Latest Tamil cinema News
ஆன்மீகம்

திருச்செந்தூரின் நாழிக்கிணறு பற்றி தெரிந்து கொள்ளலாமா?

🔯 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் அமைந்துள்ள தீர்த்தங்களுள் ஒன்றாகும். இதுமிகவும் புண்ணியமான தீர்த்தம் ஆகும். இந்த தீர்த்தத்தில் ஆண்டுதோறும் இலட்சக்கணக்கானோர் நீராடுகின்றனர்.

🔯 பல சிறப்புக்கள் பெற்ற இந்த கோவிலில் பலரையும் அதிசயத்தில் ஆழ்த்தும் ஒரு கிணறு உள்ளது. அது தான் நாழிக்கிணறு.

🔯 சூரபதுமன் என்ற அசுரனை அழிப்பதற்காக முருகப்பெருமான் தன் படைகளுடன் திருச்செந்தூரில் முகாமிட்டு இருந்தார். அப்பொழுது படைவீரர்களின் தாகத்தினை தீர்ப்பதற்காக தன் வேலினால் இந்த கிணற்றை உருவாக்கியதாக புராணங்கள் கூறுகின்றன்.

🔯 இந்த தீர்த்தம் கடலுக்கு மிக அருகில் இருந்தாலும் இதன் நீர் இனிப்பு சுவை கொண்டுள்ளது. மேலும் இது அள்ள அள்ள குறையாத நீர்நிலையாகவும் திகழ்கிறது.

🔯 திருச்செந்தூருக்குச் சென்று கடவுளைத் தரிசிக்கும் முன்பு முதலில் கடலில் நீராட வேண்டும். பின் ஈரத்துணியுடனேயே கடற்கரையில் உள்ள நாழிக்கிணற்றில் படிகளில் இறங்கி அங்குள்ள ஊற்றில் குளித்துவிட்டு பின்னர் கோவிலுக்கு செல்லலாம்.

Related posts

ஆடி 18 ல் என்ன வாங்கினால் மென்மேலும் பெருகும் தெரியுமா?

user

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

ஆடி மாதத்தில் நமக்கு அதிர்ஷ்டம் தரும் நாமம் எது தெரியுமா? அந்த நாமத்தை ஜெபித்து வளம் பெறலாம். வாருங்கள்!.

user

Leave a Comment