேஷம்: இன்று உங்களது செயல்களுக்கு எப்போதும் யாராவது துணையாக இருந்து கொண்டு இருப்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஆனால் செலவுகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களிடம் சாதூரியமாக பேசுவதன் மூலம் வளர்ச்சி காண முடியும். அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக வெளியில் செல்லும் போது கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் அமைதி காணப்படும். குடும்ப அங்கத்தினர்களை அனுசரித்து செல்வதால் நன்மை ஏற்படும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுப்பீர்கள். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மிதுனம்: இன்று உறவினர்கள் வருகை இருக்கும். புதிய நபர்கள் மூலம் காரிய பலிதம் ஏற்படும். சுபகாரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்வீர்கள். பணவரத்து திருப்தி தரும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் சாதிப்பீர்கள். மாணவர்கள் உயர்கல்விக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும். வீண் அலைச்சலாக இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

கடகம்: இன்று தர்ம சிந்தனையுடன் காணப்படுவீர்கள். எந்த ஒரு சின்ன வேலையை செய்து முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். பணவரத்து தாமதப்படும். மனதில் வீண் கவலை உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் தடைகளை தாண்டி முன்னேற்றங்களை காண்பீர்கள். போட்டிகள் இருந்தாலும் அவற்றால் பாதிப்பு இருக்காது. எதிலும் முன்னெச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலைகளை செய்து முடிப்பதற்கு கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

கன்னி: இன்று குடும்பத்தில் திடீர் குழப்பம் ஏற்பட்டு விலகும். வேலை நிமித்தமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். கணவன் மனைவிக்கிடையே சுமுகமான நிலை காணப்படும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி முக்கிய முடிவுகள் எடுக்க நேரலாம். மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். எதையும் செய்து முடிக்கும் மனோதைரியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

துலாம்: இன்று வழக்கத்தை விட கூடுதலாக செலவு செய்ய நேரிடும். பணவரத்து தாமதப்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வருமானம் அதிகமாகும். முன்னோர்கள் வழிபாடு நன்மையைத் தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 9, 3

விருச்சிகம்: இன்று நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மனதில் தேவையற்ற எண்ணங்கள் தோன்றும். எவ்வளவுதான் திறமையாக செயலாற்றினாலும் மற்றவர்களிடம் இருந்து பாராட்டு கிடைப்பது அரிது. தூக்கம் குறையலாம். கனவு தொல்லையும் ஏற்படக்கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு: இன்று தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும். பார்ட்னர் விஷயங்கள் தாமதமாகும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த ஒரு வேலையையும் அதிக அலைச்சலுக்கு பின்னரே செய்து முடிக்க முடியும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைப்பது தடைபடும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்: இன்று மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் வீண் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். நீங்கள் சொல்வதை யாரும் கேட்காமல் அவர்கள் நினைத்தபடி நடக்க முற்படுவார்கள். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை உண்டாகலாம் கவனம் தேவை. பிள்ளைகளை அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7

கும்பம்: இன்று வீண் குழப்பங்கள் ஏற்படலாம். எதிலும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. காரியதாமதம் ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறவும் எதிர்கால உயர்கல்வியை நன்கு கற்கவும் கவனத்தை சிதறவிடாமல் படிப்பது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

மீனம்: இன்று மனோ தைரியம் கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். பாடங்கள் படிப்பதில் தீவிர கவனம் செலுத்துவீர்கள். காரிய தடை தாமதம் ஏற்பட்டு மறையும். புதிய முயற்சிகளை கவனத்துடன் செயல்படுத்துவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெண் சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

admin

Recent Posts

AOT Tamil Teaser

AOT Tamil Teaser | Dulquer Salmaan | Satvika | Shruti Haasan | GV Prakash |…

14 hours ago

26 ஆண்டு காலக் கனவை நிறைவேற்றிய ஹிருத்திக் ரோஷன்! கேரள ரசிகையை நேரில் சந்தித்து நெகிழ்ச்சி!

பாலிவுட்டின் முன்னணி நடிகரான ஹிருத்திக் ரோஷன், பெருமூளை வாதத்தால் பாதிக்கப்பட்டு படுக்கையிலேயே முடங்கியுள்ள தனது 52 வயது ரசிகையின் நீண்ட…

14 hours ago

தீபாவளி ரிலீசுக்கு வரிசை கட்டும் தமிழ் படங்கள்… வசூல் வேட்டையில் முந்தப்போவது யார்?

ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையின்போது முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் திரைக்கு வந்து ரசிகர்களுக்கு விருந்தளிப்பது வழக்கம். அந்த வகையில், இந்த…

14 hours ago

சமூக வலைதள விமர்சனங்கள்… வெளிப்படையாகப் பேசிய நடிகை அனுபமா பரமேஸ்வரன்!

சினிமா நட்சத்திரங்கள் சமூக வலைதளங்களில் பதிவிடும் ஒவ்வொரு விஷயத்தையும் உன்னிப்பாகக் கவனித்து, அதற்குக் கருத்து தெரிவிக்கும் ரசிகர்களும் விமர்சகர்களும் இருக்கின்றனர்.…

15 hours ago

அனிருத் – காவ்யா மாறன் திருமண வரவேற்பு நவம்பர் 21-ல் சென்னையில்!

தமிழ் திரையுலகின் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத் ரவிச்சந்தர், பிரபல தயாரிப்பாளர் கலாநிதி மாறனின் மகள் காவ்யா மாறனைத்…

15 hours ago

ஜெயிலர் 2 – திரை விமர்சனம்

சிலை கடத்தல் மன்னன் விநாயகனை வீழ்த்திய பிறகும் ஆபத்து ஓயவில்லை என்றால், முத்துவேல் பாண்டியன் அமைதியாக இருப்பாரா? குடும்பத்தைக் காப்பாற்ற…

15 hours ago