Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 18– 05 – 2023

மேஷம்: இன்று எந்த ஒரு காரியமும் மந்தமாக நடக்கும். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டி இருக்கும். தொழில் வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் வராவிட்டாலும், சுமாராக வரும். ஆனால் புதிய ஆர்டர்கள் வந்து சேரும். தொழில் தொடர்பான செலவு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 1,2

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறிய வேலைக்கும் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அவர்களின் நலனுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் திடீர் இடை வெளி ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மிதுனம்: இன்று பிள்ளைகள் அறிவு திறன் கண்டு ஆனந்தப்படுவீர்கள். அவர்க ளுக்காக செலவு செய்யவும் நேரிடும். எதிர்பாராத செலவுகள் உண்டாகும். காரியதாமதம் ஏற்படும். வீண்கவலை இருக்கும். பணவரத்து அதிகப்படும் அதே நேரத்தில் வீண்செலவு உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

கடகம்: இன்று சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அதை செய்ய முடியாத சூழ்நிலை வரும். எதிலும் ஈடுபடாமல் ஒதுங்கி சென்றாலும் மற்றவர்கள் விடாமல் வம்புக்கு இழுப்பார்கள். எனவே கவனமாக இருப்பது நல்லது. நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த சில காரியங்கள் நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 9

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். புதிய ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி கிடைக்கும். வாக்கு வன்மையால் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நீண்ட நாட்களாக தள்ளிப்போன பதவி உயர்வு கிடைக்கும். வர வேண்டிய பணம் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9,3

கன்னி: இன்று குடும்பத்தில் எதிர்பார்த்த சுமுகமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவி இருவரும் சேர்ந்து முடிவுகள் நல்ல பலன் தருவதாக இருக்கும். பிள்ளைகள் மூலம் பெருமை கிடைக்கும். பணவரத்து திருப்தி தரும் விதத்தில் இருக்கும். இழுபறியாக இருந்த காரியங்கள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

துலாம்: இன்று எடுத்த காரியத்தை செய்துமுடிப்பதில் இழுபறியான நிலை காணப்படும். சாதாரணமாக பேசினாலும் மற்றவர்கள் அதில் குறை காண்பார்கள். வாகனங்களில் செல்லும் போதும், ஆயுதங்களை கையாளும் போதும் கவனம் அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

விருச்சிகம்: இன்று எண்ணியதை செய்து முடிக்க முடியாமல் தடங்கலை உண்டாக்கும். தொழில், வியாபாரத்தில் சிக்கல்கள் தீர பாடுபடுவீர்கள். புதிய ஆர்டர் பிடிக்க அதிகம் அலையவேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். செயல் திறன் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

தனுசு: இன்று குடும்பத்தில் இருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இடைவெளி குறைய மனம் விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் எதிர்கால நலனுக்காக பாடுபட வேண்டி இருக்கும். உங்களது செயல்களில் மற்றவர்குறை காண நேரலாம். தெய்வ பக்தி அதிகரிக்கும். பயணம் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 7

மகரம்: இன்று பணவரத்து திருப்திதரும். எதிர்பாராத திருப்பம் உண்டாகும். சிந்தித்து செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். பயணங்களின் போதும் வாகனங்களை ஓட்டி செல்லும் போதும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கும்பம்: இன்று புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் வருமானம் வழக்கம் போல் இருக்கும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து நிதானமாக நடந்து கொள்வது வியாபாரம் நன்கு நடக்க உதவும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 5

மீனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் திட்ட மிட்டு செய்யும் காரியங்கள் நல்ல பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். உறவினர்களுடன் அனுசரித்து செல்வதும், வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 2, 3

 

 

admin

Recent Posts

Kadalaadum Seemayile Video Song

Kadalaadum Seemayile Video Song | Enna Vilai | Karunaas |Nimisha | Sam CS | Sajeev…

19 hours ago

Varnajaalam Tamil Lyric Video

Varnajaalam Tamil Lyric Video | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay | Girish AD |…

19 hours ago

“எல்லோரும் கார்த்தியை சர்தாராக பார்க்கிறார்கள்; இது ஒரு நடிகனுக்கு கிடைத்த ஆசீர்வாதம்!” – சூர்யா

பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில்…

3 days ago

ராஷ்மிகா மந்தனாவின் பிரம்மாண்ட பான் இந்தியா ஆக்‌ஷன் டிராமா ‘மைசா’ – ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகை ராஷ்மிகா மந்தனா இதுவரை ஏற்றிராத வகையிலான சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வரும் திரைப்படம் ‘மைசா’. அறிமுக இயக்குநர் ரவீந்திர…

3 days ago

“தனுஷ் தான் என் ஒரே ஃபேவரிட்!” – ரசிகரின் கேள்விக்கு கயாடு லோஹர் ஓபன் டாக்!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கவனம் ஈர்த்து வரும் நடிகை கயாடு லோஹர், சமீபத்தில் சமூக வலைத்தளம் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடினார்.…

3 days ago

டெல்லி சிறுமி பாலியல் வன்கொடுமை: கொதித்தெழுந்த பூமி பெட்னேகர்!

தலைநகர் டெல்லியில் 16 வயது சிறுமி ஓடும் பேருந்தில் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவம் நாடு முழுவதும் பெரும்…

3 days ago