Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 13– 12 – 2023

மேஷம்: இன்று தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். கலைஞர்கள் கையிலிருக்கும் வாய்ப்புகளை நழுவவிடாமல் பாதுகாத்துக்கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் ஓரளவுக்கு முன்னேற்றம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

ரிஷபம்: இன்று சுபகாரியங்கள் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தாராள தனவரவுகளால் குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும். புத்திரவழியிலும் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களின் பெயர், புகழ், உயரும். பெண்களுக்கு எந்த காரியத்தையும் கூடுதல் கவனத்துடன் செய்வது நல்லது. அடுத்தவர்களுக்கு உதவி செய்யும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

மிதுனம்: இன்று உற்றார்-உறவினர்களின் ஆதரவுகள் சிறப்பாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறுசிறு பாதிப்புகள் தோன்றி மறையும். கணவன்- மனைவி இடையே ஒற்றுமை சிறப்பாக இருக்கும். உத்தியோகஸ்தர்களும் பணியில் திருப்தியான நிலையை அடைவார்கள். மாணவர்களுக்கு பாடங்களை மிகவும் நிதானமாக படித்து மனதில் பதிய வைத்துக்கொள்வது நல்லது. அடுத்தவர்களிடம் பழகும்போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

கடகம்: இன்று பதட்ட குணத்தை கைவிடுவது முன்னேற்றத்துக்கு உதவும். காரிய தாமதம் உண்டாகும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்கள் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும். தொழில், வியாபார ரீதியாக புதிய முயற்சிகளில் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு எதிர்பார்த்த பணவரவுகள் கிடைக்கப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

சிம்மம்: இன்று பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக அமையும். கொடுக்கல்-வாங்கல் போன்றவற்றில் பெரிய தொகை ஈடுபடுத்தி லாபம் காண்பீர்கள். கடன்கள் குறையும். கலைஞர்கள் வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்பினைப் பெறுவார்கள். ஏதாவது ஒருவகையில் மனகுழப்பம் ஏற்பட்டு நீங்கும். சாதாரணமாக பேசப்போக அது சண்டையாக மாறலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

கன்னி: இன்று வேளை தவறி உணவு உண்ண வேண்டி இருக்கும். பொருட்களை கவனமாக பார்த்துக் கொள்வது நல்லது. பொருளாதாரநிலை சிறப்பாக இருக்கும் என்றாலும் தேவையற்ற வீண் விரயங்களும் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் வயிறு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் உண்டாகி மருத்துவச் செலவுகளை ஏற்படுத்தும் என்பதால் உணவு விஷயத்தில் மிகவும் கவனம் செலுத்துவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

துலாம்: இன்று கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடுகள், குடும்பத்தில் உள்ளவர்களிடம் ஒற்றுமையற்ற நிலை உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பாக அலைச்சல் ஏற்படும். வாடிக்கையாளர்களுக்கு சரக்குகளை அனுப்பும் போது பாதுகாப்பாக அனுப்புவது நல்லது. முயற்சிகளிலும் தடை தாமதங்கள் ஏற்படும். தேவையற்ற அலைச்சல், டென்ஷன் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

விருச்சிகம்: இன்று பண விஷயத்தில் பிறருக்கு வாக்குறுதி கொடுப்பது, முன்ஜாமீன் கொடுப்பதைத் தவிர்ப்பது உத்தமம். எதிர்நீச்சல் போட்டாவது வெற்றியினைப் பெற்றுவிடுவீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்துக்கொண்டால் கடனில்லாத கண்ணிய வாழ்க்கை அமையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலை பளு காரணமாக அலைய வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடிவரும். குடும்பத்தினருடன் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே மனவருத்தம் ஏற்படலாம். புதிய ஒப்பந்தங்களில் கையழுத்திடும் வாய்ப்பினைப் பெறுவீர்கள். போட்டி பொறாமைகளை சமாளிக்கக்கூடிய ஆற்றலும் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

மகரம்: இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் மட்டும் கவனம் செலுத்துவது வீண்பிரச்சினைகளைத் தவிர்க்க உதவும். எதிர்பார்க்கும் உயர்வுகள் சில தடைகளுக்குப்பின் அமையும். கலைஞர்கள் எதிர்பார்த்த கதாபாதிரங்களுக்கான வாய்ப்பினைப் பெறுவார்கள். அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் அன்புடன் பேசுவது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

கும்பம்: இன்று பயணங்களால் சற்றே அலைச்சல்கள் அதிகரித்தாலும் அதன்மூலம் அனுகூலமானப் பலன்களும் உண்டாகும். அரசியல்வாதிகள் மேடை பேச்சுகளில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது, மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவது உத்தமம். குடும்பத்தில் திடீர் செலவு ஏற்படும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து அதன் மூலம் அவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

மீனம்: இன்று கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படக்கூடிய காலம் என்பதால் ஆரோக்கிய விஷயங்களில் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் அதிக அக்கறையோடு படித்தால் எதிர்பார்த்த மதிப்பெண்களைப் பெற்று வாழ்வில் உயர்வினை அடையமுடியும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

 

admin

Recent Posts

ஒரே இடத்தில் இவ்வளவு Collections-ஆ? – வேலவன் ஸ்டோர்ஸில் சல்மா அருண் உற்சாக Shopping!

‘சிறகடிக்க ஆசை’ சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான நடிகை சல்மா அருண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான்…

3 hours ago

Trending சேலைகளை பார்த்து அசந்த சியமந்த கிரண்… வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாக Shopping!

சின்னத்திரையில் பிரபலமான நடிகை சியமந்த கிரண், சென்னை தியாகராய நகர், நார்த் உஸ்மான் ரோட்டில் அமைந்துள்ள வேலவன் ஸ்டோர்ஸில் உற்சாகமாக…

3 hours ago

அன்பில் அவன் படத்தை தயாரித்ததில் பெருமை.. அசோக் செல்வன் நெகிழ்ச்சி!

ஆர். கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன், பிரீத்தி முகுந்தன் நடிப்பில் உருவான ‘அன்பில் அவன்’ திரைப்படம் கடந்த 2-ம் தேதி…

8 hours ago

ஜெயிலர் – 2 திரைப்படத்துக்கு யு/ஏ சான்றிதழ்!

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ‘ஜெயிலர்’ படத்தின் இரண்டாம்…

9 hours ago

அக்டோபர் 23-ல் வெளியாகும் ‘டெலிவரி பாய்’.. ஹீரோவாக அறிமுகமாகும் லியோ சிவகுமார்!

ராதிகா சரத்குமார், லியோ சிவகுமார் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டெலிவரி பாய்’ திரைப்படம் வரும் அக்டோபர் 23-ம் தேதி…

9 hours ago

ரசிகர்கள் உன்னுடன் இருப்பார்கள்… ஆனால் நீ சினிமாவில் நிலைத்து நிற்பாயா? – சிவகார்த்திகேயனுக்கு தயாரிப்பாளர் வைத்த சவால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வரும் சிவகார்த்திகேயன், சமீபத்தில் நடைபெற்ற ரசிகர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தனது திரைப்…

9 hours ago