மேஷம்: இன்று குல தெய்வ ஆராதனைகளிலும், புனிதப் பயணங்களிலும் ஈடுபடுவீர்கள். தாய் வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். ஆடை ஆபரணங்கள் சேரும். உடன்பிறப்புகளால் நன்மை கிட்டும். விளையாட்டுதுறையில் உள்ளவர்களுக்கு பரிசும், பாராட்டுதல்களும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9
ரிஷபம்: இன்று பயணங்களால் மகிழ்ச்சியும், ஆதாயமும் கிடைக்கும். நிலம், வீடு, வாகனம் வாங்கும் வாய்ப்புகள் கை கூடி வரும். குழந்தைகளின் கல்வி, நடத்தை ஆகியன நன்றாக இருக்கும். நீதிமன்ற வழக்குகளிலிருந்து விடுபடுவீர்கள். வேதாந்த விஷயங்களில் நாட்டம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மிதுனம்: இன்று பாராட்டுகள் வரும். வெளிநாடு பயணங்களும் இனிதே அமையும். எதிர் பார்த்த ஆதாயம் கிடைக்கும். கணவன் மனைவி இடையே உறவுநிலை சிறக்க விட்டுக் கொடுத்தல் அவசியமாகிறது. கூட்டுத்தொழிலில் அதிகம் அக்கறை தேவை.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 7, 9
கடகம்: இன்று நீண்ட நாளாக இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். வாழ்க்கைத்துணைவரின் நலனில் அக்கறை செலுத்த வேண்டி வரும். பொருளாதாரம் சமப்ந்தப்பட்ட துறைகளைச் சேர்ந்தவர்கள், உத்தியோகஸ்தர்கள் ஆகியோர் பொறுப்புடன் செயல்படுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6
சிம்மம்: இன்று திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கு ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பிப்பீர்கள். திடீர்ச் செலவுகள் ஏற்படும். சிக்கன நடவடிக்கை அவசியம் தேவை. உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து அயராது பாடுபவர்கள் அதிகப் பயன் பெறுவார்கள். பயணத்தால் அனுகூலம் உண்டு.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5
கன்னி: இன்று பாதுகாப்பு அவசியம். உடன்பிறந்தவர்களால் அதிக நன்மைகள் ஏற்படும். பொருள் வரவில் குறைவு ஏற்பட வாய்ப்பு இல்லை. எனினும் குடும்பத்தில் சிறு சிறு பிணக்குகள் வந்து மறையும். கோபம் கலந்த வார்த்தைகளை உதிர்க்காமல் இருப்பது நன்று.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 9
துலாம்: இன்று நெஞ்சு சம்பந்தப்பட்ட சிறு சிறு உபாதைகள் தோன்றலாம். எனினும் கவனம் தேவை. ராசிநாதன் சுக்கிரன் நான்காம் ராசியில் உலவுவதால் உறுதியும், துணிவும் நிறைந்திருக்கும். பிரபலங்களின் நட்பும், ஆதரவும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 5
விருச்சிகம்: இன்று வேலை நிமித்தம் வெளியூர் செல்ல வேண்டி வரலாம். அண்டை அயலாருடன் இருக்கும் மனக்கசப்புகள் நீங்கி உற்சாகம் பிறக்கும். பிள்ளைகளிடம் அன்பு, பாசம் காட்டுவது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9
தனுசு: இன்று உத்தியோகத்தில் வெளிநாடு வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகளால் இருந்து வந்த தொல்லைகள் தானாக விலகும். கண்கள் உபத்திரவம் ஏற்படாமல் இருக்க கவனம் தேவை. உஷ்ணத்தை உடம்பில் தங்க விடக் கூடாது.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9
மகரம்: இன்று உங்கள் கடமைகளைச் சரிவர செய்தால் நன்மைகள் அதிகமாக கிடைக்கும். அறிவாற்றலும் செயல்திறமையும் கூடும். வியாபாரத்தில் அபிவிருத்தி காணலாம். உழைப்பு வீண் போகாது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5
கும்பம்: இன்று நற்பெயர் கிட்டும். வெளியூர், வெளிநாட்டு தொடர்புகள் ஆக்கம் லாபம் தரும். இரும்பு, எண்ணெய் வகையறாக்கள், தோல் பொருட்கள், ஏற்றுமதி இறக்குமதி இனங்கள் அதிக லாபம் தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9
மீனம்: இன்று சுகம் பெருகும். மகிழ்ச்சி கூடும். பொருள் வரவு அதிகரிக்கும். பழைய பாக்கிகள் எளிதில் வசூலாகும். புகழ் தேடி வரும். ஒரு பெரிய புள்ளியின் அனுகூலம் கிடைக்கப் பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…