thangalaan-movie-update viral
“இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தங்கலான்’. இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடித்துள்ளனர். ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார்.
இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி மற்றும் டீசர் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. தங்கலான் போஸ்டர்அதன்படி, ‘தங்கலான்’ திரைப்படம் ஜனவரி 26-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தின் டீசர் நவம்பர் 1-ஆம் தேதி வெளியாகும் என போஸ்டரை பகிர்ந்துள்ளது. இந்த போஸ்டரை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். “,
Ravana Tandavam Song | Ramayana | Ranbir, Yash | Namit M, Nitesh T | AR…
Patta Sarakku Lyrical Video - INK Movie | Anand Babu | Aishwarya | Chytanya Sankaran…
Ex Reunion Day Official Teaser | S Siva Krishna | Sterlin Nithya | SR Prabu
தமிழ்த் திரையுலகில் 25-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் பாடல்களைப் பாடி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் பின்னணிப் பாடகி ஜனனி. ‘அசல்’ படத்தின்…
‘லப்பர் பந்து’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய திரைப்படம் தற்காலிகமாக ‘D56’…
தென்னிந்தியத் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகைகளில் ஒருவரான மமிதா பைஜு, தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து இணையத்தில் பரவிய…