தி ரோட் திரை விமர்சனம்

நாயகி திரிஷா தனது கணவர் சந்தோஷ் பிரதாப் மற்றும் மகனுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மகனின் பிறந்தநாள் பார்ட்டிக்காக காரில் கன்னியாகுமரி செல்ல திட்டமிடுகிறார்கள். ஆனால் திரிஷா இரண்டாவது முறை கர்ப்பமானதால், கணவர் மற்றும் மகன் இருவர் மட்டும் காரில் டிரிப் செல்கிறார்கள்.செல்லும் வழியில் எதிர்பாராத விதமாக விபத்து ஏற்பட்டு கணவர் மற்றும் மகன் இருவரும் இறந்து போகிறார்கள். கணவர் இறந்த இடத்திற்கு செல்லும் திரிஷா, அந்த நெடுஞ்சாலையில் அடிக்கடி விபத்து ஏற்படுவதையும் சில விபத்துகள் மர்மமாக இருப்பதையும் அறிகிறார். மேலும் தன் கணவர் விபத்தில் சந்தேகம் இருப்பதையும் உணர்கிறார்.இறுதியில் தன் கணவரின் விபத்து எப்படி ஏற்பட்டது என்பதை திரிஷா கண்டுபிடித்தாரா? நெடுஞ்சாலையில் விபத்து ஏற்பட காரணம் என்ன? விபத்தின் பின்னணியில் என்ன நடக்கிறது என்பதே படத்தின் மீதிக்கதை.நடிகர்கள்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் திரிஷா, முழு கதையையும் தன் தோளில் தாங்கி இருக்கிறார்.

கணவருடன் பாசம், இறந்த பிறகு வருத்தம், மர்மத்தை கண்டு பிடிக்கும் ஆர்வம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். கணவர் இறந்த செய்தி கேள்விப்பட்டு நீண்ட தூரம் ஓடிச் சென்று அழும் காட்சியில் பரிதாபத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.ஆசிரியராக வரும் சபீரின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். சின்ன சின்ன அசைவுகளில் கூட கவனிக்க வைத்து இருக்கிறார். சிறிது நேரம் மட்டுமே வந்து சென்றிருக்கிறார் சந்தோஷ் பிரதாப். தோழியாக வந்து கவர்ந்து இருக்கிறார் மியா ஜார்ஜ்.இயக்கம்நெடுஞ்சாலையில் நடக்கும் விபத்து, திருட்டு, மர்மம் ஆகியவற்றை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அருண் வசீகரன். இரண்டாம் பாதி திரைக்கதை நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்து இருக்கலாம். அதுபோல் ஷபீரின் கதையை சுருக்கி இருக்கலாம். ஒரே நேரத்தில் இரண்டு கதைகளை மாற்றி மாற்றி காண்பித்து, கடைசியில் சிறிய குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறார்.

இசைசாம் சி.எஸ். இசையின் சத்தம் அதிகமாகவே இருந்தது. ஒரு சில இடங்களில் தேவைக்கு மீறியது போல் இருந்தது.ஒளிப்பதிவுவெங்கடேஷின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.படத்தொகுப்புஏ.ஆர்.ஷிவராஜ் படத்தொகுப்பு ரசிக்கலாம்.காஸ்டியூம்சைதன்யா ராவ் காஸ்டியூம் டிசைன் ஓகே.புரொடக்‌ஷன்ஏஏஏ சினிமா பிரைவெட் லிமிடெட் நிறுவனம் ‘தி ரோட்’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.”,

the-road movie review
jothika lakshu

Recent Posts

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

12 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

12 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

13 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

13 hours ago

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

19 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

19 hours ago