Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 14 – 03 – 2022

மேஷம்: இன்று அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம். குழந்தைப்பேறு இல்லாத சில தம்பதியர் குழந்தை பாக்கியத்தை அடைவார்கள். அரசியல் பிரமுகர்கள் பொதுமக்களிடம் நல்ல மதிப்பும் மரியாதையும் அடைவார்கள். பொறுமையுடன் செயல்பட்டு காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமைப்படுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5

ரிஷபம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொல்லை கொடுத்துவந்த உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். உடன்பிறந்தவர்களால் ஏற்பட்ட பிரச்சினைகள் சுமுகமாகும். தொழிலதிபர்கள் தொழிலாளர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. லாபத்திற்குக் குறைவில்லை. வியாபாரிகளுக்கு பழைய நிலுவைகள் அனைத்தும் வந்துசேரும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

மிதுனம்: இன்று வியாபாரத்தில் நல்ல மேன்மையையும் லாபத்தையும் அடைவீர்கள். தங்கவேலை செய்யும் தொழிலாளர்கள் கூடுதல் சம்பளம் பெறுவீர்கள். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதியர் சிலர் குழந்தை பாக்கியத்தை அடைவீர்கள். இளைஞர்கள் தக்க வேலைவாய்ப்பைப் பெறுவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். தூரத்திலிரிந்து அனுகூலச் செய்திகளைப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 5, 9

கடகம்: இன்று உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் பாராட்டைப் பெறுவார்கள். வரவேண்டிய நிலுவைகள் வந்துசேரும். அரசியல் தலைவர்கள் பரபரப்பாக இருப்பார்கள். பொருளாதாரம் சீராக இருக்கும். பிரிந்துசென்ற சொந்தங்கள் வலிய வந்துசேரும். பிள்ளைகளுக்கு நினைத்தபடி உயர்கல்வி அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்: 1, 3, 9

சிம்மம்: இன்று தொழிலதிபர்கள் வெளிநாடுகளில் தொழில் துவங்க போட்ட திட்டம் நிறைவேறும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் மிகவும் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அவர்களால் சில பிரச்சினைகளை சந்திக்க நேரலாம். உடன்பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். பூர்வீக சொத்துகளில் இருந்துவந்த பிரச்சினைகள் அகலும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 3, 6, 9

கன்னி: இன்று வழக்குகள் வெற்றியைத் தரும். வியாபாரிகள், சக வியாபாரிகளால் ஏற்பட்ட போட்டிகள் மறைந்து வியாபாரத்தில் அதிக லாபம் பெறுவார்கள். நண்பர்கள் ஆதரவு கிடைக்கும். சந்தித்து வந்த தடை, தாமதங்கள் விலகிச்செல்லும். திருப்தியான பணவரவுகள் உண்டு. தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். கணவன்- மனைவியிடையே இருந்துவந்த கருத்துவேறுபாடுகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 6, 9

துலாம்: இன்று தொழிலதிபர்கள் நினைத்தபடி, தொழிலாளர்கள் ஒற்றுமையோடு உற்பத்தியைப் பெருக்குவார்கள். காவல்துறையில் பணிபுரியும் ஒருசிலர் திடீர் மாறுதல்களைப் பெறுவார்கள். அரசு ஊழியர்கள் எதிர்பார்த்த மாறுதல் தள்ளிப்போகும். வியாபாரிகள் செய்த கொள்முதல் அனைத்தும் விற்பனை ஆகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 2, 7

விருச்சிகம்: இன்று மிகச் சிறந்த பலன்களை உழைப்பின் மூலம் அடையும் நாளிது. நண்பர்களுக்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீர்கள். குடும்பத்தில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும். மழலைச் செல்வம் இல்லாதவர்களுக்கு அந்தப் பாக்கியம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 9, 3

தனுசு: இன்று திருமணப் பேச்சுகள் கைகூடும். பெற்றோர்கள் வழியில் இருந்துவந்த மருத்துவச் செலவுகள் குறையும். பிரிந்துசென்ற தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். மாணவர்கள் எண்ணம் ஈடேறும். வீடு மனை தொடர்பான அலுவல்கள் அனுகூலமாக அமையும். அரசியல் பிரமுகர்கள் தலைமையால் பாராட்டப்படுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 4, 6

மகரம்: இன்று உங்களுக்கு குடும்ப உறுப்பினர்களின் ஒத்துழைப்பு கூடும். பிரிந்த தம்பதியர் ஒன்றுசேர்வார்கள். இதுவரை வீட்டில் தடைப்பட்டு வந்த சுபகாரியப் பேச்சுகள் இனிதே நடக்கும். தொழிலதிபர்கள் உற்பத்திப் பொருட்களால் நல்ல லாபத்தை அடைவார்கள். வெளிநாடு செல்ல திட்டமிட்டவர்களின் எண்ணம் ஈடேறும். இளைஞர்கள் புதிய வேலைவாய்ப்புகளைப் பெறுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கும்பம்: இன்று வாகனப் பராமரிப்புச் செலவுகள் கூடும். உத்தியோகஸ்தர்கள் நினைத்தபடி மாறுதலை அடைவார்கள். இதுவரை தொல்லைகொடுத்த நோய் விலகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். மகான்களின் தரிசனம் கிட்டும். பெற்றோர் வழியில் ஏற்பட்ட மருத்துவச் செலவுகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மீனம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களுடன் சிறு சிறு வாக்குவாதங்கள் உண்டாகலாம் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படும் நிலை உருவாகலாம். பிள்ளைகளுடன் பேசும் போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. அக்கம்பக்கத்தில் இருப்பவர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 3, 6

 

admin

Recent Posts

Senjudare Lyrical Video

Senjudare Lyrical Video | OM | Sreeleela | Dhanush | Sai Pallavi | Mammootty |…

1 day ago

Sakkarai Penne Lyrical Video

Sakkarai Penne Lyrical Video | Sathyavan Savithiri | Keerthy Suresh | Praveen | Sam CS

1 day ago

Adra Parama Lyrical Video

Adra Parama Lyrical Video | Raawadi | Basil Joseph | LK Akshay Kumar | Jen…

1 day ago

Iruvar Lyrical Video

Iruvar Lyrical Video | Nivas K Prasanna, Aditi Shankar | Vijay Sethupathi | Kumaran

1 day ago

ரஜினியின் ‘தர்மன்’ படத்தில் இணைந்த நடிகை ஸ்ரீலீலா… அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் ‘தர்மன்’ திரைப்படத்தில்…

2 days ago

சந்தானத்தின் ‘லவ் பைட்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடித்துள்ள ‘லவ் பைட்’ திரைப்படம் வரும் டிசம்பர் 18ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் எனப் படக்குழு…

2 days ago