மேஷம்: இன்று தடைப்பட்ட சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். உடல்நிலை மிகவும் அற்புதமாக இருப்பதால் எடுக்கும் காரியங்களை மிகவும் சுறுசுறுப்புடன் செய்து முடிப்பீர்கள். உங்கள் செல்வம், செல்வாக்கு, பெயர், புகழ் யாவும் உயரும். வெளிவட்டாரத் தொடர்புகளால் உங்களுக்குப் பெருமை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
ரிஷபம்: இன்று மற்றவர்களுக்கு உதவி செய்து மனம் மகிழ்வீர்கள். பணவரவுகள் பலவழிகளில் தேடிவந்து உங்கள் பாக்கெட்டை நிரப்பும். பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும். சிலருக்கு நினைத்தவரை கைப்பிடிக்கும் பாக்கியமும், புத்திரபாக்கியமும் ஏற்படுவதற்கான அறிகுறிகளும் உண்டாகும். வண்டி, வாகனம், வீடு, மனை வாங்கக்கூடிய யோகம் அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
மிதுனம்: இன்று உத்தியோகஸ்தர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த சரியான சந்தர்ப்பங்கள் ஏற்படுவதால் மேலதிகாரிகளிடம் பாராட்டுதல்களைப் பெறுவார்கள். தொழில், வியாபாரத்தில் நல்லதொரு மேன்மை உண்டாகும். புதிய கிளைகள் நிறுவுவதற்கான சந்தர்ப்பங்களும் சிறப்பாக அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கடகம்: இன்று மாணவர்களின் கல்வித்திறன் உயரும். சேமிப்பு பெருகும். உடல்நிலையில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். எடுக்கும் காரியங்களை சுறுசுறுப்புடன் சிறப்பாகச் செய்து முடிப்பீர்கள். உற்றார்- உறவினர்களின் வருகையால் எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் மனநிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
சிம்மம்: இன்று சுபகாரிய முயற்சிகளில் தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். நீண்டகால வழக்குகள் ஒரு முடிவுக்கு வரும். நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். கொடுக்கல்-வாங்கல் மிகச்சிறப்பாக இருக்கும். புத்திரவழியில் சில வீண்செலவுகளும், மனசஞ்சலங்களும் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கன்னி: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடைய செயல்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. ஆன்மிக, தெய்வீக காரியங்களில் ஈடுபாடுகள் அதிகரிக்கும். உடன் பிறப்புகளால் ஓரளவுக்குச் சாதகமான பலனைப் பெறுவீர்கள். கடன்கள் சற்றுக் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
துலாம்: இன்று உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளை அனுசரித்துச் செல்வது நல்லது. எதிர்பாராத இடமாற்றங்களால் சிலருக்கு குடும்பத்தை விட்டுப் பிரிய நேரிடலாம். மாணவர்களின் கல்வித்திறன் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9
விருச்சிகம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் சற்றே கவனமுடன் செயல்படுவது நல்லது. தொழிலை அபிவிருத்தி செய்வதற்காக வாங்கிய கடன்களைத் திருப்பிச் செலுத்துவதில் தடை ஏற்படும். உத்தியோகஸ்தர்களின் உயர்வுகளில் தடைகள் ஏற்பட்டாலும் உடனடியாக ஒரு மாறுதல் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7
தனுசு: இன்று முயற்சிகளில் சில தடைகளுக்குப்பின் வெற்றி கிட்டும். கொடுக்கல்-வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் சாதகமான பலனைப் பெறமுடியும். குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதால் ஒற்றுமை குறையாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
மகரம்: இன்று பணவரவுகள் ஓரளவுக்கு சிறப்பாக இருக்கும். குடும்பத்தேவைகள் பூர்த்தியாகும். பூர்வீக சொத்துகளால் எதிர்பாராத வீண்விரயங்களைச் சந்திக்க நேரிடும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சற்றுத் தாமதமாக நல்ல வேலை அமையும். உடல் நிலையில் சிறுபாதிப்புகளால் மருத்துவச் செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
கும்பம்: இன்று மாணவர்கள் கல்வியில் சற்று ஈடுபாட்டுடன் கவனம் செலுத்துவது நல்லது. கலைஞர்களுக்கு வாய்ப்புகள் தாமதப்படும். பொருளாதாரநிலை மிகச்சிறப்பாக இருக்கும். மணவயதை அடைந்தவர்களுக்கு திருமணம் கைகூடும். சிலருக்கு நினைத்தவரையே கைப்பிடிக்கும் வாய்ப்பு அமையும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6
மீனம்: இன்று அசையும், அசையா சொத்துகள் வாங்கும் யோகம் உண்டாகும். புத்திரவழியில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்வீக சொத்துகளால் லாபம் உண்டாகும். நினைத்த காரியங்கள் நிறைவேறி மகிழ்ச்சியளிக்கும். உற்றார் -உறவினர்கள் சாதகமாக செயல்படுவார்கள். புரிந்துகொள்ளாமல் பிரிந்து சென்றவர்களும் தேடிவந்து நட்புக்கரம் நீட்டுவார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
தீபாவளி ஆஃபரில் ஷாப்பிங் செய்து துணிகளை அள்ளியுள்ளார் எதிர்நீச்சல் சீரியல் ஷெரின். நார்த் உஸ்மான் ரோடு, டி நகரில் அமைந்துள்ளது…
Veiyil Lyrical Video – Pulse Movie | Master Mahendran | Rishika Rajveer | Nawin Ghanesh…
God Mode Lyric Video | Karuppu | Suriya | RJB | Trisha | SaiAbhyankkar |…
Pagal Kanavu Official Teaser | Faisal Raj | Krishnanthu | Athira Santhosh | Shakeela |…
Aaryan Trailer Tamil | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
பருப்பு கீரை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…