Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 03– 07 – 2022

மேஷம்: இன்று பயணங்களால் நல்ல அனுகூலங்கள் ஏற்படும். கொடுத்த வாக்குறுதிகளையும் காப்பாற்ற முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் சுபிட்சமும் உண்டாகும். எடுக்கும் காரியங்கள் அனைத்திலும் வெற்றியினைப் பெறுவீர்கள். உத்தியோகஸ்தர்களுக்கு கௌரவமான பதவி உயர்வுகள் கிடைக்கும். திருமண சுபகாரியங்களுக்கான முயற்சிகளில் சிறு தடைக்கு பின் வெற்றி கிட்டும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, ஊதா, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5, 9

ரிஷபம்: இன்று உத்தியோகத்திலிருப்பவர்களும் எதிர்பார்த்த இடமாற்றத்தைப் பெற்று குடும்பத்தோடு சேர்ந்து மகிழ்வார்கள். எடுக்கும் காரியங்களில் சிறு சிறு இடையூறுகளை சந்திக்க நேர்ந்தாலும் எதையும் சமாளிக்கும் ஆற்றலும் உண்டாகும். பண வரவுகளில் சற்று நெருக்கடிகள் நிலவினாலும் தேவைகளைப் பூர்த்தி செய்யுமளவிற்கு பணவரவு இருக்கும் நீங்கள் நினைத்ததெல்லாம் நிறைவேறும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9

மிதுனம்: இன்று கணவன் மனைவியிடையே சிறந்த அன்யோன்னியமும் அதிகரிக்கும். திருமண சுபகாரியங்களும் சிறு தடைக்கு பின் கைகூடி மகிழ்ச்சியளிக்கும். தொழில் வியாபாரத்திலும் எதிர்பார்த்த லாபத்தினைப் பெற முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மிகச்சிறப்பாக இருக்கும். எதிரிகள் உங்களை கண்டு ஓடி ஒளிவார்கள். உத்தியோகஸ்தர்களும் எதிர்பார்த்த இடமாற்றங்களைப் பெற்று குடும்பத்தோடு சேருவார்கள். புத்திர வழியில் சிறு சிறு மன சஞ்சலங்கள் தோன்றி மறையும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், இளஞ்சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5

கடகம்: இன்று எடுக்கும் முயற்சிகளில் தடைகளும் புத்திர வழியில் சிறுசிறு மனசஞ்சலங்களும் உண்டாகும் என்றாலும் பணவரவுகளுக்குப் பஞ்சம் இருக்காது. கொடுக்கல் வாங்கலில் பெரிய தொகைகளை ஈடுபடுத்தாதிருப்பது நல்லது. உத்தியோகஸ்தர்ககள் கௌரவமான நிலையினைப் பெற முடியும். உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பால் வேலைப்பளு குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

சிம்மம்: இன்று தொழில் வியாபாரத்தில் லாபம் கிட்டும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக அமைவதால் அன்றாட பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்பட முடியும். உத்தியோகஸ்தர்கள் தங்கள் பணிகளில் நிம்மதியான நிலையினை பெற முடியும். கடன்களும் குறையும். அசையும் அசையா சொத்துக்கள் வழியில் சுபசெலவுகள் ஏற்படும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5, 7

கன்னி: இன்று ஆன்மீக தெய்வீக காரியங்களில் ஈடுபாடு அதிகரிக்கும். திருமண சுப காரியங்களுக்கான முயற்சிகளை சில காலம் தள்ளி வைப்பது நல்லது. குடும்பத்தில் சுபிட்சமான நிலை இருக்கும். பொன் பொருள் சேரும். உற்றார் உறவினர்களின் வருகை மகிழ்ச்சியினை அளிக்கும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 6, 9

