Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 09 – 03 – 2022

மேஷம்: இன்று பணம் சம்பாதிக்கும் திறமை அதிகமாகும். தடைபட்டு வந்த காரியங்கள் அனைத்தும் சாதகமாக நடந்து முடியும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும். பெண்கள் எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது. எதிலும் கவனம் தேவை.
அதிர்ஷ்ட எண்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

ரிஷபம்: இன்று தொழில் வியாபாரத்தில் கூட்டுத் தொழில் செய்பவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஆவணங்கள் அனைத்தையும் ஒரு முறைக்கு இருமுறை வாசித்து வைத்துக் கொள்வது நல்லது. மாணவர்கள் மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம். வீண் விவகாரங்களை விட்டு விலகுவது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 3, 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

மிதுனம்: இன்று தொழிலில் போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். பணியாட்கள் மூலம் நன்மை ஏற்படும். சாமர்த்தியமான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களிடம் நன் மதிப்பை பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நேர்மையாக சிறப்பாக பணிகளை செய்து மேல் அதிகாரிகளிடம் பாராட்டுக்கள் கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 2, 9
அதிர்ஷ்ட நிறம்: நீலம்

கடகம்: இன்று மனதில் இனம் தெரியாத பயம் அவ்வப்போது வந்து போகும். அந்த நேரத்தில் இறை வழிபாட்டில் மனதைச் செலுத்துவது நன்மையைத் தரும். உத்தியோகஸ்தர்களுக்கு அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கு சாதனைகள் செய்யும் காலமிது. பணத்தை பாதுகாப்பது சம்பந்தப்பட்ட வேலைகளில் இருப்பவர்கள் கவனமுடன் கையாளவும்.
அதிர்ஷ்ட எண்: 9, 3
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை

சிம்மம்: இன்று உயர் பதவிகள் கிடைக்க கூடும். இருப்பினும் அதிக முயற்சிகள் எடுக்க வேண்டியதிருக்கும். அதீத உழைப்பு செய்ய வேண்டியதிருக்கும். சக ஊழியர்களுடன் கருத்து வேற்றுமை வரலாம். எதிலும் கருத்து சொல்லும் முன் யோசித்து சொல்வது சிறப்பு. குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்ப உறுப்பினர் மீண்டும் வந்து சேரலாம்.
அதிர்ஷ்ட எண்: 4, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

கன்னி: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். செயல்திறன் அதிகரிக்கும். குடும்பத்தில் திருமணம் போன்ற சுபகாரியங்கள் நடக்க வழிவகை நடக்கும். எல்லா வகையிலும் நன்மை ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன வருத்தம் நீங்கி மகிழ்ச்சியுடன் காணப்படுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 5, 6
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்

துலாம்: இன்று நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். எதிர்ப்புகள் அகலும். பணவரத்து கூடும். பிள்ளைகளுக்கு கல்வியில் வெற்றி உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிதாக செய்து முடிப்பீர்கள். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 3, 7
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்

விருச்சிகம்: இன்று மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும்.வீண் ஆசைகள் மனதில் தோன்றும். மனக்கஷ்டம் குறையும். ஆனால் செலவு அதிகரிக்கும். இடமாற்றம் உண்டாகலாம். வாழ்க்கை துணையின் உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பது நல்லது. கடன் தொல்லை ஏற்படலாம். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
அதிர்ஷ்ட எண்: 1, 7
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை

தனுசு: இன்று வேற்றுமொழி பேசுபவர்களின் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். ஆன்மிக நாட்டம் ஏற்படும். வீட்டிற்கு தேவையான எல்லா பொருட்களும் வாங்குவீர்கள். வழக்குகள் சாதகமான நிலையில் இருக்கும். புத்திரர்களிடம் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் காண கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். வாடிக்கையாளர்களின் ஆதரவு நீடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புதிய பதவி அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்க பெறுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 4, 5
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு

மகரம்: இன்று கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகளின் தேவையை பூர்த்தி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். அவர்கள் உங்களை மதிப்பது மனதுக்கு இதமளிக்கும். பெண்களுக்கு மனதில் வீண்குழப்பம் உண்டாகும். உங்களிடம் ஆலோசனை கேட்டு உங்களை நாடி சிலர் வரக்கூடும். உத்தியோகத்தில் உயர்வு பெற எடுக்கும் முயற்சிகள் நல்ல பலன் தரும். சக ஊழியர்களின் ஆதரவும் கிடைக்கும். மன அமைதி உண்டாகும். அரசாங்க காரிய அனுகூலம் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
அதிர்ஷ்ட எண்: 5
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை

கும்பம்: இன்று நன்மைகள் உண்டாகும். பணவரத்து இருக்கும். வாகனம் யோகத்தை தரும். பெரியோர்களின் உதவி கிடைக்கும். மனதில் தைரியம் உண்டாகும். எதிலும் தயக்கமோ, பயமோ ஏற்படாது. தொழில் வியாபாரம் நன்றாக நடக்கும். வாக்குவன்மையால் லாபம் அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான காரியங்கள் சாதகமான பலன்தரும்.
அதிர்ஷ்ட எண்: 2, 3
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்

மீனம்: இன்று மன நிம்மதியும், சந்தோஷமும் உண்டாகும். ஆடை ஆபரணங்கள் சேரும். மங்கள காரியங்கள் நடைபெறும். பிள்ளைகளுக்கு கல்வியில் இருந்த தடைநீங்கும். கடின உழைப்பும் முயற்சிகளில் வெற்றி பெறும் திறனும் அடைவீர்கள். நீண்ட நாட்களாக போட்டிருந்த திட்டம் முழுவதுமாக செயல்பட வாய்ப்பு உள்ளது. எதிர்த்து செயல்பட்டவர்கள் ஒதுங்கி விடுவார்கள்.
அதிர்ஷ்ட எண்: 3, 9
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்

 

 

admin

Recent Posts

Love Oh Love Official Teaser

Love Oh Love Official Teaser | Pavish Narayan | Naga Durga | Magesh Rajendran |…

24 minutes ago

Dark Official Trailer

Dark Official Trailer | Ajay Karthi | Sam CS | Kalyan K Jegan

1 day ago

43 வயதிலும் இளமையாக ஜொலிக்கும் திரிஷா… ரகசியம் என்ன?

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான திரிஷா, நாற்பதைக் கடந்த பிறகும் தனது இளமையான தோற்றம் மற்றும் உடற்தகுதியால் ரசிகர்களை…

1 day ago

சம்பளத்தை உயர்த்திய ஜான்வி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும், பாலிவுட்டின் முன்னணி இளம் நடிகைகளில் ஒருவருமான ஜான்வி கபூர், தற்போது இந்திய சினிமாவில் மிகவும்…

1 day ago

“முதலமைச்சர் விஜய் பதவியேற்றது அனைத்து துறைகளுக்கும் நல்லது” – மாசாணியம்மன் கோவிலில் ஆர்.ஜே. பாலாஜி பேட்டி

நடிகர் சூர்யா நடிப்பில், ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘கருப்பு’ திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி…

1 day ago

SK-வின் மிரட்டல் லுக் வைரல்: ரசிகர்களை கவரும் ‘சேயோன்’ அப்டேட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், தொடர்ந்து வித்தியாசமான கதைகளையும் கதாபாத்திரங்களையும் தேர்வு செய்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி வருகிறார். அந்த…

1 day ago