Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 10-08-2020

மேஷம்: இன்று வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை அதிர்ஷ்ட எண்கள் 5, 9

ரிஷபம்: இன்று முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா அதிர்ஷ்ட எண்கள் 1, 4, 6

மிதுனம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 1, 6, 9

கடகம்: இன்று குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 3, 5, 7

சிம்மம்: இன்று முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சனைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 2, 6, 9

கன்னி: இன்று மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரணகோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 2, 5

துலாம்: இன்று அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்தபணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9

விருச்சிகம்: இன்று குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சனை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 5, 9

தனுசு: இன்று அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும். அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம் அதிர்ஷ்ட எண்கள் 1, 3, 9

மகரம்: இன்று ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும்போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 2, 5

கும்பம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 2, 6, 9

மீனம்: இன்று குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும். அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு அதிர்ஷ்ட எண்கள் 3, 5, 7

admin

Recent Posts

சொந்த குரலில் பாட்டு பாடி அசத்திய காமெடி நடிகர் யோகி பாபு.!!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…

20 minutes ago

It’s Not Right ! Sarathkumar Speech Dude Thanks Giving Meet

https://youtu.be/8M_qU0YXY-I?t=7

24 minutes ago

பிக் பாஸில் வைல்ட் கார்டில் பங்கேற்க போகும் இரண்டு பிரபலங்கள் யார் தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

36 minutes ago

முத்து சொன்ன விஷயம், சத்யாவின் முடிவு என்ன? இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட் !!

தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சீதாவிற்காக அருண்…

60 minutes ago

Mysskin Speech at Mylanji Audio Launch

https://youtu.be/9ZN2NCgM4Ts?t=1

1 hour ago