துலாம்: இன்று உத்தியோகஸ்தர்கள் உயர்வடைவார்கள். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபத்தினை தடையின்றி பெற முடியும். தொழிலாளர்களையும் அனுசரித்து செல்வது மிகவும் நல்லது. புதிய புதிய வாய்ப்புகளும் தேடிவரும். அரசு மூலம் எதிர்பார்த்த அனுகூலம் கிட்டும். குரு 4 இல் சஞ்சரிப்பதால் கொடுக்கல் வாங்கலில் சற்று கவனமுடன் செயல்பட்டால் அனுகூலப்பலனை அடைய முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 6, 9

விருச்சிகம்: இன்று பொன் பொருள் சேர்க்கைகள் அதிகரிக்கும். கடந்த கால பிரச்சனைகள் சற்றே குறையும். அசையும் அசையா சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். கணவன் மனைவியிடையே சிறு சிறு கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் ஒற்றுமை குறையாது. திருமண சுப காரியங்களில் தாமத நிலை ஏற்பட்டாலும் குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், பச்சை, வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9

தனுசு: இன்று தொழில் வியாபார ரீதியாக எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பயணங்களால் அனுகூலம் உண்டாகும். பூமி மனை வாங்கும் யோகம் உண்டாகும். பணம் கொடுக்கல் வாங்கலில் மட்டும் சற்று கவனமுடன் செயல்படுவது நல்லது. வெளிவட்டாரத் தொடர்புகளால் பெயர் புகழ் கூடும். சமுதாயத்தில் உங்களுக்கென தனி மரியாதையும் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 2, 7

மகரம்: இன்று பண வரவுகளில் ஏற்ற இறக்கமான நிலையிருந்தாலும் செலவுகள் கட்டுக்குள் இருப்பதால் குடும்பத் தேவைகளும் பூர்த்தியாகும். அசையும் அசையா சொத்துக்களால் சிறு சிறு விரயங்களை சந்திப்பீர்கள். கணவன் மனைவி விட்டுக் கொடுத்து நடந்து கொண்டால் குடும்ப ஒற்றுமை சிறப்பாக இருக்கும். பணம் கொடுக்கல் வாங்கலில் பெரிய முதலீடுகளை ஈடுபடுத்துவதை தவிர்க்கவும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 5

கும்பம்: இன்று பிறரை நம்பி வாக்குறுதிகள் கொடுத்தால் நம்பியவர்களே துரோகம் செய்வார்கள். செய்யும் தொழில் வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபம் காண்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் பணியில் திறம் பட செயல்பட்டு உயர்வுகளை பெற முடியும். வீடுமனை போன்றவை வாங்கக் கூடிய யோகம் போன்ற யாவும் அமையும். கடன்களும் படிப்படியாக குறைந்து விடும். பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிப்பதும் நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7

மீனம்: இன்று நினைத்தது நிறைவேறும். தடைபட்டுக் கொண்டிருக்கும் சுபகாரியங்கள் யாவும் தடை விலகி கை கூடும். சிலருக்கு புத்திர பாக்கியமும் அமையும். பொன் பொருள் சேரும். பூமி, மனை வாங்க கூடிய யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்துக்களாலும் லாபம் கிட்டும். கொடுக்கல் வாங்கலில் இருந்த பிரச்சனைகள் விலகி பெரிய தொகைகளை ஈடுபடுத்த முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 5

 

admin

Recent Posts

லேட்டஸ்ட் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கும் தமன்னா..!

கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…

5 hours ago

பிங்க் நிற உடையில் ரசிகர்களின் மனதை கொள்ளையடிக்கும் வாணி போஜன்..!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…

5 hours ago

காந்தி கண்ணாடி : 3 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…

6 hours ago

சூர்யா கேட்ட கேள்வி, நந்தினியின் பதில் என்ன? வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

6 hours ago

கிரிஷ் மீது சத்யாவுக்கு வந்த சந்தேகம்,ஸ்ருதி சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சந்திரா…

8 hours ago

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…

22 hours ago