They insult me and speak badly.. Actress Rashmika Kamam
தமிழில் கார்த்தியின் ‘சுல்தான்’ படத்தில் நடித்து பிரபலமான ராஷ்மிகா மந்தனா, தற்போது விஜய் ஜோடியாக ‘வாரிசு’ படத்தில் நடித்து வருகிறார். கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா கன்னட படங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்வதாக கன்னட திரையுலகில் விமர்சனங்கள் கிளம்பின. கன்னடத்தில் தயாராகி பிறமொழிகளில் டப்பிங் செய்து வெளியிடப்பட்ட ‘காந்தாரா’ படம் வசூலை குவித்து பலரது பராட்டை பெற்ற நிலையில், அந்த படத்தை நான் பார்க்கவில்லை என்று ராஷ்மிகா பேசியது கன்னட ரசிகர்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
ராஷ்மிகாவை விமர்சித்து வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டனர். கன்னட படங்களில் நடிக்க ராஷ்மிகாவுக்கு தடை விதிக்கப்பட உள்ளதாகவும் வதந்தி பரவியது. இதனால் கோபமான ராஷ்மிகா அளித்துள்ள பேட்டியில், ”காந்தாரா படத்தை நான் பார்த்து விட்டேன். ‘காந்தாரா’ படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகளையும் தெரிவித்து உள்ளேன். ‘காந்தாரா’ படம் வெளியானபோது நான் படப்பிடிப்பில் இருந்ததால் பார்க்க முடியவில்லை.
என்னை இழிவுபடுத்தி கேவலமாக பலர் பேசுகிறார்கள். உண்மை அவர்களுக்கு தெரிவது இல்லை. எனது நடிப்பில் ஏதேனும் குறை இருந்தால் சொல்லுங்கள். திருத்திக்கொள்ள தயாராக இருக்கிறேன். ஆனால் சொந்த வாழ்க்கை பற்றி பேசுகிறார்கள். இவர்களின் பேச்சுகளை நான் பொருட்படுத்துவது இல்லை” என்று ஆவேசமாக கூறினார்.
நடிகை சமந்தா ரூத் பிரபு, தனது கர்ப்பகால உடற்பயிற்சி தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, இந்த…
‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ உள்ளிட்ட படங்களில் இணைந்து நடித்து ரசிகர்களின் விருப்பமான ஜோடியாக வலம் வந்த விஜய் தேவரகொண்டா…
நடிகர் சிலம்பரசன் டி.ஆர். நடிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில், கலைப்புலி எஸ். தாணு தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘அரசன்’.…
காமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருமை சேர்த்த பளுதூக்கும் வீரர் ராஜா முத்துபாண்டியை நடிகை சிம்ரன்…
கே.ஜி.எஃப் படங்களுக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை எதிர்கொண்டாலும், பாக்ஸ் ஆபிஸில் மாஸ்…
Mandaadi Official Teaser (Tamil) | Soori | Suhas | Mahima Nambiar | GV Prakash Kumar…