தீர்க்கதரிசி திரை விமர்சனம்

காவல் துறையின் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்து வருகிறார் ஸ்ரீமன். கட்டுப்பாட்டு அறைக்கு அடிக்கடி ஒரு நபர் தொடர்பு கொண்டு சென்னையில் சில குற்றச் செயல்கள் நடக்கப்போவதாக கூறுகிறார். அவர் கூறும்படி குற்றச் செயல்களும் நடக்கிறது. இதைப்பற்றி விசாரிக்க காவல் அதிகாரி அஜ்மல் களம் இறங்குகிறார். தீவிர விசாரணையில் ஈடுப்பட்டும் அஜ்மலின் குழுவால் இந்த செயல்களை செய்வது யார் என்று கண்டுப்பிடிக்க முடியாமல் திணறுகின்றனர்.

அந்த நபரை பொதுமக்கள் தீர்க்கதரிசி என்ற அழைக்கின்றனர். அதேபோல் அந்த நபர் ஊடகத்திற்கும் இந்த தகவலை சொல்கிறார். இதனால் காவல் துறையின் அலட்சியப்போக்கை ஊடகத்தினர் வெளிச்சம் போட்டு காட்டுகின்றனர். மறுபுறம் மக்கள் இதை யார் செய்வது என்ற குழப்பத்தில் இருக்கின்றனர். இறுதியில் யார் இந்த செயல்களை செய்கிறார்? தீர்க்கதரிசி இந்த தகவலை கொடுக்க காரணம் என்ன? காவல்துறை இந்த செயல்களை செய்தவர்களை கண்டுபிடித்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

காவல்துறை அதிகாரியாக வரும் அஜ்மல் கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்து பாராட்டுக்களை பெறுகிறார். சத்யராஜின் கதாபாத்திரம் நேர்த்தியாகவும், கதைக்கான பின்னணியை அழுத்தமாகவும் விவரிக்கிறது. இவரின் முதிற்சியான நடிப்பால் அனைவரையும் கவர்கிறார். காவல்துறை அதிகாரி அஜ்மலுக்கு கீழ் பணியாற்றும் துஷ்யந்த் மற்றும் ஜெய்வந்த் படத்திற்கு சிறப்பான தேர்வு. ஸ்ரீமன் அவருடைய பணியை சிறப்பாக கையாண்டுள்ளார். படத்தில் தோன்றும் பிற கதாப்பாத்திரங்கள் கூடுதல் பலம். படத்தின் நீரோட்தில் இருந்து திரைக்கதையை விலகாமல் அழகாக கையாண்டுள்ளனர் இயக்குனர்கள் பி. ஜி. மோகன் – எல். ஆர். சுந்தரபாண்டி. இருந்தாலும் திரைக்கதையில் சிறிது தொய்வு ஏற்படுகிறது.

படத்தில் சில தேவையற்ற காட்சிகளை தவிர்த்திருக்கலாம். கிளைமேக்ஸில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். ஜே. லக்‌ஷ்மனனின் ஒளிப்பதிவு சிறப்பு. பின்னணி இசையின் மூலம் விறுவிறுப்பை கூட்டியுள்ளார் இசையமைப்பாளர் ஜி.பாலசுப்ரமனியன். மொத்தத்தில் தீர்க்கதரிசி – புதிய முயற்சி.


theerkadarishi movie review
jothika lakshu

Recent Posts

விஜயாவிடம் பேசிய ஸ்ருதியின் அம்மா அப்பா, விஜயா சொன்ன வார்த்தை, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

ரவி மற்றும் ஸ்ருதிக்கிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.…

57 minutes ago

திவாகர் மற்றும் சபரி இடையே உருவான வாக்குவாதம்.. வெளியான முதல் ப்ரோமோ.!

இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

1 hour ago

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்.!!

மோர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.அதிலும் குறிப்பாக…

15 hours ago

நந்தினி கேட்ட கேள்வி, சூர்யா சொன்ன பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

15 hours ago

இந்த வாரம் வெளியேறப் போகும் போட்டியாளர் யார் என கேட்ட விஜய் சேதுபதி.. வெளியான மூன்றாவது ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு சீசன்கள்…

19 hours ago

விஜய் சேதுபதியின் கேள்விக்கு போட்டியாளர்களின் பதில்.. வெளியான இரண்டாவது ப்ரோமோ.!!

இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…

22 hours ago