Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 10– 12 – 2023

மேஷம்: இன்று சுபவிரைய செலவுகள் அதிகரிக்கும் கணவன் மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். கலைஞர்களுக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த கதாபாத்திரங்கள் கிடைக்கப்பெற்று உங்களின் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக அமையும். எதிலும் சற்று கவனமுடன் நடந்துகொள்வது, தேவையற்ற பயணங்களைத் தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்: இன்று சகோதரர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பிள்ளைகளால் டென்ஷன் ஏற்பட்டு நீங்கும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.உங்களின் உடல் ஆரோக்கியம் வெகுசிறப்பாக இருக்கும். இதுவரை இருந்துவந்த உடல்நலக் கோளாறுகள் யாவும் படிப்படியாக விலகும். மனைவி, பிள்ளைகளும் சுபிட்சமாக அமைவதால் மருத்துவச் செலவுகள் குறைந்து மகிழ்ச்சி உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்: இன்று எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் உண்டாகலாம். எல்லாப் பணிகளிலும் புதுத்தெம்புடனும், பொலிவுடனும் ஈடுபடுவீர்கள். எதிர்பாராத பயணங்களும் அதன்மூலம் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும். மனதில் உற்சாகம் பிறக்கும். . மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற தடைகளை சந்திக்க வேண்டி இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்: இன்று அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை குடும்ப வாழ்வில் குதூகலமும் பூரிப்பும் உண்டாகும். கடந்தகால சோதனைகள் விலகி மகிழ்ச்சி ஏற்படும். தடைப்பட்ட திருமண சுபகாரியங்கள் தடபுடலாக நிறைவேறும். பொருளாதாரநிலையும் மிகச்சிறப்பாக அமைவதால் பொன், பொருள், ஆடை, ஆபரணம் சேரும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: இன்று எண்ணியதை எப்பாடுபட்டாவது செயல்படுத்த வேண்டும் என்று செயல்படுவீர்கள். வீடு, மனை, வண்டி வாகனங்கள் வாங்கக்கூடிய யோகம் உண்டாகும். உற்றார்-உறவினர்களிடையே இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி நட்பு மலரும். குடும்பத்தில் சுபிட்சமும் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி: இன்று கோபத்தை குறைத்து கொள்வது நல்லது. வீண்பகை உண்டாகலாம். எனவே கவனமாக செயல்படுவது நல்லது. கொடுக்கல்-வாங்கல் சுமூகமாக நடைபெறும். கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் உள்ளவர்கள் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியும். கொடுக்கல்-வாங்கலிலும் சரளமான நிலை ஏற்பட்டு தாராளமான பணவரவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்: இன்று உங்களுக்கிருந்த வம்பு வழக்குகள் விலகி சாதகப்பலன் உண்டாகும். அடுத்தவரின் செயல்கள் உங்கள் கோபத்தை தூண்டுவதாக இருக்கலாம் அனுசரித்து செல்வது நன்மைதரும். பெரிய மனிதர்களின் ஆதரவுகள் தக்க சமயத்தில் உதவிகரமாக இருக்கும். தொழில், வியாபாரம் அபிவிருத்தி அடையும். கேட்ட இடத்தில் இருந்து பண உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: இன்று தொழில், வியாபாரத்தில் இதுநாள்வரை நிலவிய நலிவுகள் மறைந்து ஏற்றமான பலனை ஏற்படுத்தும். மறைமுக எதிர்ப்புகளும் போட்டி பொறாமைகளும் விலகும். கூட்டுத்தொழிலிலும் கூட்டாளிகளின் ஒற்று மையான செயல்பாட்டால் பெரிய முதலீடுகளையும் எளிதில் ஈடுபடுத்தி லாபம் காண முடியும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு: இன்று சிக்கலான சில விஷயங்களை சாதூரியமாக பேசி முடித்து விடுவீர்கள். வீண் பயத்தை தவிர்ப்பது நல்லது.வேலையாட்களாலும் பணவரவுகளும் ஆர்டர் களும் குவியும். வெளியூர், வெளிநாட்டுத் தொடர்புடையவைகளும் எதிர் பாராத ஏற்றத்தை ஏற்படுத்தும். புதிய கிளைகளை நிறுவும் நோக்கம் நிறைவேறும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்: இன்று கொடுத்த வாக்கை காப்பாற்றி அதன் மூலம் மதிப்பும், மரியாதையும் கிடைக்க பெறுவீர்கள். பணவரவு திருப்தி தரும். உத்தியோகம் நல்லபடியாக இருக்கும். சிலருக்கு ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி மகிழ்ச்சியாக இருப்பீர்கள். உடன் பிறந்தோர் உறு துணையாக இருப்பர். எளிதில் கோபப்படக்கூடிய நபர்கள் யாரிடமும் கவனமாக பேசுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்: இன்று உத்தியோகஸ்தர்களுக்குப் பணியில் எதிர்பார்க்கும் இடமாற்றங்கள் கிடைக்கப்பெற்று மகிழ்ச்சி உண்டாகும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிட்டும். உயரதிகாரிகளின் பாராட்டுதல்களும், உடனிருப்பவர்களின் ஒத்துழைப்புக்களும் எந்தக் காரியத்தையும் எளிதில் செய்து முடிக்கக்கூடிய ஆற்றலைக் கொடுக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்: இன்று தொழில் வியாபாரம் முன்பு இருந்ததை விட முன்னேற்றம் காண்பீர்கள். வெளியூர், வெளிநாடுகளுக்குச் சென்று பணிபுரிய விரும்புபவர்களின் நோக்கம் நிறைவேறும். புதிய வேலை தேடுபவர்களும் படிப்பிற்கேற்ப சிறப்பான வேலை வாய்ப்பினைப் பெறுவார்கள். பெண்கள் மனதுக்கு சந்தோசப் படக்கூடிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

