Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் – 03– 12 – 2023

மேஷம்: இன்று பணவரத்து அதிகரிக்கும். வயிறு சம்பந்தப்பட்ட நோய் வரலாம். உணவு கட்டுப்பாட்டில் கவனம் தேவை. தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல்கள் குறையும். பிறர் விஷயங்களில் தலையீடு செய்வதைத் தவிர்த்தால் மனஉளைச்சல்கள் ஏற்படாமல் இருக்கும். பேச்சில் சற்று நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

ரிஷபம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணவரத்து திருப்தி தரும். ஆனால் எதிர்பார்த்த அளவு இருப்பது கடினம். குடும்பத்தில் சிறுசிறு வாக்குவாதங்கள் உண்டாகி ஒற்றுமைக் குறைவுகளை ஏற்படுத்தும். சுபகாரிய முயற்சிகள் சில தடைகளுக்குப்பின் கைகூடும். பொருளாதாரநிலை ஓரளவுக்கு திருப்தியளிப்பதாக இருந்தாலும் வரவுக்குமீறிய செலவுகளையும் எதிர்கொள்ள நேரிடும்.
அதிர்ஷ்டநிறம்: மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4

மிதுனம்: இன்று தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களை மாதத்தின் மத்திய பகுதியில் செய்வது நல்ல பலன் தரும். உற்றார்- உறவினர்களின் வருகையால் சில மனசஞ்சலங்கள் உண்டாகும். முயற்சிகள் அனைத்திலும் எதிர்நீச்சல் போட்டே முன்னேற வேண்டியிருக்கும். முன்கோபத்தைக் குறைத்துக்கொண்டு நெருங்கியவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3

கடகம்: இன்று கமிஷன் ஏஜென்சி, கான்டிராக்ட் போன்ற துறைகளில் எதிர்பார்க்கும் லாபத்தை அடையமுடியாது. கொடுக்கல்-வாங்கலிலும் கொடுத்த வாக்குறுதிகளைக் காப்பாற்ற முடியாமல்போகும். கடன் தொகைகளை வசூலிப்பதில் தடைகள் உண்டாகும். வம்பு வழக்குகள் சாதகமாக இருக்கும். எதிலும் சிந்தித்து செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்டநிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

சிம்மம்: இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்திச்செய்ய நினைக்கும் காரியங்களில் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. கையிலிருக்கும் ஆர்டர்களைக்கூட முடித்துக்கொடுப்பதில் சிக்கல்கள் ஏற்படும். அரசுவழிகளில் எதிர்பார்க்கும் உதவிகள் தடைகளுக்குப்பின் கிடைக்கும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 4, 6

கன்னி: இன்று கூட்டாளிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும். தேவையற்ற பயணங்களைத் தவிர்த்தால் அலைச்சல், டென்ஷனைக் குறைத்துக்கொள்ள முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் உழைப்பிற்கான முழுப்பலனை அடையமுடியும். வாடிக்கையாளர்கள் பற்றிய வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். அதிகாரிகளின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: பிரவுன், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 6

துலாம்: இன்று எதிர்பார்க்கும் பதவி உயர்வுகள் கிடைக்கப்பெற்றாலும் சில நேரங்களில் அதிகநேரம் உழைக்க வேண்டியிருக்கும். சிலருக்கு எதிர்பாராத இடமாற்றங்கள் அலைச்சலை ஏற்படுத்துவதுடன் குடும்பத்தைவிட்டும் பிரியநேரிடும். உடன்பணிபுரிபவர்களின் ஆதரவுகள் மகிழ்ச்சி அளிக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெளிர் நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4

விருச்சிகம்: இன்று புதிய வேலை வாய்ப்புகள் தகுதிக்கேற்றபடி அமையும். பெண்கள் குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை நீடிக்கும். கணவன்-மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் பெரிய கெடுதிகள் உண்டாகாது. உடல்நிலையில் அடிக்கடி பாதிப்புகள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்டநிறம்: பச்சை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 4, 6

தனுசு: இன்று பணி நிமித்தமாக வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அசையா சொத்துகளாலும், வண்டி, வாகனங்களாலும் வீண்செலவுகள் ஏற்படும். உற்றார்- உறவினர்களை அனுசரித்து நடந்து கொள்வது நல்லது. புத்திரவழியில் சிறுசிறு மன சஞ்சலங்கள் உண்டாகும். பணவரவுகள் சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: வெள்ளை, கருநீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 4, 6

மகரம்: இன்று தேவையற்ற செலவுகளைக் குறைத்துக் கொண்டால் கடன்கள் உண்டாவதைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகள் மக்களின் ஆதரவைப்பெற அவர்களின் தேவை அறிந்து செயல்படுவது உத்தமம். உடனிருப்பவர்கள் ஒத்துழைப்புடன் செயல்படுவார்கள். எந்தவொரு காரியத்திலும் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

கும்பம்: இன்று சிறப்பாக இருக்கும். நவீனமுறைகளைக் கையாண்டு தொழிலைப் பெருக்கமுடியும் என்றாலும் வேலைக்குத் தக்கசமயத்திற்கு ஆட்கள் கிடைக்கமாட்டார்கள். இதனால் தொழிலில் சுணக்கம் ஏற்படும். அரசுவழியில் எதிர்பாராத மானிய உதவிகள் கிடைக்கும். நீர்வரத்து சிறப்பாகவே இருக்கும்.
அதிர்ஷ்டநிறம்: கருஞ்சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 3

மீனம்: இன்று கெடுபிடிகள் அதிகரிப்பதால் கிடுக்குப் பிடியான சூழ்நிலைகள் உண்டாகும். கலைஞர்கள் எதிர்பார்க்கும் வாய்ப்புகள் தடையின்றிக் கிட்டும். வரவேண்டிய பணத்தொகைகளும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். வெளியூர், வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடிய வாய்ப்புகளும் அதன்மூலம் அனுகூலமான பலன்களும் உண்டாகும்.
அதிர்ஷ்டநிறம்: சிவப்பு, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

 

admin

Recent Posts

Muthu Engira Kaattaan Teaser

https://youtu.be/PZEwB1fWtkY?si=dFyUPMP7-pnshpcf

21 hours ago

Police Family Official Teaser

https://youtu.be/2mmgkUBwOcI?si=xoCDh6hLNIyYZTUQ

21 hours ago

Magaram Tamil Official Trailer

https://youtu.be/IsWC8fuHJGI?si=t-nZR6y4RyW3Yq6a

21 hours ago

Vengeance – Trailer

https://youtu.be/Pay6rTBqsL8?si=lrErMhw5Cya9NOx3

21 hours ago

Aasa Pulla Music Video

https://www.youtube.com/watch?v=JpQWcziZSxY

22 hours ago

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த ‘முத்து என்கிற காட்டான்’

மார்ச் வெளியீடு: விஜய் சேதுபதி நடித்த 'முத்து என்கிற காட்டான்' விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள சீரிஸ், `முத்து என்கிற…

1 day ago