thunivu movie promotion video viral update
ரசிகர்கள் மத்தியில் தல என்று அன்போடு அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் தயாராகி இருக்கும் துணிவு திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியாக உள்ளது. பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை போனி கபூர் தயாரித்துள்ளார்.
ஜிப்ரான் இசையில் உருவாகி வரும் இப்படத்தில் இருந்து 3 பாடல்கள் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில் துணிவு படத்தின் ப்ரோமோஷன் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதித்த வீரர் ஒருவர் பாராசூட்டில் பறந்தபடி துணிவு படத்தின் பேனரை பிடித்துக்கொண்டு பறக்கும் வீடியோவை இப்படத்தில் வெளிநாட்டு உரிமையை வாங்கி இருக்கும் லைக்கா நிறுவனம் வெளியிட்டுள்ளது. மேலும் அதில் வரும் டிசம்பர் 31 ஆம் தேதி ஸ்பெஷல் அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதை பதிவிட்டு அன்று துணிவு நாள் என்றும் குறிப்பிட்டு வெளியிட்டு இருக்கிறது. இந்த வியக்க வைக்கும் வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…