Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 08– 01 – 2023

மேஷம்: இன்று அடுத்தவர்களின் குறைகளை போக்க முற்படுவீர்கள். பயணத்தாலும் நன்மைகள் கிடைக்கும். தன ரீதியில் எல்லா வகையிலும் நிம்மதியும் மகிழ்ச்சியும் உண்டாகும். எல்லா முயற்சிகளிலும் வெற்றி கிடைக்கும். புதிய நண்பர்களின் சேர்க்கையால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

ரிஷபம்: இன்று வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு இருப்பவர்கள் தொடர்ந்து அதனை செய்து முடிக்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலனை தரும். தொழில் வியாபாரம் சுமாராக இருந்தாலும் லாபம் கிடைக்கும். வாடிக்கையாளர்களிடம் நிதானமாக பேசி தக்க வைத்துக் கொள்வது நல்லது. உங்கள் நிறுவன பங்குகள் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

மிதுனம்: இன்று உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு மேல் அதிகாரிகளின் உதவிகள் கிடைக்கும். சக ஊழியர்கள் உங்களுக்கு கௌரவம் அளிப்பார்கள். மேலிடத்திலிருந்து அனுகூலமான விஷயங்கள் நடக்கும். குடும்ப வேலைகள் காரணமாக கூடுதல் நேரம் ஒதுக்கி அதனை செய்து முடிக்க நேரிடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

கடகம்: இன்று கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த மன வருத்தம் நீங்கும். குழந்தைகளுடன் வெளியே சென்று மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். வழக்குகளில் சமாதானமாக போவது நல்லது. நிலம் வீடு சம்பந்தமாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நிதானமாக பேசி செய்யும் காரியங்கள் வெற்றி பெறும். பணவரத்து திருப்தி தரும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

சிம்மம்: இன்று கலைத்துறையினருக்கு வெளிநாட்டு பயணங்கள் செல்லும் சூழ்நிலை உருவாகலாம். எதிர்பார்த்ததை விட கூடுதல் செலவு ஏற்படலாம். தொழிலில் இருந்த தொய்வு நீங்கி முன்னேற்றமடையும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் தாமதமானாலும் வந்து சேரும். உங்கள் செயல்திறமை வெளிபடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

கன்னி: இன்று அரசியல் துறையினருக்கு உங்களது வார்த்தையின் மதிப்பு அதிகரிக்கும். உங்களது ஆலோசனைபடி உடனிருப்பவர்கள் கேட்டு செயல்படுவது மனதுக்கு இதமளிக்கும். திடீர் செலவு ஏற்படலாம். உங்களது திறமை வெளிப்படும். பாராட்டும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

துலாம்: இன்று மாணவர்களுக்கு விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். துன்பங்கள் விலகும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.ஆன்மீக தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

விருச்சிகம்: இன்று எந்த ஒரு வேலையையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகள் சாதகமான பலன் தரும். கட்டுப்பாடற்ற சுதந்திர எண்ணம் உண்டாகும். சிறிய விஷயங்களில் மனநிறைவு ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

தனுசு: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். வார்த்தைகளில் நிதானத்தை கடைபிடிப்பது மற்றவர்களிடம் கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். வாழ்க்கை துணையின் நலனில் அக்கறை காண்பிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

மகரம்: இன்று தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் தங்கள் வியாபாரம் தொடர்பாக பயணம் செல்ல நேரிடலாம். போட்டிகள் விலகும். வாடிக்கையாளர்கள் கருத்துக்கு மாற்று கருத்து சொல்லாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

கும்பம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் உண்டாகும். பணவரத்தும் திருப்தி தரும். பணவரத்து அதிகமாகி பொருளாதாரம் ஓங்கும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். சின்ன விஷயங்களில் கூட கவனமாக செய்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

மீனம்: இன்று கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த அளவு வாய்ப்புகள் வந்து குவியும். பொருட்களை கவனமாக பாதுகாப்பது நல்லது. அரசியல்துறையினர் எந்த வாக்குறுதியையும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. கோபத்தை குறைப்பது நன்மை தரும். வேலைகளை கவனமுடன் செய்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

 

 

admin

Recent Posts

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

பெருஞ்சீரகம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

14 hours ago

Yolo Official Trailer

Yolo Official Trailer | Dev, Devika, Akash, VJ Nikki, Badava Gopi | S Sam|Sagishna Xavier…

19 hours ago

Idhu Devadhai Nerame Lyrical Video

Idhu Devadhai Nerame Lyrical Video | Kumaara Sambavam | Kumaran, Payal | Achu Rajamani

19 hours ago

Gandhi Kannadi Official Trailer

Gandhi Kannadi Official Trailer | Bala, Namita, Balaji Sakthivel, Archana | Vivek-Mervin | Sherief

19 hours ago

Oorum Blood Video Song

Oorum Blood Video Song | Dude | Pradeep Ranganathan, Mamitha Baiju | ‪SaiAbhyankkar‬ | Paal…

19 hours ago

Mirai Tamil Trailer

Mirai Tamil Trailer | Teja Sajja | Manchu Manoj | Karthik Gattamneni | AGS |…

19 hours ago