 

admin

Recent Posts

ஆலியா பட் மெய்க்காப்பாளர் செயலால் கொந்தளித்த நெட்டிசன்கள்!

நடிகை ஆலியா பட்டை நேரில் பார்த்ததும் உற்சாகமடைந்த ரசிகர்கள், அவரைச் சூழ்ந்துகொண்டு புகைப்படம் எடுக்க முயன்றனர். அப்போது கூட்டத்தில் இருந்த…

2 hours ago

பிரபாஸ் போன்ற நல்ல மனிதரை பார்ப்பது அரிது – நடிகர் ஜிதின் குலாட்டி

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தொடர்ந்து பிரம்மாண்டமான படங்களில் நடித்து இந்திய அளவில் கவனம் ஈர்த்து வருகிறார். அந்த…

2 hours ago

மயோசிடிஸ் நோயால் என் அடையாளத்தையே இழந்துவிட்டதாக உணர்ந்தேன் – நடிகை சமந்தா

நடிகை சமந்தா, சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் தனக்கு ஏற்பட்ட மயோசிடிஸ் பாதிப்பு குறித்தும், அந்த காலகட்டத்தில் தான் எதிர்கொண்ட…

3 hours ago

தீபிகா படுகோனேவின் கர்ப்பகால போட்டோஷூட் வைரல்!

நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்ட தீபிகா படுகோனேவுக்கு, கடந்த 2024-ம் ஆண்டு செப்டம்பர் 8-ம் தேதி துவா…

4 hours ago

அஜித்துடனான பயணம் தான் என்னை உயர்த்தியது – எடிட்டர் விஜய் வேலுக்குட்டி

தமிழ் திரையுலகின் முன்னணி படத்தொகுப்பாளர்களுள் ஒருவராக வலம் வரும் விஜய் வேலுக்குட்டி, கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படத்தின்…

4 hours ago

Meesaya Murukku 2 Official Trailer

Meesaya Murukku 2 Official Trailer | Hiphop Tamizha | Khushbu Sundar | ACS Arun Kumar

20 hours ago