The shooting of actor Rio's 'Ram In Leela' begins with a puja
நடிகர் ரியோவின் ‘ராம் இன் லீலா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது
டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரிக்கும் தனித்துவமான ரொமான்டிக் காமெடி படமான ‘ ராம் in லீலா’ வில் இணையும் ரியோ – வர்திகா ஜோடி
டிரைடன்ட் ஆர்ட்ஸ் மற்றும் ஐவா என்டர்டெயின்மென்ட் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஆர். ரவீந்திரன் மற்றும் சுதர்சன் ஆகியோர் இணைந்து தயாரிக்கும் புதிய ரொமான்டிக் காமெடி திரைப்படத்திற்கு’ ‘ராம் in லீலா’ என பெயரிடப்பட்டிருக்கிறது. சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவிற்கு ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி உள்ளிட்ட திரையுலக பிரபலங்கள் பலரும் வருகை தந்து படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
இயக்குநர் ராமச்சந்திரன் கண்ணன் இயக்கத்தில் தயாராகும் ‘ராம் in லீலா ‘ எனும் திரைப்படத்தில் ரியோ , வர்திகா, நயனா எல்சா, மா. கா. பா. ஆனந்த், சேத்தன், முனிஸ்காந்த், மாளவிகா அவினாஷ், தீபா வெங்கட், சண்டை பயிற்சி இயக்குநர் சூப்பர் சுப்பராயன் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கிறார்கள். மல்லிகார்ஜுன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு அங்கித் மேனன் இசையமைக்கிறார். சஞ்ஜெய் விஜய்ராகவன் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றும் இந்த திரைப்படம் – சமகால பார்வையாளர்களை ஈர்க்கும் வகையில் புத்துணர்ச்சியூட்டும் படைப்பாக உருவாகிறது.
தொழில்நுட்பக் குழு :
இயக்கம் : ராமச்சந்திரன் கண்ணன்
தயாரிப்பாளர்கள் : ஆர் ரவீந்திரன் & சுதர்சன்
தயாரிப்பு நிறுவனம் : டிரைடன்ட் ஆர்ட்ஸ் & ஐவா எண்டர்டெயின்மென்ட்
ஒளிப்பதிவு : மல்லிகார்ஜுன்
இசை : அங்கித் மேனன்
கிரியேட்டிவ் தயாரிப்பாளர் : சஞ்ஜெய் விஜய்ராகவன்
மக்கள் – சதீஷ் குமார் (S2 மீடியா)
விஜய்யின் 'ஜனநாயகன்' படத்தின் புதிய அப்டேட் விஜய்யின் கடைசிப்படமான 'ஜனநாயகன்' படத்தை ஹெச்.வினோத் இயக்கியுள்ளார். தற்போது இதன் இறுதிக்கட்டப் பணிகள்…
சிறை திரைப்படத்தை பற்றி நம்மிடம் பகிரிந்த Vikram Prabhu! விக்ரம் பிரபு நடித்திருக்கும் ‘சிறை’ அவருக்கு 25-வது திரைப்படம். சுரேஷ்…
ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் சந்தீப் கிஷன் நடிக்கும் 'SIGMA' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக வீடியோ வெளியிட்டது படக்குழு! விஜய்யின் கடைசிப்படமாக…
தங்கக் கடத்தல் வழக்கு.. நடிகை ரன்யாவுக்கு ஓராண்டு சிறை..! பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..! துபாயில் இருந்து கடந்த மார்ச்…
சென்னை சர்வதேச திரைப்பட விழா: சிறந்த நடிகருக்கான விருதை வென்ற சசிகுமார் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா, டிசம்பர் 11-ந்தேதி…
பராசக்தி படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலக்கி வருபவர்…