Latest Tamil cinema News
ஆன்மீகம்

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

# நினைத்தாலே முக்தி அளிக்கும் புண்ணிய திருத்தலமான அருள்மிகு உண்ணாமலை அம்மை உடனாய அண்ணாமலையார் சுவாமி குடி கொண்டு அருளும் திருவண்ணாமலை திருத்தலத்தில் மாதந்தோறும் பவுர்ணமி தினத்தில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செய்து வழிபடுகின்றனர்.

# இங்கு மலையாக அமர்ந்த அண்ணாமலையாரே கிரிவலத்தை தொடங்கி வைத்தார் என்று வரலாறு கூறுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் ஆண்டிற்கு ஒருமுறை கார்த்திகை மாதத்தில் இறைவன் இறைவியோடு கிரிவலம் செல்லும் வைபவம் நடைபெறுகிறது. இன்றளவும் இதனை தரிசிக்கலாம்.

# ஆகவே இறைவனே துவங்கி வைத்த இவ்வழிபாட்டை எந்த நாளில் செய்தாலும் பூரணமாகப் பலன் பெற முடியும்.

# ஆதிகாலத்தில் மலைப்பாதை முழுவதும் இருள் சூழ்ந்திருந்த அந்த நாட்களில் பௌர்ணமி நிலவின் ஒளி துணை இருப்பதால் பவுர்ணமி கிரிவலம் வருவதற்கு உகந்த நாளாக தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள்.

# மலைப்பாதையில் பல இடங்களில் குடியிருப்பு ஏதுமில்லாமல், காடுகளாக இருந்த பவுர்ணமி தினத்தன்று கிரிவலம் செல்வது அதிகரித்தது.

# நாளாக நாளாக இடைப்பட்ட காலத்தில் வருடப்பிறப்பு, மாதப்பிறப்பு, பவுர்ணமி, அமாவாசை, கிருத்திகை, சிவராத்திரி நாட்களில் கிரிவலம் செய்து வழிபாடு செய்துள்ளனர்.

# பின்னாளில் சந்திரனை தலையில் சூடியிருக்கும் அந்த பிறைசூடனை
பவுர்ணமி நாளில் வழிபாடு செய்வது சிறப்பு என்று கருதி இருக்கலாம். ஆனால் எந்த நாளிலும் கிரிவலம் செய்யலாம் தவறில்லை.

அண்ணாமலையாரை அகத்தில் நிறுத்தினாலே! சுகம் தான்!..

Related posts

காளியும், தேவியும் அவதரித்தது எப்போது? தெரிந்து கொள்ளலாமா?

user

மகம் நட்சத்திரக்காரர்கள் மிகுந்த அதிர்ஷ்டங்களை பெற இவற்றை செய்யுங்கள்

user

திருமணம் தடைப்படுகிறதா? ஜோதிடப்படி தீர்வை பார்க்கலாமா?

user

Leave a Comment