‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’ படத்தின் பணிகள் பூஜையுடன் தொடக்கம்
நகைச்சுவைப் படங்களுக்கு எப்போதும் வரவேற்பு உண்டு என்பது தெரிந்ததே. அதன் பாதையில் உருவாகவிருக்கும் படம் பற்றிப் பார்ப்போம்..
பி.ஜே.கிஷோர் தயாரிப்பில், ஜெய் அமர்சிங் இயக்கத்தில் உருவாகும் படம் ‘தி மம்மி ரிட்டர்ன்ஸ்’. காமெடி கலந்த ஃபேமிலி படமாக இப்படம் உருவாகிறது. இதன் படப்பூஜையுடன் கூடிய பணிகள் சென்னையில் தொடங்கப்பட்டது.
இதில் படக்குழுவினருடன் இயக்குநர் விஷ்ணுவர்தன் மற்றும் அஹ்மத் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டார்கள்.
‘பல வருட கோமாவில் இருந்து மீண்டு வரும் தன் தாயை காப்பாற்ற தன் அம்மா வாழ்ந்த ‘1990-களின் உலகை தன் நண்பர்களுடன் இணைந்து உருவாக்குகிறான் மகன். அதில் நடக்கும் களேபரங்கள் தான் இப்படத்தின் கதை. முழுக்க காமெடி, எமோஷன் கலந்த கதையாக இப்படம் உருவாகவுள்ளது. இதில் கிருஷ்ணா, தேவதர்ஷினி, ஸ்வாதி, கின்ஸ்லி, லொள்ளு சபா மாறன் உள்பட பலர் நடிக்கவுள்ளார்கள்.
இதன் படப்பிடிப்பு சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெறவுள்ளது. இப்படம் குறித்து இயக்குநர் ஜெய் அமர் சிங் தெரிவிக்கையில், ‘நான் லண்டனில் ஃபிலிம் இண்ட்ஸ்டிடியூடில் படித்து விட்டு சென்னையில் இயக்குநர் அஹ்மத்திடம் ‘என்றென்றும் புன்னகை’ படத்தில் பணிபுரிந்தேன். ஆக்சன் படங்கள் அதிகமாக வரும் இன்றைய காலகட்டத்தில் ரசிகர்கள் காமெடி படங்களுக்கு ஏங்குகிறார்கள்.
எனக்கும் காமெடி படங்கள் தான் அதிகம் பிடிக்கும். எனவே தான் இந்தப்படத்தை முழுக்க முழுக்க ரசிகர்கள் சிரித்து மகிழும் படமாக வடிவமைத்துள்ளேன். ஒரு தாயை காப்பாற்ற மகன் என்னவெல்லாம் செய்கிறான் என்பது தான் படம், எமோஷனலான கதையை, மக்கள் வயிறு வலிக்க சிரிக்கும்படி சொல்லப்போகிறோம்’ என கூறியுள்ளார்.
Love Insurance Kompany Trailer | Pradeep Ranganathan | Anirudh | Vignesh Shivan | Krithi Shetty
Yenjaamiye Video Song | Manithan Deivamagalam | Selvaraghavan, Kushee Ravi | AK Prriyan
Nooru Sami Official Teaser | Vijay Antony | Swasika | Ajay Dhishan | Lijomol Jose…
கார் மெக்கானிக்காக இருக்கும் லெஜண்ட் சரவணன், தூத்துக்குடி பகுதியில் தனது மகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார். ஹார்பரில் வரும் கார்களுக்கு…
புறநகர் சென்னையில் உள்ள பெரிய அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் தம்பதியின் சிறுமி திடீரென மாயமாகிறாள். இந்த வழக்கை விசாரிக்க வரும்…
இலங்கையில் இந்திய அமைதிப்படையும் போராளிகளும் மோதிக்கொண்டிருக்கும் பதற்றமான காலகட்டத்தில், ஒரு சாதாரண குடும்பம் எளிமையாக நடத்த திட்டமிட்டிருந்த திருமணம் எதிர்பாராத…