Latest Tamil cinema News
சினிமா விமர்சனம்

தொரட்டி விமர்சனம்.!

ஷமன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ஷமன் மித்ரு, சத்யகலா மற்றும் பலர் நடிப்பில் வெளியாகியுள்ள திரைப்படம் தொரட்டி.

படத்தின் கதைக்களம் :

நாயகன் ஷமன் மித்ருவின் அப்பா அம்மா ஊரை விட்டு வெளியேறி வேறொரு ஊரில் குடிசை போட்டு அறுவடை செய்யப்பட்ட வயல்வெளிகளில் ஆடுகளை மடக்கி அதன் சாணங்களை அங்கேயே விட்டு உரமாக்கி கொடுப்பது தான் இவர்களின் வேலை.

அப்படி ஒரு ஊருக்கு சென்ற போது நாயகன் ஷமன் எதார்ச்சையாக மூன்று திருடர்களுடன் நண்பராகிறார்.

நண்பரானது மட்டுமில்லாமல் அவர்களுடன் சேர்ந்து கொண்டு குடிப்பழக்கத்திற்கு அடிமையாகிறார். அப்படியிருந்தும் பல எதிர்ப்புகளை தாண்டி படத்தின் நாயகியான சத்யகலா ஷமனை திருமணம் செய்து கொள்கிறார்.

அதன் பின்னர் ஷமனின் மூன்று நண்பர்கள் ஒரு பெரிய திருட்டு வேலையில் ஈடுபட அவர்களை போலீசில் சிக்க வைத்து விடுகிறார் சத்யகலா. ஜெயில் தண்டனை முடிந்து வந்து சத்யகலாவை பழி வாங்க முயற்சிக்கின்றனர்.

அப்போது தான் மூன்று திருடர்களுக்கு தெரிய வருகிறது சத்யகலா தங்களது நன்பனின் மனைவி என்று. அதன் பின்னர் என்ன நடந்தது? என்பது தான் இப்படத்தின் மீதி கதையும் களமும்.

படத்தை பற்றிய அலசல் :

நடிப்பு :

படத்தின் நாயகன் நாயகியான ஷமன், சத்யகலா மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த நடிகர் நடிகைகளும் அப்படியே அந்த கதாபாத்திரமாகவே மாறியுள்ளனர். ஒருவருடைய நடிப்பையும் குறை சொல்ல முடியாது.

தொழிநுட்பம் :

இசை :

தேவ் ஷங்கர் சுகவனம் மற்றும் ஜித்தின் ரோஷனின் இசை கிராமத்து கதைக்களத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

ஒளிப்பதிவு :

குமார் ஸ்ரீதரின் ஒளிப்பதிவு கிராமத்து வாசனையை நம் கண் முன்னே கொண்டு வருகிறது.

இயக்கம் : மாரிமுத்துவின் கதைக்களம் தமிழ் சினிமாவின் தரமான படங்களில் ஒன்றாக அமைந்துள்ளது. முழுமுழுக்க படத்தை சீரியஸாகவே கொண்டு சென்றுள்ளார்.

கொஞ்சம் காமெடியை சேர்ந்திருந்தாலும் கமர்ஷியலாகவும் நல்ல படத்தை கொடுத்திருக்க முடியும்.

தம்ப்ஸ் அப் :

1. ஒட்டு மொத்த நடிகர் நடிகைகளின் நடிப்பு
2. இசை
3. ஒளிப்பதிவு
4. இயக்கம்

தம்ப்ஸ் டவுன் :

1. காமெடி இல்லாத ஒன்று தான் குறை

Related posts

அக்யூஸ்ட் நம்பர் 1 சினிமா விமர்சனம்

user

ஜாக்பாட் சினிமா விமர்சனம்

user

டியர் காம்ரேட் சினிமா விமர்சனம்

user