Thalapathy 65 Update - Will Rashmika Mandana pair up with Vijay
கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார். அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா. பாலிவுட்டிலும் நடித்து வருகிறார்.
அதேபோல், தமிழில் பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘சுல்தான்’ படம் மூலம் அறிமுகமாகி உள்ளார். இப்படி பல்வேறு மொழி படங்களில் பிசியாக நடித்து வரும் ராஷ்மிகா, ஏராளமான நிகச்சிகளில் தனக்கு பிடித்த நடிகர் விஜய் என்றும் அவருக்கு ஜோடியாக நடிக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார்.
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க தீவிர முயற்சி எடுத்தார். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு மாளவிகா மோகனன் வசம் சென்றது.
இந்நிலையில், தற்போது நெல்சன் இயக்க உள்ள ‘தளபதி 65’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகா ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடிக்க உள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் தற்போது ராஷ்மிகாவை படக்குழுவினர் ஒப்பந்தம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
விஜய்யின் ‘தளபதி 65’ படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக, நடிகை ராஷ்மிகா, ஒரு தெலுங்கு படத்தில் இருந்து வெளியேறி விட்டதாகவும், அதையடுத்து அந்த பட வாய்ப்பை பூஜா ஹெக்டே கைப்பற்றி விட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அக்டோபர் 25 & 26, 2025 | பல்லடம் – கிளாசிக் சிட்டி பல்லடம் கிளாசிக் சிட்டியில் நடைபெறவிருக்கும் “கொங்குநாடு…
குக் வித் கோமாளி ஸ்ருதிகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வீடியோவை அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில்…
காந்தாரா 2 படத்தின் 9 நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரிஷப் ஷெட்டி நடிப்பில் வெளியான திரைப்படம்…
இட்லி கடை படத்தின் 10 நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
அருண் இடம் சண்டை போட்டுவிட்டு சீதா வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…