மேஷம்: இன்று பணம் கொடுக்கல் வாங்கலில் சரளமான நிலை ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முடியும். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த உயர்வுகளை அடைய முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
ரிஷபம்: இன்று சிலருக்கு வீடு மனை, வண்டி, வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். பண வரவு திருப்தியளிப்பதாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சிதரக் கூடிய சுப சம்பவங்கள் நடைபெறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9
மிதுனம்: இன்று புத்திர வழியில் பூரிப்பு, கணவன் மனைவியிடையே ஒற்றுமை உண்டாகும். கொடுக்கல் வாங்கலிலும் சரளமான நிலை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் சிறு சிறு பிரச்சினைகள் தோன்றினாலும் பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7
கடகம்: இன்று தொழில் வியாபாரத்திலும் ஏற்றம் மிகுந்த பலன்களை அடைய முடியும். எடுக்கும் காரியங்களில் சில தடைகளுக்குப் பின் வெற்றி கிட்டும். உற்றார் உறவினர்களை அனுசரித்து நடந்து கொண்டால் ஓரளவுக்கு சாதகமானப் பலனை பெற முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் மறைந்து மந்த நிலை விலகும். எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவதே நல்லது. தேவையற்ற பிரச்சனைகளால் குழப்பங்கள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
கன்னி: இன்று மற்றவர்களின் மனதை துல்லியமாக எடைபோடுவீர்கள். எதிலும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. குடும்பத்தில் தேவையற்ற வாக்குவாதங்கள், கணவன் மனைவியிடையே ஒற்றுமைக் குறைவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
துலாம்: இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளுக்குப் பின் வெற்றியினை அடைவீர்கள். பண வரவுகள் தேவைக்கேற்றபடி இருக்கும். தேவையற்ற ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7
விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை பெற முடியும். வீண் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். பணவரவுகள் தேவைக்கேற்றபடி அமையும். கொடுக்கல் வாங்கலில் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5
தனுசு: இன்று வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும் எதிலும் சற்று சிந்தித்து செயல்படுவது நல்லது. நல்ல பொறுமையும், எதிலும் திறமையுடன் செயல்படும் ஆற்றலும் மேலோங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
மகரம்: இன்று உடல் ஆரோக்கியத்தில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும். பொருளாதார நிலை தேவைக்கேற்றபடி இருக்கும். சுப காரியங்களுக்கான முயற்சிகள் மேற்கொள்வதை சில காலம் தள்ளி வைப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
கும்பம்: இன்று கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உற்றார் உறவினர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகஸ்தர்கள் எதிர்பார்க்கும் உயர்வுகள் தடையின்றிக் கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மீனம்: இன்று வேலைப் பளு அதிகரிக்கும். மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். வெளியூர் பயணம் செல்ல வேண்டி இருக்கும். குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்த மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சிம்ரன். இவருக்கு திருமணம் ஆகி…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான முத்தழகு சீரியலில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் வைஷாலி அதனைத் தொடர்ந்து மகாநதி…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் முத்துவும் மீனாவும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
பிரண்டையில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும் குறிப்பாக…