Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 11 – 10 – 2021

மேஷம்: இன்று உடல் ஆரோக்கியம் உண்டாகும். பூமி, வீடு தொடர்பான பிரச்சனைகள் நல்ல முடிவுக்கு வரும். சகோதரர்களுடன் இருந்த மனவருத்தங்கள் நீங்கும். கோபம், படபடப்பு குறையும். எதிர்பாராத செலவு உண்டாகலாம். அவ்வப்போது மனதில் குழப்பம் ஏற்படும். தாயின் உடல்நிலையில் கவனம் தேவை. வீண் செலவுகள் உண்டாகும். எதிர்பார்த்த இடமாற்றம் உண்டாகலாம். தேவையற்ற மன சஞ்சலம் உண்டாகலாம். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் திடீர் சிக்கல் ஏற்பட்டு சரியாகும். பணவரத்து தடைபட்டாலும் வந்து சேரும். வியாபார பொறுப்புகளை மற்றவர்களிடம் ஒப்படைக்கும் போது கவனம் தேவை. உத்தியோகஸ்தர்கள் அலுவலக பொறுப்புகளை கவனமாக செய்வது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வதன்மூலம் அமைதி ஏற்படும். விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 9

மிதுனம்: இன்று இயந்திரங்களில் பணி புரிபவர்கள் ஆயுதங்களை கையாள்பவர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது செயல்படுவது அவசியம். குடும்பத்தில் இருப்பவர்களது பேச்சுக்கு எதிர்த்து பேசுவதை தவிர்ப்பது நன்மை தரும். கணவன், மனைவிக் கிடையே வீண்வாக்குவாதங்கள் ஏற்படலாம். பிள்ளைகளிடம் அன்பாக பழகுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்: இன்று கோபம், படபடப்பு குறையும். மற்றவர்களுடன் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். திடீர் செலவு உண்டாகலாம். உயர்கல்வி படிப்பவர்களுக்கு திடீர் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். வாகனங்கள் மூலம் செலவு உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இடமாற்றம் பதவி உயர்வு கிடைக்க பெறுவார்கள். எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்கள் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 7

சிம்மம்: இன்று எல்லா நன்மைகளும் உண்டாகும். வீண் அலைச்சல் குறையும். கோபமான பேச்சு, டென்ஷன் குறையும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகும். சகோதரர் வழியில் நன்மை உண்டாகும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். புத்தி சாதுரியமும், வாக்குவன்மையும் அதிகரிக்கும். முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பணவரத்து அதிகப்படும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பழைய பாக்கிகள் வசூலாகும். வியாபாரம், தொழில் தொடர்பான கடிதபோக்கு சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, வெளிர் மஞ்சள், பச்சை அதிர்ஷ்ட எண்கள்: 2, 7, 9

கன்னி: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் பணியாளர்கள் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். லாபம் கூடும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பரபரப்பு நீங்கி அமைதியாக பணிகளை கவனிப்பார்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர் பிரவுண் அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

துலாம்: இன்று குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த சங்கடங்கள் தீரும். பிள்ளைகள் கல்வி பற்றிய கவலை நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருட்கள் வாங்க முற்படுவீர்கள். மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். மேற்படிப்பு படிக்கும் ஆர்வம் உண்டாகும். கல்விக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். பெண்கள் எந்த ஒரு வேலையையும் மனதிருப்தியுடன் செய்வீர்கள். சாமர்த்தியமான பேச்சின் மூலம் காரிய வெற்றி உண்டாகும். பணவரத்து கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

விருச்சிகம்: இன்று எடுத்த காரியத்தை எப்படியும் முடித்து விட வேண்டும் என்பதில் மன உறுதி காணப்படும். கொடுக்கல், வாங்கல் விவகாரங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண எதிர்பார்த்த உதவி கிடைக்கும். மனகுழப்பம் நீங்கி படிப்பில் கவனம் செலுத்துவீர்கள். நண்பர்கள், உறவினர்கள் வருகை இருக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும் அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9

தனுசு: இன்று வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் அமைதி நிலவும். திடீர் கோபம் உண்டானாலும் சமாளித்து விடுவீர்கள். எடுத்த காரியம் உடனே முடியவில்லையே என்ற டென்ஷன் இருக்கும். எதிர்பாராத வீண் செலவு ஏற்படலாம். வீண்பழி வர வாய்ப்பு உள்ளதால் எதிலும் கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்த்து சாதாரணமாக பேசுவது நல்லது. வாழ்க்கை துணையுடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும். அதிர்ஷ்ட நிறம்: நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 5, 6

மகரம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வாடிக்கையாளர்களுடன் வாக்குவாதம் போன்றவை உண்டாகலாம். பழைய பாக்கி வசூலாவதில் தாமதம் உண்டாகலாம். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள்: 1, 5, 7

கும்பம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளின் கெடுபிடிகளை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் திடீர் பிரச்சனைகள் தலைதூக்கலாம். கணவன், மனைவிக்கிடையே வாக்குவாதம், பிள்ளைகளின் செயல்களால் மனவருத்தம் போன்றவை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, பச்ச்சை அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மீனம்: இன்று வீட்டில் உள்ள பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. எப்படிப்பட்ட சிக்கலையும் சமாளிக்கும் மனபக்குவம் உண்டாகும். எந்த சூழ்நிலையிலும் வாக்குவாதத்தில் ஈடுபடாமல் தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு எப்படி பாடங்களை படித்து முடிப்பது என்ற டென்ஷன் உண்டாகும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். அதிர்ஷ்ட நிறம்: வெண்மை, நீலம் அதிர்ஷ்ட எண்கள்: 6, 9

admin

Recent Posts

Sardar 2 Official Trailer

Sardar 2 Official Trailer (Tamil) | Karthi | SJ Suryah | Malavika Mohanan | PS…

8 hours ago

Gadi Mela Dheko Lyric Video

Gadi Mela Dheko Lyric Video | Kabhi Kabhi | Madan.N.Thulasingam | Tenma | Yasin Sherif…

9 hours ago

Muttayi Vandi Lyrical Video

Muttayi Vandi Lyrical Video Tamil | Bethlehem Kudumba Unit-Vishnu Vijay | Girish AD | Nivin…

9 hours ago

Sakkaraiye Video Song

Sakkaraiye Video Song | Hi | Nayanthara, Kavin | Jen Martin | Vishnu Edavan

9 hours ago

Pandi Muni Kekkudhu Lyrical Video

Pandi Muni Kekkudhu Lyrical Video | Lenin Pandiyan | Ilaiyaraaja | DD Balachandran

9 hours ago

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா? வெளியான புதிய தகவல்!

நடிகர் அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ படத்தில்…

12 hours ago