மேஷம்: இன்று கடன் பிரச்சனை கட்டுக்குள் இருக்கும். பிள்ளைகளிடம் அனுசரித்து செல்வது நல்லது. திடீர் செலவுகள் உண்டாகும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
ரிஷபம்: இன்று அன்னிய மனிதர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வெளிநாடு செல்வதில் எதிர்பாராத சிக்கல் ஏற்படலாம். கவனம் தேவை. நண்பர்களிடம் பழகும் போது எச்சரிக்கை அவசியம். கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி வாக்குவாதங்கள் உண்டாகலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மிதுனம்: இன்று கடன் கொடுப்பது, பைனான்ஸ் போன்றவற்றில் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. எதிலும் மிகவும் கவனமாக செயல்படுவது நல்லது. அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கடகம்: இன்று சிறுவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடும் போது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பிரவுன்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சிம்மம்: இன்று கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது. எதிலும் நிதானம் தேவை. உங்களுக்கு வருமானம் அதிகரிக்கும். வசதிகள் பெருகும். உறவினர்களுடன் சுமுக நிலை காணப்படும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 6
கன்னி: இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். மரியாதையும், அந்தஸ்தும் உயரும். தந்தை மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். புண்ணிய தலங்களுக்கு சென்று வருவீர்கள். காரிய வெற்றி உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 9
துலாம்: இன்று தொழில் தொடர்பான பிரச்சனைகள் தீரும். முன்னேற்றம் காணப்படும். வாடிக்கையாளர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது. பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்: இன்று வேலைப்பளு வீண் அலைச்சல் உண்டாகும். உடல் ஆரோக்யம் பெறுவீர்கள். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும். குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் நீங்கி கலகலப்பு உண்டாகும். பொருள் சேர்க்கை உண்டாகும். வார்த்தைக்கு மற்றவர்களிடம் மதிப்பு இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9
தனுசு: இன்று சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். உங்கள் ஆலோசனை கேட்டு மற்றவர்கள் உங்களை நாடி வருவார்கள். சகோதரர்களால் நன்மை உண்டாகும். மனதில் உறுதி ஏற்படும். பிள்ளைகளுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 6
மகரம்: இன்று எதிர்ப்புகள் விலகும். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் ஏற்படலாம். செலவும் அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை இருக்கும். வாகனங்களில் செல்லும் போதும் தீ, ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6
கும்பம்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் மனஸ்தாபம் உண்டாகலாம். கவனம் தேவை. சற்று கவனமாக எதையும் செய்வது நல்லது. சிக்கனத்தை கடைபிடிப்பது நன்மை தரும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. எதிலும் நிதானம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6
மீனம்: இன்று பொருள் சேர்க்கை உண்டாகும். மாணவர்கள் வாகனத்தில் செல்லும் போது மிகவும் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. திட்டமிட்டு பாடங்களை படிப்பது கல்வியில் வெற்றிக்கு உதவும். ஆசிரியர்களிடம் இருந்து வரும் நல்லுறவு நீடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…