Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 06– 05 – 2023

மேஷம்: இன்று தொழில் வியாபாரத்தில் பணத்தேவை ஏற்படலாம். கடன் விவகாரங்களில் கவனமாக செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் ஓய்வு இல்லாமல் பணியாற்ற வேண்டி இருக்கும். இயந்திரம், நெருப்பு, ஆயுதத்தை பயன்படுத்துவோர் மிகவும் கவனமாக இருப்பது அவசியம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

ரிஷபம்: இன்று குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உருவாகலாம். கணவன், மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும் சரியாகிவிடும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் உண்டாகலாம். பிள்ளைகளுக்காக கூடுதல் செலவு செய்ய வேண்டி இருக்கும். உறவினர்களிடம் கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மிதுனம்: இன்று மற்றவர்களின் வேலைகளுக்காக அலைய நேரிடும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியை தவிர மற்றவைகளில் கவனத்தை சிதற விடலாம். வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கையாக செல்வது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

கடகம்: இன்று காரியதடை, வீண் அலைச்சல் டென்ஷன் உண்டாகலாம். கவனம் தேவை. துன்பங்கள் விலகும். மனநிம்மதி குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். சுத்தம், சுகாதாரம் என்பதில் கவனமாக இருப்பீர்கள். எல்லாவற்றிலும் சாதகமான பலனே கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்: 5

சிம்மம்: இன்று பொருளாதார முன்னேற்றம் பணவரவில் திருப்தி ஆகியவை இருக்கும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த தொய்வு நீங்கி வேகம் பிடிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 3

கன்னி: இன்று எதிர்பார்த்த ஆர்டர் கிடைக்கும். லாபம் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறன் அதிகரிக்கும். மேல் அதிகாரிகளின் பாராட்டும், பதவி உயர்வும் கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

துலாம்: இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். கணவன்மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் மூலம் பெருமை ஏற்படும். உறவினர்கள் வருகையும் அவர்களால் நன்மையும் உண்டாகும். திருமணம் தொடர்பான பேச்சுகள் சாதகமாக முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 7

விருச்சிகம்: இன்று வீடு, வாகனம் வாங்குவது அல்லது புதுப்பிப்பதில் நாட்டம் அதிகரிக்கும். எடுத்த காரியத்தை திறமையாக செய்து முடிப்பீர்கள். பண புழக்கம் திருப்திதரும். மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளஞ்சிவப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6, 9

தனுசு: இன்று மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை நீங்கும். பாடங்கள் படிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பாராட்டு கிடைக்கலாம். வீண் அலைச்சல், தடை, தாமதம் உண்டாகும். எதிர்ப்புகள் நீங்கும். தொழிற்போட்டிகள் குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

மகரம்: இன்று சின்ன விஷயத்தையும் பெரிதாக நினைத்து குழம்பிக் கொள்வீர்கள். அதேநேரத்தில் பிரச்சனையை சமாளிக்கும் திறமை அதிகரிக்கும். காரியங்கள் தடைபட்டாலும் பின்னர் நன்றாக நடந்து முடியும். வெளியூர் அல்லது வெளிநாட்டு பயணம் செல்ல நேரலாம்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

கும்பம்: இன்று பணம் வரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் வீண் அலைச்சல் ஆர்டர் கிடைப்பதில் தாமதம் போன்றவை ஏற்பட்டாலும், தொழில் வியாபாரம் சீராக நடக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, ஊதா
அதிர்ஷ்ட எண்கள்: 1, 4, 6

மீனம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைபளு, கூடுதல் பொறுப்புகள் உண்டாகலாம். அதிக உழைப்பின் பேரில் வேலைகளை செய்து முடிப்பீர்கள். குடும்பத்தில் இருப்பவர்கள் அனுசரித்து செல்வதன் மூலம் எல்லா பிரச்சனைகளும் சரியாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

 

admin

Recent Posts

ஆக்‌ஷன் திரில்லர் படத்தில் அசத்தும் லிஜோமோல் ஜோஸ்!

இயக்குநர் ஆதிரன் நாக்கெப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய ஆக்‌ஷன் திரில்லர் திரைப்படம் ‘தி ஒன் வித்தின் யூ’. கோயம்புத்தூரின்…

13 hours ago

‘தலைவர் 173’ படத்தில் இணையும் பிரபல இயக்குநர் யார்?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாகும் ‘தலைவர் 173’ திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே…

13 hours ago

அரசியலில் ஈடுபடும் எண்ணமே இல்லை – கேள்விக்கு மீண்டும் விளக்கம் அளித்த நடிகர் பாலா

சின்னத்திரையில் காமெடியன், நடனக் கலைஞர், தொகுப்பாளர் என பன்முகத் திறமையுடன் ரசிகர்களை கவர்ந்து, தற்போது நடிகராகவும் தனக்கென ஒரு இடத்தைப்…

13 hours ago

“விஜயை நேரில் சந்திப்பதைத் தவிர்த்தேன்…” – அர்ச்சனா கல்பாத்தி மனம் திறந்த பேட்டி

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருந்து தற்போது தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய் குறித்து தயாரிப்பாளர் அர்ச்சனா…

13 hours ago

“நூறு சாமி”-ல் கிராமத்து மனிதனாக வாழ்ந்திருக்கிறார் விஜய் ஆண்டனி – இயக்குநர் சசி

விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்ப்பரேஷன் தயாரிப்பில் மீரா விஜய் ஆண்டனி வழங்கும் திரைப்படம் 'நூறு சாமி'. மாபெரும் வெற்றி பெற்ற…

13 hours ago

NIZHAL OFFICIAL TRAILER

NIZHAL OFFICIAL TRAILER | TAMIL | JANANY KJ | VISHAKAN | ABUBAKKAR | AK KUMAR…

17 hours ago