மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் விழிப்புடன் இருப்பது நன்மைதரும். எதிர்காலம் பற்றிய சிந்தனையும் மனக்கவலையும் ஏற்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாகனங்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசாங்க தொடர்புடைய முக்கிய நபர்களின் அறிமுகம் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
ரிஷபம்: இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு குழப்பங்கள் உண்டாகலாம். உங்கள் பேச்சை சரியாக புரிந்து கொள்ளாமல் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. ஆன்மிக பணிகளில் கவனம் செல்லும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
மிதுனம்: இன்று புதிய காரியங்களில் ஈடுபடுவதை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து தாமதப்படலாம். எந்த வாக்குறுதியும் அளிக்காமல் இருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்காலம் கல்வி பற்றிய சிந்தனை அதிகரிக்கும். தேவையான உதவிகள் கிடைக்கும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
கடகம்: இன்று மற்றவர் செய்த நன்றியை மறக்காமல் தக்க நேரத்தில் அவர்களுக்கு உதவுவீர்கள். எதையும் ஒரு முறைக்கு இருமுறை நன்கு யோசித்து செய்வது வெற்றியை தரும். வீண் செலவை குறைப்பது நல்லது. அடுத்தவருக்கு உதவி செய்யப் போய் அதனால் அவச்சொல் உண்டாகலாம் கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான பணிகளை கவனமுடன் செய்வது நல்லது. பயன்தராத முயற்சிகளை கைவிடுவது நன்மை தரும். வீண் அலைச்சல் உண்டாகலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகள் கொடுத்த பணியினை முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் செய்கை கோபத்தை தூண்டுவதாக இருக்கும். கவனம் தேவை. அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
கன்னி: இன்று குடும்பம் தொடர்பான காரியங்களை பொறுப்பாக செய்வது நல்லது. அடுத்தவரை நம்பி எதையும் விடாமல் நேரடியாக செய்வது நன்மை தரும். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. வேகம் காட்டாமல் விவேகமாக செயல்படுவது வெற்றிக்கு உதவும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
துலாம்: இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து அதன்பிறகு அதில் ஈடுபடுவது நல்லது. வீண் முயற்சிகளை தவிர்ப்பதும் நன்மை தரும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான அலைச்சல் உண்டாகலாம். ஆசிரியர் ஆலோசனைப்படி எதையும் செய்வது எதிர்காலத்துக்கு நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை அதிர்ஷ்ட எண்கள்: 9, 3
விருச்சிகம்: இன்று அடுத்தவரின் குணம் அறிந்து அதற்கு ஏற்றார்போல் பழகுவீர்கள். அதிகமான சுகபோகத்தால் உடல் ஆரோக்யம் கெடலாம் கவனம் தேவை. காரிய தடை தாமதம் ஏற்படும். புதிய முயற்சிகளை தள்ளிபோடுவது நல்லது. பணவரத்து கூடுதலாக இருக்கும். கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
தனுசு: இன்று நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள். தொழில் வியாபாரம் தொடர்பான செலவு அதிகரிக்கலாம். வாடிக்கையாளர் எண்ணிக்கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த பணி தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்க பெறுவார்கள். அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6
மகரம்: இன்று பூமி, மனை தொடர்பான தகராறுகள் நீங்கி அதன் மூலம் லாபம் கிடைக்கலாம். குடும்பத்தில் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் அமைதி உண்டாகும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து செல்வதன் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். சகோதரர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 7
கும்பம்: இன்று பிள்ளைகளுடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். எந்த ஒரு காரியத்திலும் தயக்கம் இல்லாமல் ஈடுபடுவீர்கள். கடன் தொல்லை தராது. பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துவதன் மூலம் எதிர் காலத்தில் நினைத்தபடி மேற்படிப்பை தொடர முடியும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
மீனம்: இன்று கடன் தொடர்பான முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். முக்கியஸ்தர்கள் நட்பு கிடைக்கும். புதிய தொடர்புகள் மூலம் மகிழ்ச்சி உண்டாகும். கௌரவம் அந்தஸ்து உயரும். அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]
[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]
[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]