The one who got rid of my hesitation is Ajith ... the famous stunt master
உறியடி படத்தின் சண்டைக்காட்சிகள் மூலம் அனைத்து தரப்பினரின் பாராட்டுகளையும் பெற்றவர் விக்கி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து வீரம் படத்தில் இடம் பெற்ற அஜித்-அதுல் குல்கர்னி கிளைமாக்ஸ் சண்டைக் காட்சியை விக்கி அமைத்தார்.
இப்படத்தின் சண்டைக் காட்சியும் அதிக அளவில் பேசப்பட்டது. அடுத்து சூரரை போற்று படமும் இவருக்கு பாராட்டுகளை வாங்கி தரும் என்கிறார்கள்.
விக்கி அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘வீரம் படப்பிடிப்பில் அஜித் சாரை பார்த்தவுடன் புத்துணர்ச்சியும், தயக்கமும் ஏற்பட்டது. ஆனால் அவரோ என்னிடம் வந்து பேசி என்னுடைய தயக்கத்தைப் போக்கினார்.
என்னிடம் எப்படி வேண்டுமானாலும் வேலை வாங்கலாம் என்று அவர் கூறினார். என்னுடைய தயக்கத்தைப் போக்கி சண்டைக்காட்சி அமைத்துக் கொடுத்தேன். சண்டைக் காட்சிக்கு மிகவும் ஒத்துழைப்பு தந்த அஜித் சார், என்னை க்யூட் மாஸ்டர் என்று சொல்லிவிட்டுச் சென்றார். எனக்கு மிகவும் சந்தோஷத்தைக் கொடுத்தது.
வீரம் படத்தை அடுத்து, உறியடி 2, அருவி, ஜோக்கர், மாயவன், சிலுக்குவார்பட்டி சிங்கம், விழித்திரு, அண்ணனுக்கு ஜே, ராட்சசன், வால்டர், சத்ரு போன்ற படங்களுக்கும், இதைத்தவிர பரத் நடிக்கும் நடுவன், அதர்வா நடிக்கும் குருதி ஆட்டம் படத்திலும் பணியாற்றியிருக்கிறேன்.
ஒவ்வோரு சண்டைக்காட்சியையும் ஸ்டோரி போர்டு போட்டுதான் வேலை செய்வேன். அதுபோல் எந்த ஒரு சண்டைக் காட்சியை உருவாக்கும் போதும், ரிகர்சல் செய்து இப்படித்தான் திரையில் வரும் என்று இயக்குநருடன் காண்பிப்பேன். அது இயக்குனருக்கு பிடித்துப்போகவே சண்டைக் காட்சியை உருவாக்குவேன். இதுவே என்னுடைய மிகப்பெரிய பிளஸ் என்றார்.
தமிழ் சின்னத்திரைகள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வெறும் வயிற்றில் கருவேப்பிலை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்றை பிக் பாஸ் இந்த நிகழ்ச்சி தற்போது 8 சீசன்கள்…
இட்லி கடை படத்தின் 5 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ. அன்பு…