Categories: Astrology

இன்று உங்களுக்கான நாள் எப்படி? இன்றைய ராசிபலன் 02– 03 – 2023

மேஷம்: இன்று எதிர்ப்புகள் விலகும். தடைபட்ட காரியம் நடந்து முடியும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். எதை பற்றியும் கவலைப்படாமல் காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

ரிஷபம்: இன்று பண பிரச்சனை தீரும். குடும்ப நன்மை ஏற்படும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிக்க பாடுபடுவீர்கள். வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். ஆனால் மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருக்கும். திடீர் பணதேவை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

மிதுனம்: இன்று தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம், மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 1, 5

கடகம்: இன்று உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகள் சொல்வதை செய்வதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் அமைதி ஏற்படும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்
அதிர்ஷ்ட எண்: 5, 6

சிம்மம்: இன்று பிள்ளைகள் பற்றிய கவலை நீங்கும். அவர்களுக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் மதிப்பு கூடும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி: இன்று மாணவர்கள் ஆசிரியர் சொல்படி பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் பெற்று வெற்றி பெற உதவும். எதிலும் கவனத்துடன் செயல்படுவது நல்லது. அலைச்சல் ஏற்படலாம். கஷ்டங்கள் குறையும். வேலை பளு குறையும். உங்களது செயல்களுக்கு பாராட்டுகள் கிடைக்க பெறுவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 2, 9

துலாம்: இன்று செலவு அதிகரிக்கும். அடுத்தவர் மூலம் மனசங்கடம் உண்டாகும். வாகனங்கள் பயன்படுத்தும் போது கவனம் தேவை. சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 9, 3

விருச்சிகம்: இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அடுத்தவரை நம்பி பொறுப்புக்களை ஒப்படைப்பதை தவிர்ப்பது நல்லது.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, அடர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 4, 6

தனுசு: இன்று குடும்பத்தில் இருப்பவர்களின் ஒத்துழைப்பால் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளிடம் அன்பாக நடந்து கொள்வீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 5, 6

மகரம்: இன்று அடுத்தவருக்கு உதவி செய்யும் போது கவனம் தேவை. வீண் மன சங்கடம் ஏற்படலாம். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் பாடங்களை படிக்கும் போது மிகுந்த கவனத்துடன் படிப்பது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, வெளிர் நீலம்
அதிர்ஷ்ட எண்: 3, 7

கும்பம்: இன்று எதிலும் கூடுதல் கவனம் தேவை. காரிய தடை தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம். முயற்சிகள் சாதகமான பலன் தரும். எதையும் சமாளித்து முன்னேறும் சாமர்த்தியம் உண்டாகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். எதிர்ப்புகள் விலகும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, பச்சை
அதிர்ஷ்ட எண்: 1, 7

மீனம்: இன்று புதிய நண்பர்கள் கிடைப்பதுடன் அவர்களால் நன்மையும் உண்டாகும். மரியாதை கூடும். மனதில் துணிச்சல் அதிகரிக்கும். தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு
அதிர்ஷ்ட எண்: 4, 5

 

admin

Recent Posts

Muthumani Music Video

Muthumani Music Video | DOROTHY | Maestro Ilaiyaraaja | Karthik Subbaraj

3 hours ago

Kalaivaniye Lyrical Video

Kalaivaniye Lyrical Video | Meesaya Murukku 2 | Hiphop Tamizha | Ramya Ranganathan

3 hours ago

Jio Jiyale Lyrical Video

Jio Jiyale Lyrical Video | Jolliya Iruntha Oruthan | JIO | Yuvan Shankar Raja |…

3 hours ago

En Samy Vettaiyadum Lyric Video

En Samy Vettaiyadum Lyric Video | The Dark Heaven | Sidhu Sid | Tharshika |VM…

3 hours ago

ஹாய் திரைவிமர்சனம்

பெற்றோரைப் போலவே காதலித்து திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசையில் இருக்கும் கவினுக்கு காதல் கைகூடாததால், வீட்டில் பெண்…

1 day ago

Loser Song Lyric Video

Loser Song Lyric Video | I'm Game(Tamil) | Dulquer Salmaan | Benny Dayal, Jakes Bejoy,…

1 day ago