Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 10 – 01 – 2022

மேஷம்: இன்று மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

ரிஷபம்: இன்று முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகாது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மிதுனம்: இன்று நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சார்ந்தவர்களுக்கு இந்த நாள் சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கடகம்: இன்று அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளியிடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய நபர்களால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

சிம்மம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன் கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி: இன்று குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் குருவின் இருப்பால் அவை நீங்குவதுடன் உடல் ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்: இன்று எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்: இன்று எல்லா நன்மைகளும் வந்து சேரும். மனோதிடம் உண்டாகும். சுபகாரியங்கள் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு: இன்று தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்: இன்று கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

கும்பம்: இன்று நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

மீனம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

admin

Recent Posts

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பிஸ்தா சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

14 hours ago

ரோபோ ஷங்கர் குறித்து எமோஷனலாக பதிவை வெளியிட்ட இந்திரஜா.!!

தமிழ் சினிமாவில் காமெடி நடிகர் ஆக கலக்கிய ரோபோ சங்கர் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வந்து படங்களின்…

14 hours ago

கண் முழித்த நந்தினி, சுந்தரவல்லி சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

14 hours ago

Right Movie Press Meet

[Best_Wordpress_Gallery id="1009" gal_title="Right Movie Press Meet"]

17 hours ago

Actor Vinay Rai Photos

[Best_Wordpress_Gallery id="1008" gal_title="Actor Vinay Rai Photos"]

17 hours ago

Kiss Me Idiot Movie Stills

[Best_Wordpress_Gallery id="1007" gal_title="Kiss Me Idiot Movie Stills"]

17 hours ago