Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 14– 12 – 2023

மேஷம்: இன்று கெட்டது எது என்று பிரித்து பார்த்து செயல்படுவீர்கள். எதிர்பாராத சில திருப்பங்களால் காரிய வெற்றி கிடைக்கும். மனைவி, பிள்ளைகளாலும் மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். உடல் சோர்வு, எதிலும் சுறுசுறுப்பாக ஈடுபட முடியாத சூழ்நிலைகள் உண்டாகும். உற்றார்- உறவினர்களின் ஆதரவற்ற நிலைகளால் மனக்குழப்பங்கள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

ரிஷபம்: இன்று வழக்கு விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.எதிர்பாராத பயணங்கள் உண்டாகி தேவையற்ற அலைச்சல், டென்ஷன் அதிகரிக்கும். உணவு விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது. குடும்பம், பொருளாதாரநிலை விசயத்தில் அடுத்தவர் தலையீடு வேண்டாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

மிதுனம்: இன்று தொழிலில் முன்னேற்றம் காண வாய்ப்புகள் வந்து சேரும். நிதானமாக பேசுவதன் மூலம் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் குறையும். குடும்பத்தில் வீண் வாக்குவாதங்களால் ஒற்றுமைக்குறைவுகள் உண்டாகும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகளும், புத்திரர்களால் மனநிம்மதியற்ற நிலையும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கடகம்: இன்று பணவரவுகள் ஏற்ற இறக்கமாக இருக்கும் என்பதால் குடும்பத்தேவைகளைப் பூர்த்திசெய்ய கடன் வாங்க நேரிடும். முடிந்தவரை ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது உத்தமம். நெருங்கியவர்களை அனுசரித்து நடந்து கொண்டால் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். வீடு, மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எந்தவொரு காரியத்திலும் சிந்தித்துச் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கன்னி: இன்று சிலர் கட்டளையிடுகின்ற பதவி கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த பண உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள்.கொடுக்கல் -வாங்கலில் மிகவும் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். பணவிஷயத்தில் பிறரைநம்பி முன்ஜாமீன் கொடுப்பதும், வாக்குறுதிகளைக் கொடுப்பதும் வீண் பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும். வம்பு வழக்குகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

துலாம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நெருக்கடிகளும், போட்டிகளும் ஏற்படும் என்றாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றலும் உண்டாகும். வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்தமுடியாத சூழ்நிலைகளும் ஏற்படும். வழக்குகளை தள்ளிப் போடுவதும் சமாதான முறையில் பேசி தீர்த்துக்கொள்வதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

விருச்சிகம்: இன்று கூட்டாளிகளின் ஒற்றுமையற்ற செயல்பாட்டால் அபிவிருத்தி குறையும் என்பதால் முடிந்தவரை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. பெரிய முதலீடுகளில் செய்ய நினைக்கும் எந்தவொரு காரியத்திலும் சற்று சிந்தித்துச் செயல்படுவது உத்தமம். பெண்களுக்கு தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர் கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

தனுசு: இன்று தொழில்ரீதியாக மேற்கொள்ளும் பயணங்களாலும் வீண் அலைச்சல்கள் ஏற்பட்டாலும் அதன்மூலம் அனுகூலப்பலனை அடையமுடியும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலைப்பளு அதிகரித்தாலும் எடுக்கும் பணிகளை சரிவரச்செய்து முடிக்க முடியும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கூடுதல் முயற்சி மேற்கொள்வது நல்லது. சக மாணவர்களுடன் நிதானமாக பேசி பழகுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

மகரம்: இன்று எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் தடை தாமதங்களுக்குப்பின் கிடைக்கும். உடன்பணிபுரிபவர்களை அனுசரித்து நடந்து கொள்வதன்மூலம் வீண் பிரச்சினைகள் உண்டாவதைத் தவிர்க்க முடியும். சில நேரங்களில் பிறர் செய்யும் தவறுகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கும்பம்: இன்று வீண் மனசஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. அதிகநேரம் உழைக்க வேண்டியிருப்பதால் உடல்நிலை சோர்வடையும். அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டி இருக்கும். எதிர்பாராத இடமாற்றங்களால் அலைச்சல்கள் அதிகரிக்கும். பெண்கள் உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் உண்டாகி மருத்துவச்செலவுகளை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மீனம்: இன்று திருமண சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் அனுகூலம் உண்டாகும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை சுமாராக இருக்கும். தாய் வழி உற்றார்-உறவினர்களை அனுசரித்துச்செல்ல வேண்டிவரும். மாணவர்களுக்கு கல்வி பற்றிய வீண்பயம் ஏற்பட்டு நீங்கும். வாகனங்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

 

admin

Recent Posts

திருமணம் எப்போது? ஜாலியாக பதில் சொன்ன அதர்வா..!

நடிகர் முரளியின் மகனான அதர்வா பானா காத்தாடி மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனைத் தொடர்ந்து சண்டிவீரன், பரதேசி,…

38 minutes ago

மனைவியுடன் ஃபன் பண்ணும் வீடியோவை வெளியிட்ட இயக்குனர் அட்லி.. வீடியோ வைரல் .!!

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. அதனைத்…

55 minutes ago

மதராசி : 5 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா? வைரலாகும் தகவல்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…

1 hour ago

காலில் விழுந்து கெஞ்சிய முத்து, மீனா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ஸ்கூல் மேனேஜர்…

3 hours ago

சுந்தரவல்லி வீட்டுக்கு வந்த டாக்டர்,அருணாச்சலம் கேட்ட கேள்வி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு ராஜா,…

4 hours ago

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள்..!

மல்லிகை பூவில் இருக்கும் மருத்துவ நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று…

21 hours ago