“அந்த சிறுவன் கண்ட கனவு” – ‘ரஜினி 173’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு“

“அந்த சிறுவன் கண்ட கனவு” – ‘ரஜினி 173’ இயக்குநர் சிபி சக்கரவர்த்தி நெகிழ்ச்சி பதிவு“

சிவகார்த்திகேயன் நடித்த ‘டான்’ படத்தின் வெற்றியால் கவனம் ஈர்த்தவர் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி.
நீண்ட எதிர்பார்ப்புக்குப் பிறகு கமல்ஹாசன் தயாரிக்குfjmjjம் ‘ரஜினி 173’ படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்பது அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இயக்குநர் சிபி சக்கரவர்த்தி தனது எக்ஸ் பக்கத்தில், தனக்குக் கிடைத்த வாய்ப்பு குறித்து நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், ‘ஒரு சிற்றூரில் ஒரு சின்னஞ்சிறு பையன் இருந்தான். அவனது பெரிய கனவு என்றாவது ஒரு நாள் ‘சூப்பர் ஸ்டாரை’ நேரில் கண்டு அவருடன் ஒரு புகைப்படம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதே. அந்த விருப்பமே அவனை சினிமா நோக்கி செலுத்தியது. அந்த உந்துதலால் அவனது கனவு ஒரு நாள் நிறைவேறியது.

ஆனால், அவனது ஆசைகள் அந்த புகைப்படக் கனவோடு நிற்கவில்லை. தனது ஆதர்ச நடிகரை; சூப்பர் ஸ்டாரை வைத்து ஒரு படம் இயக்க வேண்டும் என்ற ஆசையை துளிர்க்கச் செய்தது. ஒருநாள் அதற்கு மிக நெருக்கத்தில் வந்த அவன், அந்த வாய்ப்பை இழந்தான்.

இருந்தாலும், அவன் மனம் தளரவில்லை. என்றேனும் அது நிச்சயம் நிறைவேறும் என்று நம்பினான். அந்த நாள் இந்த நாள்தான். ‘தலைவர் 173’ நாள்.

தலைவர் சொல்லிய வார்த்தைகள் எனக்கு இப்போது நினைவுக்கு வருகின்றன. ‘கனவுகள் மெய்ப்படும்’; ‘அற்புதங்கள் நிகழும்’ என்று தலைவர் சொல்வார்!

சில நேரங்களில் வாழ்க்கை நம் கனவுகளுக்கு அப்பால் சென்றுவிடுகிறது. நம் கனவுகளைக் காட்டிலும் மிகப்பெரியது நடைபெறுகிறது. அப்படித்தான் சூப்பர் ஸ்டார் படத்துக்கு உலகநாயகன் கமல், மகேந்திரன் ஆகியோர் தயாரிப்பாளர்களாக அமைந்துள்ளனர். அதற்காக நன்றியுடன் இருப்பேன்.

நீங்கள் எல்லோரும் என் மீது வைத்த நம்பிக்கையை நிறைவேற்ற எனது இதயத்தையும், ஆன்மாவையும் செலுத்தி உழைப்பேன் என்று உறுதி கூறுகிறேன்’ என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, இன்று காலை 11 மணியளவில், ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் ரஜினி 173 படத்தின் இயக்குநர் சிபி சக்கரவர்த்தி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.

“The dream that the boy had” – ‘Rajini 173’ director Sibi Chakravarthy’s resilience record
dinesh kumar

Recent Posts

Beep Tamil Trailer

Beep Tamil Trailer | Raaghav, Yamini, Prerna, Priya, Nithish | Crime Drama | Mind Bending…

14 hours ago

Arugey Arugey Lyrical Video

Arugey Arugey Lyrical Video | I'm Game | Dulquer Salmaan, Kayadu Lohar | Armaan Malik,…

14 hours ago

டி.சி திரைப்பட விமர்சனம்

தேவதாஸ், சந்திரா ஆகிய பெயர்களின் சுருக்கமே ‘டி.சி’. கேங்ஸ்டராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், தனது கூட்டாளிகளுடன் இணைந்து போலீசாரின்…

2 days ago

டேர் டெவில் படப்பிடிப்பு தொடங்கும் முன்பே ரூ.180 கோடி வியாபாரமா?

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், நடிப்புடன் கார் பந்தயத்திலும் கவனம் செலுத்தி வருகிறார். கடந்த ஆண்டு ஆதிக் ரவிச்சந்திரன்…

2 days ago

இளம் கிரிக்கெட் வீரருடன் காதலா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த மிருணாள் தாகூர்!

‘சீதா ராமம்’, ‘ஹாய் நானா’ உள்ளிட்ட படங்கள் மூலம் பிரபலமான நடிகை மிருணாள் தாகூர், இந்திய இளம் கிரிக்கெட் வீரர்…

2 days ago

சம்பளம் மட்டுமல்ல… செல்வாக்கிலும் கெத்து! இந்தியாவின் டாப் 10 நடிகைகள்!

திரையுலக நட்சத்திரங்களின் சம்பளம், சொத்து மதிப்பு, பிராண்ட் மதிப்பு, ஆடம்பர வாழ்க்கை முறை உள்ளிட்டவை குறித்து ரசிகர்கள் மத்தியில் எப்போதும்…

2 days ago