thalapathy-68 movie jyothika-vinema-news-trending
தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் வெளியான வாரிசு படத்தை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியாக உள்ளது.
இதனைத் தொடர்ந்து தளபதி விஜய் அடுத்ததாக வெங்கட் பிரபு இயக்கத்தில் ஏஜிஎஸ் என்டர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாக உள்ள தளபதி 68 படத்தில் நடிக்க உள்ளார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்க இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
மேலும் 360 டிகிரி கேமராவுடன் வெளிநாட்டில் விஜய்க்கு டெஸ்ட் லுக் போட்டோ ஷூட் நடைபெற்றது. அப்பா மகன் என விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கிறார். இதனால் அப்பா விஜய்க்கு ஜோடியாக ஜோதிகாவை நடிக்க வைக்க பட குழு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது.
ஆனால் அம்மா வேடத்தில் நடிக்க முடியாது என்று நோ சொல்லி உள்ளார் ஜோதிகா. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகை சினேகாவிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னதாக வசீகரா படத்தில் சினேகா விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.
20 வருடங்களுக்குப் பிறகு தற்போது மீண்டும் இருவரும் ஜோடி சேர இருப்பதாக வெளியாகி உள்ள தகவல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இன்னொரு நாயகியாக மகன் விஜய்க்கு ஜோடியாக நடிகை பிரியங்கா மோகன் நடிக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
காந்தாரா 2 படத்தின் 10 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…