Latest Tamil cinema News
ஆன்மீகம்

காளியும், தேவியும் அவதரித்தது எப்போது? தெரிந்து கொள்ளலாமா?

# பெண் தெய்வ வழிபாடு என்பது காலம் காலமாகவே பிரசித்து பெற்று வந்துள்ளது. இதற்கு சிலப்பதிகாரம் போன்ற பல இலக்கிய பதிவுகள் உள்ளன.

அதில் காளி என்றும், தேவி என்றும், வணங்கும் முறை என்பது பக்தர்களின் வாழ்க்கை சூழலுக்கு ஏற்ற வகையில் உருவானதாக தெரிகிறது.

# வாழ்க்கையும் தெய்வமும்:

வேட்டை சமூகத்தால் வழிபடப்பட்ட தெய்வம், கொடூரமான, ஆற்றல்மிக்க, கருமை நிறம் கொண்ட காளி.

வேட்டை சமூகம் மறைந்து வேளாண் சமூகம் வளர்ந்த காலத்தில் சாந்த வடிவாக தெய்வீக தோற்றத்தில் தோற்றுவிக்கப்பட்டவள் தேவி.

# தோற்றங்கள்:
காளிக்கும் தேவிக்கும் சில முரண்பாடுகள் உள்ளன. காளி என்பவள் தலைவிரிகோலமாக, நாக்கை வெளியே நீட்டிய நிலையில் ஒரு கையில் அரிவாளும், மறுகையில் வெட்டப்பட்ட தலையும் ஏந்தியபடி கொடூரமான உருவத்துடன் காணப்படுவாள்.

# ஆனால் தேவியோ மன்னனின் மகளாக, சிவபெருமானின் மனைவியாக, விநாயகர் முருகனுக்கு தாயாக, குடும்ப உறவுகள் கொண்ட அமைதியான பெண்ணாக காட்டப்படுகிறாள்.

இவை அனைத்துமே மக்களின் வாழ்க்கை சூழல் இருக்கும் பண்பாட்டிற்கும் ஏற்ப உருவாக்கப்பட்டு வழிபட்டதாக தெரிகிறது.

Related posts

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

‘பிச்சை’க்கும், ‘பிக்ஷை’க்கும் உள்ள வித்தியாசத்தை தெரிந்து கொள்ளலாமா?.

user

நாளை ஆடி பதினெட்டாம் பெருக்கு – இவற்றை மறக்காமல் செய்து அற்புதமான பலன் பெறுங்கள்

user